ஒருவனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை ‘ஜோ’ சொல்லும் – சீனு ராமசாமி..

ஒருவனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை ‘ஜோ’ சொல்லும் – சீனு ராமசாமி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது.

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பாளர் டி. அருள் நந்து பேசியதாவது…

“15 வருடங்களாக சினிமா செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கனவு. அதை 2023 செய்யக் காரணம் ஏகன்தான். அவர் எங்களிடம் வந்து ரியோவிடம் ஒரு கதையுள்ளது அதை செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.

ரியோ கதை சொன்னது மிகவும் பிடித்திருந்தது. உடனே படம் பண்ணலாம் என முடிவெடுத்து விட்டோம். படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். படத்தை நான் இதுவரை எட்டு முறை பார்த்துள்ளேன்.

ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதிதாக உள்ளது. படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையுள்ளது”.

தயாரிப்பாளர் மேத்யூ..

” படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்றால் படம் பார்க்கக் கூடியவர்களுக்கு ஏதேனும் ஐந்து, பத்து நிமிடங்கள் தங்களுடன் கனெக்ட் செய்து கொள்ளும்படியான மொமெண்ட் நிச்சயம் இருக்கும். முதல் பாதி முழுவதுமே எனக்கு அப்படித்தான் இருந்தது. எல்லாருமே கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்”.

பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணன், “இளமை ததும்ப ததும்ப இந்தப் படத்தைக் கொடுத்துள்ளோம். ரியோ நேர்த்தியான நடிப்பைக் கொடுத்துள்ளார். படம் நன்றாக உள்ளது”.

பாடகர் ஆண்டனி தாசன்..

“ரியோவுக்காக இரண்டாவது முறை பாடியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களைப் போலவே நானும் இந்தப் பாடலைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் சித்துகுமாருக்கும், பாடலாசிரியர் கிரண் வரதனுக்கும் நன்றி. ரசிகர்களுக்கும் பாடல் நிச்சயம் பிடிக்கும்”.

கவின்..

ரியோவின் உழைப்பு இந்த படத்தில் அதிகமாக இருக்கிறது. என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”.

ஆர்.ஜே. இளங்கோ குமரன்…

“ஹீரோவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அன்பிற்காக நான் உள்ளே நுழைந்த படம் இது. ஆனால், படத்திற்குள் வந்த பிறகு தான் தெரிந்தது இந்த படமே அன்பால் ஆனது என்று.

அதனால், 24ஆம் தேதி ‘ஜோ’ படம் பார்த்து உங்கள் அன்பைக் கொடுங்கள்”.

இயக்குநர் சீனு ராமசாமி..

“இந்தப் படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குநர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை.

தயாரிப்பாளர் அருள் நந்து மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்த படத்தை என்னை பார்க்க சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரோமோஷன்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது.

படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் ‘ஜோ’. இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன்.

ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்” என்றார்.

நடிகர் தீனா…

” ரியா அண்ணாவின் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ அவருடன் எனக்குப் பழக்கம். அவர் கூப்பிடவில்லை என்றாலும் இந்த நிகழ்வுக்கு நானே வருவேன். இந்த படத்தில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

நடிகர் புகழ்..

“படத்தில் நடித்தோமோ போனோமோ என்றில்லாமல் உங்கள் பட நிகழ்வுக்கு நீங்களே ஹோஸ்ட் செய்து கொண்டிருப்பது பெரிய விஷயம். உன்னுடைய உழைப்புக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய இடத்தை போய் சேரும்”.

How Love plays in youth life says Seenu Ramasamy

திரிஷா சர்ச்சை : சொம்பு தூக்கிகளோட பருப்பு வேகாது.. பொழப்ப பாருங்க – மன்சூர் அலிகான்

திரிஷா சர்ச்சை : சொம்பு தூக்கிகளோட பருப்பு வேகாது.. பொழப்ப பாருங்க – மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லியோ’ படத்தில் த்ரிஷாவுடன் எனக்கு பெட்ரூம் சீன்கள் இல்லை, ரேப் சீன் இல்லை.. திரிஷாவை கண்ணில் காட்டவில்லை என ஆபாசமாக பேசி இருந்தார் மன்சூர் அலிகான்.

