ஹீரோ சந்தானம்; காமெடியன் விவேக்… ‘சக்கப் போடு போடு ராஜா’

ஹீரோ சந்தானம்; காமெடியன் விவேக்… ‘சக்கப் போடு போடு ராஜா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam and vivekஹீரோ சந்தானம் தற்போது நடித்து வரும் படங்களை உடனுக்குடன் முடித்து கொடுத்து வருகிறார்.

‘சர்வர் சுந்தரம்’ படத்தைத் தொடர்ந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மணிகண்டன் இயக்கும் ஓடி ஓடி உழைக்கனும் என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில் அனேகன் பட நாயகி அமைரா நடிக்க, ரோபோ சங்கர், ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இதனையடுத்து, சேதுராமன் இயக்கத்தில் விடிவி கணேஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் சந்தானம்.

‘சர்வர் சுந்தரம்’ நாயகியான வைபவி ஷாந்தலியா இதிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களோடு ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்டோரும் நடிக்க, முக்கிய வேடத்தில் காமெடியனாக விவேக் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘சக்கப் போடு போடு ராஜா’ எனப் பெயரிட்டு உள்ளனர்.

காமெடியனாக ஆரம்பித்து நாயகனாக சந்தானம் நடிக்கும் படத்தில் காமெடியனாக விவேக் நடிக்கவிருப்பது கோலிவுட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனை புகழ்ந்து, விஜய்-அஜித்-தனுஷ் ரசிகர்களை டென்ஷனாக்கிய சமந்தா

சிவகார்த்திகேயனை புகழ்ந்து, விஜய்-அஜித்-தனுஷ் ரசிகர்களை டென்ஷனாக்கிய சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan samanthaரஜினிகாந்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என் விவாதம் கிட்டதட்ட 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

தலைவரை தவிர எவருக்கும் தகுதியில்லை என ரஜினி ரசிகர்கள் கற்பூரம் ஏந்தி சத்தியம் செய்து வருகின்றனர்.

ஆனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் நடிகர்தான் என கூறிவருகின்றனர்.

அண்மைகாலமாக தனுஷ் ரசிகர்கள் அவரை இளைய சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு கூறி வருகின்றனர்.

ஆனால் இவர்களை டென்ஷனாக்கும் வகையில் சிவகார்த்திகேயனை சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து இருக்கிறார் சமந்தா.

‘ரெமோ’ படத்தின் தெலுங்கு பதிப்பு இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமந்தா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது… “நான் நடிக்கத் தொடங்கியது முதல் ஒரு ஸ்டார் சூப்பர் ஸ்டாராக ஆவதைப் பார்த்தது இல்லை.
ஆனால் இப்போது சிவகார்த்திகேயனை அப்படி பார்க்கிறேன்.

அவர் எளிமையானவர், இனிமையானவர்” என்றார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சூர்யா படத்தில் நடிக்கும் அஜித் பட இயக்குனர்

சூர்யா படத்தில் நடிக்கும் அஜித் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh-chandra-menon-ampஎஸ் 3 படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

தானா சேர்ந்த கூட்டம் என தலைப்பிடப்பட்டுள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இவருடன் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனன் நடிக்கிறாராம்.

இவர் ரேவதி நடித்த புதியமுகம் மற்றும் அஜித் நடித்த பாசமலர்கள் ஆகிய படங்களை இயக்கி தயாரித்தவர்.

இவர் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஆடி காரை பரிசளித்த பிரபுதேவா

விஜய்க்கு ஆடி காரை பரிசளித்த பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay car prabudevaநடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வந்த பிரபுதேவா தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

அண்மையில் தேவி என்ற படத்தை தயாரித்து அதில் நடித்திருந்தார்.

விஜய் இயக்கிய இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியிட்டனர்.

படமும் ரசிகர்களின் ஆதரவை பெற்று, நன்றாக கல்லா கட்டியது.

எனவே விஜய்க்கு விலை உயர்ந்த ஆடி காரை பரிசளித்து இருக்கிறார்கள் இப்படத்தின் தயாரிப்பாளர்களான பிரபுதேவா மற்றும் ஐசரி கணேஷ்.

சௌந்தர்யா ரஜினி படத்தில் தனுஷின் ஜோடி இவரா.?

சௌந்தர்யா ரஜினி படத்தில் தனுஷின் ஜோடி இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manjima-Mohan-கபாலி படத்தை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினி இயக்கவுள்ள படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி தாணு.

இப்படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என தலைப்பிட்டுள்ளனர்.

இதில், ராஞ்சனா படத்தில் சோனம் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

பேச்சுவார்த்தகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது காஜல் அகர்வால் அல்லது மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நாயகி உறுதியாகும் பட்சத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

கௌதமி பிரிவு… கமல்-ஸ்ருதி என்ன சொல்கிறார்கள்?

கௌதமி பிரிவு… கமல்-ஸ்ருதி என்ன சொல்கிறார்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal gautami shruthihassanகமலுடன் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நான் இப்போது பிரிகிறேன். இது என் வாழ்க்கையில், நான் எடுத்த பேரழிவு முடிவு என கௌதமி நேற்று அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து, கமல் கூறியதாக ஒரு அறிக்கை வெளியானதும், அதற்கு கமலின் மக்கள் தொடர்பாளர் மறுப்பு வெளியிட்டதையும் நாம் முன்பே பார்த்தோம்.

தற்போது கமலே தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

‛‛இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல்.
நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர்களின் பிரிவுக்கு கமலின் கமள் ஸ்ருதியும் காரணம் என கூறப்பட்டது.

இது தொடர்பாக ஸ்ருதிஹாசனின் தன்னுடைய செய்தி தொடர்பாளர் வழியாக அனுப்பிய அறிக்கை இது…

“யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அவரை பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம்.” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows