தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செந்தில்குமார் இயக்கத்தில் சாந்தனு, கே.பாக்யராஜ், கவுண்டமணி, தியாகராஜன், பூர்ணிமா பாக்யராஜ், மனோஜ், பிருத்வி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வாய்மை.
இப்படத்தின் பிரஸ்மீட் சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் எஸ்.தாணு, கபாலி டைரக்டர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் சாந்தனு பேசியதாவது…
“வாய்மை பட இயக்குனர் செந்தில்குமார் இப்படக் கதையை என்னிடம் முழுவதுமாக சொல்லவில்லை.
ஏதோ தோராயமாகத்தான் சொன்னார். ஆனால் நான் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டர் என்பதால் ஓகே செய்தேன்.
முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்தார்.
இதில் ஒரு அழகான சோசியல் மெசேஜை சொல்ல வரும் படம். இதுபோன்ற கருத்துள்ள படத்தை நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
நான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமாணம் படத்தின் டீசரை கபாலி படத்துடன் வெளியிட்டுள்ளார் தாணு.
அவர் செய்துள்ள இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன்” என்றார்.