சந்தானம் படத்தை இயக்கும் சுசீந்திரன்

சந்தானம் படத்தை இயக்கும் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suseenthiran may direct Actor Santhanams next projectசிம்பு இசையமைப்பில் சந்தானம் நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ படம் கடந்த டிசம்பர் 22ல் ரிலீஸானது.

இதனையடுத்து அவரது நடிப்பில் 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவரது புதிய படத்தை சுசீந்திரன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கி வரும் சுசீந்திரன் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Suseenthiran may direct Actor Santhanams next project

சூர்யா படத்திற்காக தமிழ் ராக்கர்ஸிடம் விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

சூர்யா படத்திற்காக தமிழ் ராக்கர்ஸிடம் விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TSK director Vignesh Shivan request to Tamil rockersவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் நேற்று வெளியானது.

தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குனர் விக்னேஷ்சிவன் கூறியுள்ளதாவது…

நிறைய பேரின் கடின உழைப்பை இப்படத்தில் போட்டுள்ளோம். தயவுசெய்து தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை இணையத்தில் வெளியிடக் கூடாது என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

TSK director Vignesh Shivan request to Tamil rockers

பதுங்கி பாயனும் தல பட டீசரை வெளியிட்டார் பிரேம்ஜி அமரன்

பதுங்கி பாயனும் தல பட டீசரை வெளியிட்டார் பிரேம்ஜி அமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Premji launch Pathungi Paayanum Thala movie teaserMEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் “பதுங்கி பாயனும் தல “.

இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின் இயக்கத்தில் உருவான பதுங்கி பாயனும் தல படத்தின் டீஸரை – 13.01.2018 இன்று மாலை 5 மணிக்கு பார்ட்டி படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் வெளியிட்டார்.

இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த தயாரிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் ராகுல் தாத்தா, சிங்கப்பூர் தீபன், சிங்கம் புலி நடித்துள்ளனர் காமெடி நன்றாக வந்துள்ளது.

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான பாடல்கள் அமைந்துள்ளது.

Actor Premji launch Pathungi Paayanum Thala movie teaser

pathungi paayanum thala winsun

 

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருடன் இணைந்தார் உத்தமி ஜூலி

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருடன் இணைந்தார் உத்தமி ஜூலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Public Star Durai Sudhakar and Julie romance in Uthamiதமிழக இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் தமிழகத்தின் பிரபலமானவர் ஜூலி.

இதனையடுத்து ஓடி விளையாடு பாப்பா என்ற டிவி நிகழ்ச்சியை தனியார் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனையடுத்து நடிகர் விமல் தயாரித்துள்ள மன்னர் வகையறா படம் மூலம் கோலிவுட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் உத்தமி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

உத்தமி படத்தில் ஜூலியின் கேரக்டர் பெயர் ஜூலியானா. ஆம். அவரது நிஜ பெயரில்தான் நடிக்கிறாராம்.

Public Star Durai Sudhakar and Julie romance in Uthami

மணிரத்னம்-சிம்பு இணையும் படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர்

மணிரத்னம்-சிம்பு இணையும் படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mani ratnam and simbu‘காற்று வெளியிடை’ என்ற தோல்வி படத்திற்கு பிறகு மல்ட்டி ஸ்டாரர் படத்தை இயக்கவிருக்கிறார் மணிரத்னம்.

இதில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.

தன் சொந்த நிறுவனமான ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார் மணிரத்னம்.

படத்தில் நடிப்பவர்களுக்கு சில பயிற்சிகளையும் கொடுத்து வருகிறாராம் டைரக்டர்.

விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், விஜய்சேதுபதியின் கேரக்டர் குறித்த தகவல் வந்துள்ளது.

இதில் அவர் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

ஏற்கெனவே ‘சேதுபதி’ படத்தில் போலீஸாக நடித்து பெரும் பாராட்டை பெற்றவர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் இவ்வளவு பிரச்சினை.?

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் இவ்வளவு பிரச்சினை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Natchathira vizhaநடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, சில தினங்களுக்கு முன் மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது.

கலைநிகழ்ச்சிகளுக்கு முன்பாக நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளும் நடைபெற்றன.

நட்சத்திரக் கலைவிழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், த்ரிஷா, நயன்தாரா போன்றவர்கள் கலந்துக் கொள்ளவில்லை.

மேலும் சில மூத்த கலைஞர்களை அவமதிப்பு செய்துவிட்டதாக நடிகர் எஸ்வி. சேகர் குற்றம் சாட்டி நடிகர் சங்கத்தில் தன் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகள், குளறுபடிகள் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

இந்த விழாவைக் காண 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என கூறப்பட்டதாம்.

ஆனால் குறைந்த அளவே பார்வையாளர்கள் இருந்தனர் என தெரியவந்துள்ளது.

மேலும், மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் மோசமான நிலையில் இருப்பதால் நட்சத்திர விழாவைப் புறக்கணியுங்கள் என்று சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இவையில்லாமல் ‘மை ஈவண்ட்ஸ்’ என்ற ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் அலட்சிய போக்கால் பல குளறுபடியும் நடந்துள்ளதாம்.

அதாவது… மே காரணம் என்கிறார்கள் விஷால் தரப்பினர்.

பெரும்பாலும் பாஸ்போர்ட்டில் இருந்த நடிகர்களின் பெயரும், அவர்களின் உண்மையான பெயரும் பொருத்தமாக இருக்காது.

முன்கூட்டியே பாஸ்போர்ட் ஜெராக்ஸை சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தரவில்லையாம். இதனால் ஒரு சில நடிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.

ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்களுக்கு மட்டுமே பிசினஸ் கிளாஸில் டிக்கெட் போடப்பட்டதாம்.

மற்ற கலைஞர்களுக்கு எக்னாமிக் கிளாஸ்தானாம். ஆனாலும் ஒரு சில நடிகைகள் தங்களுக்கு பிசினஸ் கிளாஸ்தான் வேண்டும் என அடம்பிடித்தார்களாம்.

இவையில்லாமல் தங்கும் இடம், உணவு போன்றவற்றிலும் பிரச்சினையாம்.

இந்த விழாவை ஏற்பாடு செய்த நடிகர் சங்க நிர்வாகிகள் முன்கூட்டியே மலேசியா சென்று ஏற்பாடுகளை கவனித்திருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என பாதிக்கப்பட்டவர்கள் சொல்கின்றனர்.

More Articles
Follows