தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…
“‘வெயில்’ படம் முதலே வசந்தபாலன் அவர்களின் எழுத்துக்கு நான் ரசிகன். ‘அநீதி’ திரைப்படத்தை காணும் வாய்ப்பை சமீபத்தில் நான் பெற்றேன். மிக மிக விறுவிறுப்பான ஒரு திரைப்படமாக ‘அநீதி’ அமைந்துள்ளது.
வசந்த பாலன் படங்களில் சமூக அக்கறையும் கோபமும் எப்போதும் வெளிப்படும். அது இந்த படத்திலும் உள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டுவரும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. காளி வெங்கட்டின் மிகச் சிறப்பான பங்களிப்பு ‘அநீதி’ படத்தில் பேசப்படும். இப்படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா பேசியதாவது…
“இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் இரண்டு படங்களில் தற்போது பிஸியாக இருக்கும் வேளையிலும் ‘அநீதி’ படத்தை பார்த்து, ரசித்து, பாராட்டி அதை வெளியிட முன் வந்திருக்கும் இயக்குனர் ஷங்கர் சாருக்கு மனமார்ந்த நன்றி. வசந்த பாலன் சினிமாவை நேசிப்பவர், காதலிப்பவர். அவரது ஒவ்வொரு படத்திலும் இதை நாம் உணர முடியும்.
‘அநீதி’ திரைப்படத்தையும் அவ்வாறே அவர் உருவாக்கியுள்ளார். இப்படத்தை தயாரித்துள்ள அவரது நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள். நடிப்பிலும், குரலிலும் உடல்மொழியிலும் நாம் இழந்துவிட்ட ரகுவரன் மீண்டும் வந்தது போல் அர்ஜுன் தாஸ் உள்ளார். அவர் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகிறேன். இப்படம் வெற்றியடைய உங்களது மேலான ஆதரவை தாருங்கள். நன்றி.”
Vasantha Balan movies will have good message says Karthik Subbaraj