பிந்துமாதவி, தர்ஷனா பானிக் நடிக்கும் “யாருக்கும் அஞ்சேல்” !

பிந்துமாதவி, தர்ஷனா பானிக் நடிக்கும் “யாருக்கும் அஞ்சேல்” !

Yaarukkum Anjaelஇரண்டே படங்கள் இயக்கியிருந்தாலும், இரண்டிலும் புதுமையான களத்தில் நேர்த்தியான கதை சொல்லலில் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். அவர் படங்களை வழங்கும் முறையினை காட்டிலும், அவர் படங்களுக்கு வைக்கும் தலைப்பு அதி அழகாக அனைவரையும் கவர்ந்துவிடுகிறது.

“புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” தலைப்புகள் இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் தற்போது பிந்து மாதவி, தர்ஷனா பானிக் ஆகியோரை முதன்மை பாத்திரங்களாக வைத்து இயக்கி வரும் திரில்லர் படத்திற்கு என்ன தலைப்பு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியது. இந்த நிலையில் லிட்டில் சூப்பரஸ்டார் சிலம்பரசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து இப்படத்தின் தலைப்பான “யாருக்கும் அஞ்சேல்” தலைப்பினை வெளியிட்டுள்ளார்கள். வெளியான நொடியிலேயே அனைவரையும் கவர்ந்து, வைரலாக இத்தலைப்பு பகிரப்பட்டு வருகிறது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இதுகுறித்து கூறியதாவது…

இந்தப்படத்தில் மிக கடினமாக இருந்தது இப்படத்திற்கு தலைப்பு வைக்கும் பணிதான். பல விதமான தலைப்புகளை அலசி, இறுதியாக “யாருக்கும் அஞ்சேல்” எனும் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தோம். ரசிகர்கள் முழுப்படத்தினையும் பார்த்து முடிக்கும் போது, இந்த தலைப்பு தான் மிகச்சரியானது என்பதை உணர்வார்கள். படத்தின் தலைப்பை அன்பிற்காக நடிகர் சிலம்பரனும், நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டதால், படத்தின் தலைப்பு பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்றார்.

படத்தின் தற்போதைய நிலை குறித்து கூறும்போது…

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பையும் 30 நாட்களில் ஊட்டியில் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் அப்பணிகளும் முடிவடையவுள்ளது.

இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தை, உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சகோதரிகளாக பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள்.

Third Eye Entertainment சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் “யாருக்கும் அஞ்சேல்” படத்தை தயாரித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக், டிரெயல்ர், இசை வெளியீடு மற்றும் திரை வெளியீடு பற்றி மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

BREAKING திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மரணம்.; ஸ்டாலின் இரங்கல்!

BREAKING திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மரணம்.; ஸ்டாலின் இரங்கல்!

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மார்ச் 7) காலமானார். அவருக்கு வயது 98.

திமுக மூத்த தலைவராகவும், நீண்டகாலமாக கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன்.

இவர் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை விட வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயோதிகம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நலக் குறைவை சந்தித்து வந்தார் அன்பழகன்.

இந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் (பிப்ரவரி 24) இரவு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று (மார்ச் 7) அவரது உயிர் பிரிந்தது.

இதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

கட்சி சார்பில் ஏழு நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த க.அன்பழகனின் இயற்பெயர் ராமையா

* தி.மு.க தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கட்சியில் தொடர்ந்து இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் க.அன்பழகன்

* கருணாநிதி – அன்பழகன் இடையிலான நட்பு 75 ஆண்டுகள் ஆழமானது.

DMK general secretary Anbazhagan no more

‘கர்ணன்’ தலைப்பை மாற்றி இந்த பெயர் வைங்க.. சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கண்டனம்

‘கர்ணன்’ தலைப்பை மாற்றி இந்த பெயர் வைங்க.. சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கண்டனம்

karnan dhanushமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘கர்ணன்’.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படத் தலைப்பு தொடர்பாக கே. சந்திரசேகரன்,
தலைவர், சிவாஜி சமூகநலப்பேரவை சேர்ந்தவர் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்

அதில்…

“கர்ணன்” – இந்தப் பெயர் மகாபாரதக் கதாபாத்திரம் மட்டுமல்ல, நடிகர்திலத்தின் தோற்றம், கம்பீரம், நடை என்று பல பரிமாணங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய படம்.

இன்று, ஏதோ ஒரு கதைக்கு “கர்ணன்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நமது கண்டனத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, திரைப்படப் பெயர்களை பதிவு செய்யும், தமிழ் பிலிம் சேம்பர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தெரிவித்திருக்கிறோம்.

ஆனாலும், தற்போது வெளியாகியுள்ள ஒரு வார இதழில் தனுஷ் நடிக்கும் “கர்ணன்”: திரைப்படத்தைப் பற்றி ஒரு கவர் ஸ்டோரி வெளியாகியுள்ளது.

