ரூ 4 கோடி சம்பள பாக்கி.; பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு

ரூ 4 கோடி சம்பள பாக்கி.; பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ம் ஆண்டில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வெளியானது.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.

இந்த படம் சுமாராகவே ஓடியது.

இந்த நிலையில் இந்த மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஞானவேல்ராஜா சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை அவர் தயாரிக்கும் படங்களில் முதலீடு செய்யத் தடை தேவை.

மேலும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடுகளை தடை செய்ய வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தனக்கு சம்பள பாக்கி ரூ.4 கோடி தர வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan case filed against famous producer?

வசூலில் அலறவிடும் ‘RRR’..; ரூ 500 கோடி ஹாட்ரிக் அடித்த ராஜமௌலி

வசூலில் அலறவிடும் ‘RRR’..; ரூ 500 கோடி ஹாட்ரிக் அடித்த ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் கடந்த வாரம் மார்ச் 25ல் உலகமெங்கும் வெளியானது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கிய இந்த படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய்தேவ்கான், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மரகதமணி இசையமைத்திருத்தார்.

இப்படம் ரிலீசான முதல் நாள் முதலே வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்த படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் அவர்கர் ராஜமௌலியை மகா ராஜா மவுலி என பாராட்டியிருந்தார்.

மூன்று நாட்களில் RRR படம் 500 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதன் 3 படங்களின் மூலம் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார் ராஜமௌலி.

இவர் இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 1’ படத்தின் மொத்த வசூல் 710 கோடியை எட்டியது. பின்னர் வெளியான ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் 1600 கோடியை வசூலித்தது என்று கூறப்பட்டது.

தெலுங்கில் தயாரான ஆர்ஆர்ஆர் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகமெங்கும் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 550 தியேட்டர்களில் இந்த படத்தை லைகா வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பாகுபலி 2’ படங்களின் வசூலை ஆர்ஆர்ஆர் படம் முறியடிக்குமா.? என்பதை காத்திருந்து பார்ப்போம்..

RRRMovie has crossed 500 crores worldwide

மீண்டும் வரும் சிரிப்பழகி.; கார்த்தியுடன் இணையும் அஜித்-சூர்யா பட நாயகி

மீண்டும் வரும் சிரிப்பழகி.; கார்த்தியுடன் இணையும் அஜித்-சூர்யா பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்துடன் ‘தீனா’, சூர்யாவுடன் ‘நந்தா’, ‘உன்னை நினைத்து’, விக்ரம் உடன் ‘தில்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் லைகா.

தன்னுடைய அழகான சிரிப்பால் ரசிர்களை கவர்ந்த நடிகை இவர்.

மெஹ்தின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு 2 ஆண் குழந்தைகளுக்கு தாய் ஆனார்.

இந்த நிலையில், தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் லைலா.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம் லைலா.

இதில் நாயகிகளாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லட்சுமண் குமார் தயாரித்து வருகிறார்.

Ajith and Suriya film heroine joins Karthi’s next

‘லைகர்’-ஐ தொடர்ந்து மீண்டும் விஜய்தேவரகொண்டா – பூரிஜெகன்நாத் கூட்டணி

‘லைகர்’-ஐ தொடர்ந்து மீண்டும் விஜய்தேவரகொண்டா – பூரிஜெகன்நாத் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

இவர்கள் தற்போது பன் மொழிகளில் உருவாகிய இந்தியா படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக லைகர் வெளியாகவுள்ளது.

தற்போது இவர்களின் புதிய படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் பல வெடிபொருள் ஆயுதங்களுன் படு ஸ்டைலீஷாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில்: 14:20 மணிநேரம்- 19.0760° N, 72.8777° E – அடுத்த மிஷன் வெளியீடு 29-03-2022. என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது, நாளை ஒரு உற்சாகமான அறிவிப்பு வெளிவரவுள்ளது.

