நீ தங்குவியா இந்த வூட்டுல.? சிவகார்த்திகேயன் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து

நீ தங்குவியா இந்த வூட்டுல.? சிவகார்த்திகேயன் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’.

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘மாவீரன்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “இப்பொழுதுதான் ‘மாவீரன்’ படம் பார்த்தேன். மக்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்துவதில் உள்ள அரசியலை, நல்ல முறையில் படமாக எடுத்துள்ளீர்கள். படத்தின் கற்பனை பகுதி அருமையாக இருந்தது, அரசியல் தாக்கமாக இருந்தது. நீ தங்குவியா இந்த வூட்டுல? படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Karthik Subbaraj tweet and wishes for Sivakarthikeyan’s maaveeran movie

அர்ஜுன் பிறந்தநாளில் அசத்தலான வீடியோ வெளியிட்ட ‘லியோ’ படக்குழு

அர்ஜுன் பிறந்தநாளில் அசத்தலான வீடியோ வெளியிட்ட ‘லியோ’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தில் அவரது கதாபாத்திரமான ஹரோல்ட்தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், ‘லியோ’ படக்குழு ஏற்கனவே நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்த நாளன்று அவருடைய கதாபாத்திரமான ஆண்டனி தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

leo movie arjun character harold das glimpse video unveiled

கமலின் இளமை தோற்றத்திற்காக ஷங்கர் பயன்படுத்திய டெக்னாலஜி

கமலின் இளமை தோற்றத்திற்காக ஷங்கர் பயன்படுத்திய டெக்னாலஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இந்த படத்தில் கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக லோலா விஎப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து படக்குழு ‘இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்ரை வெளியிட்டுள்ளது.

கேஷுவலாக கமல் நிற்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியன் 2

Kamal’s “indian 2′ movie New Poster released

செப்டம்பர் 7ல் ரிலீசாகும் நடிகை அனுஷ்காவின் புதிய படம்.!

செப்டம்பர் 7ல் ரிலீசாகும் நடிகை அனுஷ்காவின் புதிய படம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார்.

அனுஷ்கா ‘பாகுபலி 2’ படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார்.

மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி மீண்டும் வெளியாகவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி

anushka’s ‘Miss Shetty Mr Polishetty’ new Release Date Announcement

திரையுலகினர் மறந்ததை மறக்காத ‘ஜென்டில்மேன்’..; AVM – SPM – RMV ஆகியோரை கௌரவித்து அழைத்த KTK

திரையுலகினர் மறந்ததை மறக்காத ‘ஜென்டில்மேன்’..; AVM – SPM – RMV ஆகியோரை கௌரவித்து அழைத்த KTK

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.டி.குஞ்சுமோன் பிரமாண்டமாக தயாரிக்கும் ‘ஜென்டில்மேன்-ll’ இப்படத்தின் துவக்க விழா வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.

“தான் பிரபல விநியோகஸ்தராக கொடிகட்டி பறக்க காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் AVM.சரவணன் சார், கே.பாலாஜி சார், ஜி.வி சார், SP.முத்துராமன் சார், ஆர்.எம்.வீரப்பன் சார், தேவர் ஃபில்ம்ஸ் சின்னப்பா தேவர் இப்படி பலர். இவர்கள் இல்லாமல் நான் இப்படி ஒரு தயாரிப்பாளராக இருக்க வாய்ப்பு இல்லை என்று கே.டி.குஞ்சுமோன் எப்போதும் சொல்வதுண்டு.

திரையுலகில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு டிஜிட்டல் முறையில் அழைப்பு அனுப்பப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் எதையும் பிரமாண்டமாக செய்தே பழக்கப்பட்ட மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன் ‘ கே.டி.குஞ்சுமோன் அழைப்பிதழ் மூலமாக இந்த நிகழ்வுக்கு அனைவரையும் அழைக்கும் பணியை மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார். திரையுலகம் முழுவதும் இந்த அழைப்பிதழ் விநியோகம் செய்து வருகிறார்.

அதற்கு முன்,தனது திரையுலக பயணத்தின் வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து உறுதுணையாக நின்றவர்களில் ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தி ஆசி பெற்றார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். அதன்பிறகே இந்த ஆரம்ப விழாவிறக்கான அழைப்பிதழை மற்றவர்களுக்கு கொடுத்து வருகிறார்.

சினிமா என்பதே பிரமாண்டம் தான்.. ஆனால் சினிமா விழாக்களுக்கு இதுபோன்று அழைப்பிதழ் அனுப்புவது நடைமுறையில் இருந்து மறைந்தே பல வருடங்களாகி விட்ட நிலையில், அந்த பிரமாண்டத்தை மீண்டும் கொண்டு வரும் விதமாக கே.டி.குஞ்சுமோன் அனுப்பி வரும் இந்த அழைப்பிதழை திரையுலகினர் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

ஆரம்ப விழா முடிவில் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. திரையுலகை சார்ந்த பலர் கலந்து கொள்கிறார்கள்.

ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

கே.டி.குஞ்சுமோன்

KT Kunjumon invites AVM SPM RMV for Gentleman 2 launch

சுதந்திர தின விழாவை பள்ளியில் கொண்டாடி அவர்களுக்கு உதவிய விஷால்

சுதந்திர தின விழாவை பள்ளியில் கொண்டாடி அவர்களுக்கு உதவிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நமது இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15 நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நடிகர் விஷாலும் இந்த கொண்டாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காரைக்குடி அருகில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.

விஷால்

இன்று சுதந்திர தினம் என்பதால் காரைக்குடி அருகில் தெக்கூரில் உள்ள விசாலாட்சி நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட விஷால் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியும், சிறப்புமிக்க ஆசிரியர் பெருமக்கள் மத்தியில் திறமையான மாணவியர் செல்வங்களுடன் சிறப்புரை ஆற்றினார்

அதைத் தொடர்ந்து 200 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி உபகரணங்களை தனது தேவி அறக்கட்டளை சார்பில் வழங்கினார் விஷால்.

விஷால்

Vishal celebrated Independence day at School and helped them

More Articles
Follows