அதில், “கர்ணன்” கொடுப்பவன் அல்ல. உரிமைகளைக் கேட்பவன் என்று வந்துள்ளது.

“கர்ணன்” என்றாலே கொடுப்பவன்தான். உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்களைக்கூட பெயர்த்தெடுத்து தானமாகக் கொடுத்தவன். இறக்கும் தருவாயிலும், இல்லை என்று சொல்லாமல் தன்னுடைய புண்ணியங்களையெல்லாம், ரத்தத்தால் தாரை வார்த்துக் கொடுத்தவன்.

அப்படியிருக்கையில், உரிமைகளைக் கேட்கும் ஒரு கேரக்டருக்கு :”கர்ணன்” என்று ஏன் பெயர் வைக்கவேண்டும்?

“போராளி”:, “உரிமைக்குரல்” என்று வேறு ஏதாவது பெயரை வைத்திருக்கலாமே?

இவ்வாறு அவர் தன் முக நூலில் பதிவிட்டுள்ளார்.

ரஜினிக்கு ஏமாற்றம் அளித்த விஷயம் அதுதான்; ரகசியம் சொல்லும் கம்யூ. முத்தரசன்

ரஜினிக்கு ஏமாற்றம் அளித்த விஷயம் அதுதான்; ரகசியம் சொல்லும் கம்யூ. முத்தரசன்

Rajinikanthமதுரை மேலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்பார் படம் வெற்றி பெற வில்லை என்பதால் வருத்தப்படுகிறார் ரஜினிகாந்த்.

ரசிகர்களிடம் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ஒருவேளை தர்பார் பட பிரச்சினை காரணமாக வருத்தம் தெரிவித்திருக்கலாம்.

இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வருவேன் என்றார். ஆனால் எப்போது என்பதுதான் தெரியவில்லை.

டெல்லியில் 47 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த இழப்புக்கு இந்துத்துவா அமைப்பே காரணம்.

ஆனால் அதை திசை திருப்பும் வகையில் கொரோனா வைரஸ் பீதியை கிளப்பி விட்டுள்ளனர்.்

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

துரத்தும் கொரானா வைரஸ்.; சூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய ‘அண்ணாத்த’

துரத்தும் கொரானா வைரஸ்.; சூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய ‘அண்ணாத்த’

Annaatthe shootingசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த.

ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

அடுத்தக்கட்டமாக புனே மற்றும் கொல்கத்தா செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் வட இந்தியாவில் கொரானா வைரஸ் பீதி அதிகமாக இருப்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் அந்த பகுதிக்கு செல்லும் திட்டத்தை கை விட்டார் அண்ணாத்த.

இதனால் படப்பிடிப்பு தொடர்ந்து ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே நடைபெற உள்ளதாம்.

எனவே அதற்கான செட் வேலைகள் தற்போது நடந்து வருகிறதாம்.

வைரமுத்து மீது 13; கார்த்தி மீது 7 இப்படியிருக்க மகளிர் தினம் என்ன பயன்..? சீறும் சின்மயி.!

வைரமுத்து மீது 13; கார்த்தி மீது 7 இப்படியிருக்க மகளிர் தினம் என்ன பயன்..? சீறும் சின்மயி.!

vairamuthu chinmayiகடந்த வருடத்தில்கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவையில்லாமல் பல்வேறு பாலியல் புகார்களை அவ்வப்போது கூறி வருகிறார்.

இதனிடையே இவரை டப்பிங் யூனியனில் இருந்து அதன் தலைவர் ராதாரவி நீக்கினார்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன், நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

பெண்களுக்கான நியாயம் கிடைக்க எப்படி போராட வேண்டி இருக்கு? என்று சமீபத்தில் நெட்டிசன் பதிவிட்டிருந்தார்.

இதனையறிந்து இதற்கு பதிலளித்த சின்மயி, ‘இது என்ன பிரமாதம், பாடலாசிரியர் வைரமுத்து மீது 13க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நான் அளித்த புகாரால் ராதாரவி என்னை டப்பிங் யூனியனிலிருந்து வெளியேற்றினார்.

பாலிவுட் அனு மாலிக் பொதுஇடத்தில் வைத்தே 6 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாடகர் கார்த்தி, சுவிட்சர்லாந்து பாடகியுடன் சேர்த்து 7 பெண்களிடம் அத்துமீறியுள்ளார்.” என பதிலளித்துள்ளார்.

மேலும் அடுத்த பதிவில்…

நம் நாட்டில் மகளிர் தினத்தன்று தான் பெண்களை போற்றுகிறார்கள். மற்ற நாட்களில் மதிப்பது இல்லை.

அப்படிப்பட்ட மனநிலையில் தான் மிருகங்கள் இருக்கின்றன.

பாதுகாப்பை உறுதி செய்யாமல் மகளிர் தினம் கொண்டாடி என்ன பயன்?

என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.

More Articles
Follows