தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2016 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு பிரிமீயர் லீக்’ கிரிக்கெட் போட்டி’ விரைவில் நடைபெறவுள்ளது.
இதில் ஒரு அணியான ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த அணியின் இயக்குனர் தயாநிதி அழகிரி, ‘மதுரை மைக்கல்’ சிலம்பரசன், அனிருத், அணியின் உரிமையாளர் ரபிஃக், இந்திய அணியின் முன்னாள் வீரர் எல். சிவராமகிருஷ்ணன், ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் பாடலை இசையமைத்த இசையமைப்பாளர் தமன், அப்பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் சிம்பு பேசியதாவது…
“ரயில் பயணத்தில் ‘வித் அவுட்’ என்னும் ஒன்று இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியதே கிரிக்கெட் தான்.
மாநில அளவில் நான் பங்கேற்க இருக்கும் கிரிக்கெட் போட்டிக்காக, ரயிலில் பயணச்சீட்டு கூட இல்லாமல் நான் பயணித்து இருக்கிறேன்.
அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது எனக்கு எல்லையற்ற ஈர்ப்பு உண்டு.
கிரிக்கெட் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் சாருடன் நான் இந்த மேடையில் நிற்பேன் என்று சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை.
இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய நண்பர் தயாநிதிக்கு நன்றி.
‘ஆட்டைக்கு ரெடியாக இருக்கும் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணி என்றுமே “சிறப்பு” என்று பேசினார் சிம்பு.