தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கல்யாண் இயக்கத்தில் சந்தானம் – ராதிகா பிரித்தீ இணைந்து நடித்த படம் ’80ஸ் பில்டப்’.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நாயகி ராதிகா ப்ரீத்தி பேசும் போது..
” நான் ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்று வெகுநாளாக காத்துக் கொண்டு இருந்தேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கு நன்றி.
நான் கல்யாண் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கல்லூரி காலத்தில் இருந்தே சந்தானம் சாரின் மிகப்பெரிய ரசிகை.
என் தோழிகள் என்னை பார்த்தா என்றே அழைப்பார்கள். அவருடன் சேர்ந்து அவருக்கு ஜோடியாக நடித்தது என் பாக்கியம். என்னை அழகாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
I’m big fan of Santhanam says Radhika Preethi