மிகப்பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படைப்பின் மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Vijay Deverakonda Puri Jagannadhs Next Mission Launch

ஆஸ்கரை வென்ற வில் ஸ்மித்-ஜெசிகா.; 6 விருதுகளை அள்ளியது ‘டூன்’.. முழுத்தகவல்கள் இதோ…

ஆஸ்கரை வென்ற வில் ஸ்மித்-ஜெசிகா.; 6 விருதுகளை அள்ளியது ‘டூன்’.. முழுத்தகவல்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகளவில் சினிமா துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது.

சினிமா உலகில் உலகளவில் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது ஆஸ்கர் விருதுகள். எனவே இந்த விருதை அடைய வேண்டும் என பல கலைஞர்களுக்கு ஒரு லட்சியம் இருந்துக் கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் 94வது இந்தாண்டிற்கான (2022) ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார்.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் ஸ்மித்தும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை “ஜெசிகா சேஸ்டெய்ன்” தட்டிச் சென்றனர்.

சிறந்த படமாக கோடா தேர்வானது. இதில் டூன் படம் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது.

The 94th Academy Awards | 2022

Winner : Will Smith – King Richard
Winner : Jessica Chastain – The Eyes of Tammy Faye
Actor in a Supporting Role
Winner
Troy Kotsur
CODA

Actress in a Supporting Role
Winner
Ariana DeBose
West Side Story

Animated Feature Film
Winner
Encanto
Jared Bush, Byron Howard, Yvett Merino and Clark Spencer

Cinematography
Winner
Dune
Greig Fraser

Costume Design
Winner
Cruella
Jenny Beavan

Directing
Winner
The Power of the Dog
Jane Campion

Documentary (Feature)
Winner
Summer of Soul (…Or, When the Revolution Could Not Be Televised)
Ahmir “Questlove” Thompson, Joseph Patel, Robert Fyvolent and David Dinerstein

Film Editing
Winner
Dune
Joe Walker

International Feature Film
Winner
Drive My Car
Japan

Makeup and Hairstyling
Winner
The Eyes of Tammy Faye
Linda Dowds, Stephanie Ingram and Justin Raleigh

Music (Original Score)
Winner
Dune
Hans Zimmer

Music (Original Song)
Winner
No Time To Die
from No Time to Die; Music and Lyric by Billie Eilish and Finneas O’Connell

Best Picture
Winner
CODA
Philippe Rousselet, Fabrice Gianfermi and Patrick Wachsberger, Producers

Production Design
Winner
Dune
Production Design: Patrice Vermette; Set Decoration: Zsuzsanna Sipos

Short Film (Animated)
Winner
The Windshield Wiper
Alberto Mielgo and Leo Sanchez

Short Film (Live Action)
Winner
The Long Goodbye
Aneil Karia and Riz Ahmed

Sound
Winner
Dune
Mac Ruth, Mark Mangini, Theo Green, Doug Hemphill and Ron Bartlett

Visual Effects
Winner
Dune
Paul Lambert, Tristan Myles, Brian Connor and Gerd Nefzer

Writing (Adapted Screenplay)
Winner
CODA
Screenplay by Siân Heder

Oscars 2022: Here’s complete list of winners

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தியும் இல்ல ராஷ்மிகாவும் இல்ல..; பாலிவுட் நடிகையாம்.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தியும் இல்ல ராஷ்மிகாவும் இல்ல..; பாலிவுட் நடிகையாம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பீஸ்ட்’ படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ள ‘தளபதி 66’-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய்.

இந்த படத்தின் சூட்டிங்கை ஏப்ரலில் தொடங்கவுள்ளனர்.

இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க தமன் இசைமையக்கிறார்.

பேமிஃலி சென்டிமென்ட் உடன் உருவாகும் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக்கவுள்ளனர்.

இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என கூறப்பட்டது. அதன்பின்னர் கீர்த்தி சுரேஷ் அல்லது கீர்த்தி ஷெட்டி நடிப்பார் எனவும செய்திகள் வந்தன.

தற்போது பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் என்பவர் நாயகியாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

Bollywood actress to pair up with Vijay for Thalapathy 66?

More Articles
Follows