6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா?

Sarkar crossed 100c in box office Will Vijay beat Rajinis recordதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவரின் படங்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பு உள்ளது.

அண்மைகாலமாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் வசூல் சாதனை புரிந்து வருகிறார்.

நேற்று முந்தைய நாள் தீபாவளி தினத்தன்று விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் வெளியானது.

இப்படம் முதல் நாளில் உலகமெங்கும் 60 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இரண்டே நாட்களில் ரூ 105 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

“துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல்” ஆகிய படங்கள் ஏற்கெனவே 100 கோடி வசூலித்த படங்கள் ஆகும்.

இப்போது அந்த வரிசையில் 6வது படமாக ‘சர்கார்’ படமும் இணைந்துள்ளது.

விஜய்க்கு முன்பு ‘சிவாஜி, எந்திரன், கபாலி, காலா’ ஆகிய நான்கு படங்களில் வசூல் மூலம் 100 கோடியை தாண்டியிருக்கிறார் ரஜினிகாந்த்.

2007 முதல் 2018 வரை கடந்த 11 ஆண்டுகளில் ரஜினி 7 (குசேலன் உட்பட) படங்களை மட்டுமே கொடுத்துள்ளார். அதில் 4 படங்கள் 100 கோடியை தாண்டியுள்ளது.

இந்த 11 ஆண்டுகளில் விஜய் 19 படங்களை கொடுத்துள்ளார். அதில் 6 படங்களில் மட்டுமே 100 கோடியை தாண்டியுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Sarkar crossed 100c in box office Will Vijay beat Rajinis record

Overall Rating : Not available

Related News

ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் உள்ளிட்ட…
...Read More
பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில்…
...Read More

Latest Post