தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிறு சிறு கேரக்டர்களில் நடித்தாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் அப்புக்குட்டி.
‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நாயகனாக நடித்து சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றவர் இவர்.
இதனிடையில் வேதாளம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் இவரது கெட்டப்பை மாற்றி நிறைய புகைப்படங்களை எடுத்தார்.
அப்போது அப்புக்குட்டியின் நிஜப்பெயரான சிவபாலன் என்ற பெயரிலேயே நடிக்க சொன்னார் அஜித்.
அதன்படி தற்போது ‘காகித கப்பல்’ என்ற படத்தில் சிவபாலன் என்ற பெயரில் ஹீரோவாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக தில்லிஜா என்பவர் நடிக்கிறார்.
இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், பரோட்டா முருகேசன், எலி ராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பிரசன்னா இசையமைக்க, வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்.
எஸ்.சிவராமன் இயக்குகும் இப்படத்தை எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல் சார்பில் வி.ஏ.துரை தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…
“குப்பை பொறுக்கிற வேலையாக இருந்தாலும், அதை மக்களுக்கு செய்யும் சேவையாகவும் நினைக்கிறான் நாயகன்.
இவரது நல்ல குணத்தை அறிந்த நாயகி இவரையே காதலித்து மணந்து கொள்கிறாள்.
ஆனால் திருமணத்துக்கு பிறகு நாயகிக்கு ஏற்பட்ட ஆசையால் நாயகனின் வாழ்க்கை காகித கப்பலாக மாறுகிறது. அது எப்படி? என்பதை சுவாரஸ்யமாக கூறியிருக்கிறோம்” என்றார்