சிம்பு WIN டைம் லூப்..; மாநாடு விமர்சனம் 4/5

சிம்பு WIN டைம் லூப்..; மாநாடு விமர்சனம் 4/5

ஒன்லைன்… டைம் லுப்பில் சிக்கி கொள்ளும் சிம்பு எப்படி தன்னையும் தன் சார்ந்தோரையும் காப்பாற்றுகிறார் என்பதே கதை. கடந்த வாரம் வெளியான ஜாங்கோ திரைப்படமும் இதே டைம் லூப் கதைதான். அதாவது ஒரு நாள் தனக்கு நடந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நடப்பதே டைம் லூப்.

கதைக்களம்..

துபாய் நாட்டில் இருந்து தமிழகம் வருகிறார் சிம்பு. ஒரு கட்டத்தில் இவர் டைம் லூப்பில் சிக்கிக்கொள்கிறார். மேலும் நடக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே அறியும் திறன் சிம்புக்கு கிடைக்கிறது.

விரைவில் நடைபெறவுள்ள ஒரு மிகப்பெரிய மாநாட்டில் முதல்வருக்கு அசம்பாவிதங்கள் நடைபெறவுள்ளதாக அறிகிறார். எனவே அந்த சூழ்நிலையை எப்படி மாற்றியமைக்கிறார் என்பதே கதை ஓட்டம்.

சிம்பு மற்றும் வில்லன் எஸ்ஜே சூர்யா… இருவருக்குமான மோதலே இந்த மாநாடு.

கேரக்டர்கள்..

சிம்புக்கு இந்த படம் ஒரு கம்பேக் எனலாம். மனிதர் தாறுமாறாக புகுந்து விளையாடி இருக்கிறார். படத்தில் சொல்வது போல பக்கா எனர்ஜியுடன் திரும்ப வந்துவிட்டார் சிம்பு. ஸ்டைலிஷ் லுக்… ஸ்லிம் சிம்பு என ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

படத்தின் வில்லன் எஸ்ஜே சூர்யா என்று சொல்வதைவிட இவர்தான் 2வது ஹீரோ எனச் சொல்லலாம். அவருக்கே உரித்தான ரிப்பீட் டயலாக்குகள் படத்தல் ஏராளம்.. இருக்கு ஆனா இல்ல என்பாரே அது போலத்தான்.

நாயகி கல்யாணியை விட வில்லன் எஸ்ஜே சூர்யாவுடன் தான் சிம்புக்கு செம கெமிஸ்ட்ரி. பொதுவாக சிம்பு படங்களில் ரொமான்ஸ் செமயாய் இருக்கும். ஆனால் இதில் அந்த ஹீரோயின் ரொமான்ஸ் மிஸ்ஸிங்.

இவர்களுடன் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்ஏ சந்திரசேகர், Y G மகேந்திரன் என்று அனைவரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம். வெங்கட் பிரபு படம் என்றால் பிரேம்ஜி இல்லாமலா..? அவரும் உண்டு.

இடைவேளைக்கு பிறகு சிம்பு, எஸ் ஜே சூர்யா, Y G மகேந்திரன் மூன்று பேரும் இணைந்து வரும் காட்சிகளில் செமயாய் என்ஜாய் பண்ணலாம்.

டெக்னீஷியன்கள்…

தீவிரவாதிகளில் ஏதுடா சாதி மதம் எல்லாம் என சிம்பு பேசும் டயலாக்குகள் சூப்பர். அனல் தெறிக்கும் பைட்கள்.. செம மாஸ் எனலாம்.

போகிற போக்கில் அரசியலையும் லேசாக தட்டி சென்றுள்ளார் டைரக்டர் வெங்கட்பிரபு. படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து பல மாதங்கள் காத்திருந்து தியேட்டர்களில் வெளியிட்ட சுரேஷ் காமாட்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இது நிச்சயம் தியேட்டருக்கான படம் தான்.

பின்னணி இசையில் ஜீனியர் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் யுவன். ர்ர்….ர்ர்..ரட்ட்ட்டா… ர்ர்ரட்டா.. என்ற பின்னணி இசை நீங்கள் படம் முடிந்து வெளியே வந்தாலும் உங்கள் மைண்ட்டில் ரீங்காரமிடும்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் தன் பணியில் மிகச்சிறப்பு. மாநாடு என்றாலே மிகப்பெரிய கூட்டம் இருக்கும். அதை நேர்த்தியாக அழகாக படம் பிடித்துள்ளார்.

இது டைம் லூப் படம் என்பதால் படத்தின் காட்சிகள் திரும்ப திரும்ப வரும். ஆனால் அதை சரியாக கையாண்டு இருக்கிறார் டைரக்டர் வெங்கட்பிரபு.

ஒரு சில இடங்களில் சலிப்பு வருகிறது. அதை எடிட்டர் பிரவீன் கே எல் மிகைப்படுத்தாமல் கத்திரி போட்டிருக்கலாம்.

சிலருக்கு சில காட்சிகள் புரியாவிட்டாலும் அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி கொடுத்திருப்பது சிறப்பு. மங்காத்தா படத்திற்கு பிறகு தனக்கும் ஒரு திருப்புமுனை எதிர்பார்த்தார் வெங்கட் பிரபு. அதை இந்த மாநாடு நிச்சயமாக கொடுக்கும்.

இந்த பட கதைக்காக சிம்பு என்பதை காட்சிகளில் சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு.

ஆக மாநாடு… இது சிம்பு ரசிகர்களுக்கான டைம் லூப்

Simbu in Maanaadu movie review and rating in tamil

Related Articles