அறிமுகப்படுத்திய சிம்புவுடன் மோதும் சந்தானம்..?

simbu santhanam-விஜய் டிவியில் பிரபலமான சந்தானத்தை மன்மதன் படம் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்தார் சிம்பு.

இதனைத் தொடர்ந்து வல்லவன், சிலம்பாட்டம், வானம், ஒஸ்தி, இது நம்ம ஆளு, வாலு உள்ளிட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக சிம்பு படத்துடன் இவர் நாயகனாக நடித்துள்ள படம் மோதவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற ஜீன் 23ஆம் தேதி சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ரிலீஸ் ஆகிறது.

இதேநாளில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தற்போது சென்சாருக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Clash between Simbu and Santhanam

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில்…
...Read More
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற மாபெரும்…
...Read More
‘திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்களைத்…
...Read More

Latest Post