இதற்கு த்ரிஷா முதல் நடிகர் சங்கம் வரை கடும் கண்டனத்தை தெரிவித்து நிலையில் இதற்கு தன்னுடைய பாணியில் நக்கலாக்க விளக்கம் அளித்துள்ளார் மன்சூர் அலிகான்.

நடிகை திரிஷா சர்ச்சைக்கு,
மன்சூர் அலிகான் விளக்கம்!
——————————————————
‘அய்யா’ பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக.

உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க.

பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா.

திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் MLA. M.P. மந்திரின்னு ஆயிட்டாங்க.

பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன்.

இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும்.. 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும்.. சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு… பொழப்ப பாருங்கப்பா….
நன்றி!

— மன்சூர் அலிகான்

Mansoor Alikhan explains about Trisha issue

கலைஞர் 100 விழா : ரஜினி – கமலை அழைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்

கலைஞர் 100 விழா : ரஜினி – கமலை அழைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலகட்டங்களில் அடிக்கடி அவர்களை பாராட்டி திரைத்து உலகம் சார்பில் பல விழாக்கள் நடைபெற்றது உண்டு.

ஒரு கட்டத்தில் இந்த விழாக்களை சம்பந்தப்பட்ட கட்சிகளே முன்னெடுப்பதாகவும் திரை கலைஞர்களை வற்புறுத்தி வரவழைப்பதாகவும் கூறப்பட்டது. எனவே சர்ச்சைகள் உருவானது.

இதனையடுத்து சில ஆண்டுகளாக இது போன்ற விழாக்களை திரையுலகமே எடுக்க முன் வரவில்லை.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் உள்ள நிலையில் விரைவில் கலைஞர் கருணாநிதியின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ‘கலைஞர் 100’ என்ற விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் எடுக்க முன்வந்துள்ளனர்.

அதன்படி இந்த விழாவுக்கு அழைப்பிதழை ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனிடம் விழா குழுவினர் அளித்தனர். அவர்களும் நிச்சயம் விழாவில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர்.

கமலஹாசன்

Rajini and Kamal invited by Producers for Kalaignar 100

கூடுதல் தகவல்..

இந்த விழா குறித்து அருவா சண்டை என்ற படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான ராஜா என்பவர் தெரிவித்துள்ளதாவது…

காலை வணக்கம்..

*தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 2023 – 2026*

என் அன்பு சொந்தங்களே.. சகோதர சகோதரிகளான தயாரிப்பாளர்களே..

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நமது சங்கம் சார்ந்து நடந்த ஒரு நிகழ்ச்சி பெருத்த ஏமாற்றத்தை நமது சங்கத்திற்கும் சகோதர சகோதரிகளான தயாரிப்பாளர்களுக்கு கொடுத்ததை நாம் மறந்துவிட முடியாது..

ஆனால் தற்போது *நமது தலைமை எடுத்திருக்கும் கலைஞரின் நூறாண்டு விழா நிகழ்ச்சி* ஒரு மாபெரும் எழுச்சிமிகு நிகழ்ச்சியாக நடக்க வேண்டும்.

நமது சங்கம் நடத்தியாக வேண்டும் என முன்னெடுத்து இருக்கிறது.. இதன் மூலமாகவது நமது தயாரிப்பாளர்களுக்கும் சினிமா கலை உலகிற்கும் நன்மைகள் கிடைக்கும் என காத்திருக்கிறது நமது சங்கம்.

எனவே இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து இருக்கும் *நமது சங்கத்திற்கும்.. சங்க நிர்வாகிகளுக்கும்* அனைத்து சகோதர சகோதரிகளான தயாரிப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவிகள் பல புரிந்து.. *இந்நிகழ்ச்சியை நமது நாடே திரும்பிப் பார்க்கும்* வண்ணம் செய்ய வேண்டும்..

எனவே அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நல்குமாறு மிகப் பணிவுடன்.. என்றுமே தயாரிப்பாளர்கள் நலனில் அக்கறை கொண்ட… *உங்களது சகோதரனாக உங்களில் ஒருவனாக.. உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி அன்புடன்
*V ராஜா
தயாரிப்பாளர் மற்றும் நடிகர்

Aruva Sanda Actor

திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான்.; நடிகர்கள் முதல் சங்கம் வரை கடும் கண்டனம்

திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான்.; நடிகர்கள் முதல் சங்கம் வரை கடும் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் மட்டும் வில்லன் அல்ல சில நேரங்களில் நிஜத்திலும் வில்லனாகவே நினைத்து பல சர்ச்சையான கருத்துக்களை பேசி வருபவர் நடிகர் மன்சூர் அலிகான்.

கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை திரிஷாவை குறித்து ஆபாசமாக பேசியுள்ளார். அந்த பேட்டியில்..

“இப்போதெல்லாம் வில்லனுகளுக்கு கற்பழிப்பு காட்சி இல்லை. ‘லியோ’ படத்தில் திரிஷா நடிக்கிறார் என்றதும் எனக்கும் அவருக்கும் படுக்கையறை காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். ஒரு காலத்தில் குஷ்பூவை தூக்கி கட்டிலில் போட்டு.. ரோஜாவை தூக்கி கட்டில் போட்டேன்.. அதுபோல த்ரிஷாவுடன் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன்.

ஆனால் அவரை சந்திக்கவே முடியவில்லை. காட்சிகள் இல்லை என பேசி இருந்தார்.

இதற்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.. “நல்ல வேளை இப்படி ஆபாசமாக பேசும் ஒருவருடன் எனக்கு காட்சிகள் இல்லை. இனி எந்த காலகட்டத்திலும் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என த்ரிஷா ஆவேசமாக குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது நடிகை திரிஷாவுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. ‘லியோ’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூருக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதுபோல தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Mansoor Alikhan vs Trisha Big controversy in kollywood

விஜய் – கங்கணா சூட்டிங் ஸ்பாட்டில் திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்

விஜய் – கங்கணா சூட்டிங் ஸ்பாட்டில் திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விஜய்.

தலைவா, தெய்வத்திருமகள், மதராசப்பட்டினம், சைவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இவர்.

மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இதில் கங்கனா ரனாவத் அவர்கள் ஜெயலலிதா வேடத்தில் நடித்திருந்தது தங்களுக்கு நினைவு இருக்கலாம்.

இந்த நிலையில் மீண்டும் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் நாயகனாக மாதவன் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிலையில் ‘தலைவர் 170’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் அதே கெட்டப் உடன் விஜய்யின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து கங்கனா ரனாவத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தலைவருடன் போட்டோ என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஹிந்தி படம் ஒன்றில் மாதவன் மற்றும் கங்கனா இணைந்து தனு வெட்ஸ் மனு என்ற 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இணைந்து நடித்திருந்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Madhavan Kangana Ranaut new Film has been Kick started in Kollywood

40 வயதில் 20 வருட சினிமா.; நயன்தாரா-வின் டாப் 12 IMDb லிஸ்ட்

40 வயதில் 20 வருட சினிமா.; நயன்தாரா-வின் டாப் 12 IMDb லிஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் இவருக்கே முதலிடம்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ்நாட்டில் தன் வெற்றி கொடியை பறக்க விட்டவர் நயன்தாரா.

கமல் தவிர ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா வரை ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

இயாக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர் 2 குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தார்.

தற்போது பெர்ப்யூம் மற்றும் காஸ்மெட்டிக் வியாபாரங்களை வெளிநாடுகளில் தொடங்கியுள்ளார் நயன்தாரா.

தற்போது 40 வயதை நெருங்குகிறார் இவர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணபூரணி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்த டாப் 12 படங்களை வெளியிட்டுள்ளது IMDb நிறுவனம் இதோ அந்த லிஸ்ட்..

தனி ஒருவன், அறம், கோலமாவு கோகிலா, ஜவான், சிவாஜி (ஒரு பாடல்), ராஜா ராணி, யாரடி நீ மோகினி, இமைக்கா நொடிகள், கஜினி உள்ளிட்ட படங்களும் இதில் அடங்கும்.

1. Thani Oruvan – 8.4
2. Super – 8.1
3. Aramm – 7.7
4. Raja Rani – 7.6
5. Ghajini – 7.5
6. Maya – 7.5
7. Sivaji – 7.5
8. Manassinakkare – 7.5
9. Yaaradi Nee Mohini – 7.3
10. Imaikkaa Nodigal – 7.3
11. Kolamavu Kokila – 7.3
12. Billa – 7.3

Nayanthara Turns 40 – 12 highest-rated titles of Nayanthara on IMDb

More Articles
Follows