சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ரிலீஸ் தள்ளிப் போக இதான் காரணம்

server sundaram‘திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்களைத் தயாரித்த, ‘கெனன்யா பிலிம்ஸ்’ தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’.

கேட்டரிங் கல்லூரியில் படித்த அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வைபவி சாண்டில்யா நாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இம்மாதம் 6-ஆம் தேதி ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் வந்துள்ள லேட்டஸ்ட் தகவலின்படி இம்மாதம் 6-ஆம் தேதியும் ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நிறைய கடன்கள் இருப்பதால் பொருளாதார ரீதியில் சிக்கலில் இருக்கிறாராம். இன்னொரு பக்கம் அவருடைய படங்களை வாங்கி வெளியிட்டவகையில் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு வருகின்றனர்.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று இயக்குனர் ஆனந்த் பல்கி டுவீட் செய்துள்ளார்.

சர்வர் சுந்தரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் கடும் அப்செட்டில் இருக்கிறார் சந்தானம்.

Overall Rating : Not available

Related News

சிம்பு இசையமைப்பில் சந்தானம் நடித்த ‘சக்க…
...Read More
‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ஓடி ஓடி…
...Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வேலைக்காரன் படத்திற்கு…
...Read More
அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியிருக்கும்…
...Read More

Latest Post