தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ஹிந்தி படம் லட்சுமி பாம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இதில் ரஜினியின் 2.0 பட வில்லன் அக்சய்குமார் நடித்துள்ளார்.
தற்போது மீண்டும் நடிகராக தமிழுக்கு திரும்பியுள்ளார்.
இவர் நடிக்கும் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
முதன்முறையாக லாரன்ஸ் படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.
படத்தின் இயக்குனர் யார்? ஒருவேளை லாரன்ஸ் இயக்குகிறாரா?
மற்ற விபரங்களை வருகிற அக்டோபர்.,29ல் படக்குழு அறிவிக்கவுள்ளது.
Raghava Lawrence’s next film update on october 29