தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வேலைக்காரன் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படம் இந்த செப். 29ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு, பின்னர் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன் படத்தை செப்டம்பர் 29ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
தன்யா நாயகியாக நடிக்க, பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார்.
இந்த படத்துடன் இதே நாளில் ஜி.வி.பிரகாஷின் ‘செம’, நயன்தாராவின் ‘அறம்’, கௌதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மகாதேவகி’, சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Vijay Sethupathis Karuppan and Santhanams Server Sundaram movie release updates