ஆந்திராவிலும் மணக்கப் போகும் சந்தானம்

Server Sundaram movie Telugu and Hindi rights procured by Linga bhairavi creationsஅறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியிருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துடன் வைபவி ஷண்டிலியா, நடிகர் நாகேஷின் பேரனான நாகேஷ் பிஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக பி கே வர்மா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணியாற்றி இருக்கின்றனர்.

இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெருமளவு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சர்வர் சுந்தரம் தெலுங்கு உரிமத்தை ”லிங்க பைரவி கிரேஷன்ஸ் ” பெற்றுள்ளது.

” எல்லா மொழி மக்களும் ரசித்து மகிழும் படியான படம் சர்வர் சுந்தரம். அதன் கதை அப்படி.

அத்தியாவசிய விஷயமான உணவையும் சமையலையும் பற்றிய கதை என்பதால் இது அனைவராலும் கொண்டாடப்படும்.

மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட போகும் இப்படம் சந்தானம் அவர்களின் ஹீரோ அந்தஸ்தை வர்த்தக ரீதியாக மேலும் உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன் ” என கூறினார் இப்படத்தை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ் ‘ ஜே செல்வகுமார்.

Server Sundaram movie Telugu and Hindi rights procured by Linga bhairavi creations

Overall Rating : Not available

Related News

‘திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்களைத்…
...Read More
சிம்பு இசையமைப்பில் சந்தானம் நடித்த ‘சக்க…
...Read More
‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ஓடி ஓடி…
...Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வேலைக்காரன் படத்திற்கு…
...Read More

Latest Post