கலைஞர் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு சீனு ராமசாமி மலர் மரியாதை.; ஏன் தெரியுமா?

கலைஞர் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு சீனு ராமசாமி மலர் மரியாதை.; ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காயத்ரி குரு சோமசுந்தரம் நடித்து சீனு ராமசாமி எழுதி இயக்கியுள்ள படம் ‘மாமனிதன்’.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் முதன் முறையாக இளையராஜா யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

‘மாமனிதன்’ திரைப்படம் வரும் ஜூன் 24 திரைக்கு வருகிறது.

இப்படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ நைன் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

திமுக அமைச்சர் வந்திருந்தால் கரு பழனியப்பன் வந்திருப்பார்..; ‘கள்ளன்’ விழாவில் கடுப்பான சீனுராமசாமி

இந்த தருணத்தில் தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இயக்குனர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார்.

அவர் இதுபற்றி கூறும் போது…

“இந்த தமிழ் சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்”
என்றார்.

Seenuramasamy Tribute to Kalaignar MGR Shivaji; Do you know why?

JUST IN ரஜினியின் ‘தலைவர் 169’ டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.; வேற லெவல்

JUST IN ரஜினியின் ‘தலைவர் 169’ டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.; வேற லெவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு மீண்டும் சன்பிக்சர்ஸ் கூட்டணியில் இணைகிறார் ரஜினிகாந்த்.

இவர்கள் இணையும் கூட்டணிக்கு ‘தலைவர் 169’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படம் பற்றிய நமக்கு கிடைத்த முக்கிய தகவல்களை பகிர்கிறோம்.

சன் பிக்சர்ஸ் – ரஜினியுடன் இணையும் ‘படையப்பா’ இயக்குனர்.; ‘பீஸ்ட்’ கொடுத்த ட்விஸ்ட்.?

ஜூலை மாதம் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளார் என தகவல்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘எந்திரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினியின் மகளாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ரஜினி் பயன்படுத்தவுள்ள கார் என ஓரிரு தினங்களாக ஒரு படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிகரும் ரஜினியின் தீவிர ரசிகருமான சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

அவர் இளவயது ரஜினியாக பிளாஷ்பேக் போஷனில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க உள்ளாராம்.

இப்படம் ஜெயிலர் மற்றும் சிறைக்கைதிகளை மையப்படுத்தி உருவாகிறதாம். எனவே அனைத்து இந்திய மற்றும் அந்நிய மொழிகளுக்கு ஏற்றவாறு JAILOR ஜெயிலர் என டைட்டில் வைக்க வைக்கப்படலாம் என்ற என்ற தகவலை நாம் தெரிவித்திருந்தோம்.

நாம் சொன்னபடியே இன்று சரியாக காலை 11 மணிக்கு ஜெயிலர் பட டைட்டில் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் ரத்தக்கறையுடன் ஒரு மிகப் பெரிய கத்தி ஒன்று உள்ளது. நிச்சயம் இந்த டைட்டில் ரஜினி ரசிகர்களை கவர்ந்து ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

இந்த படம் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்துக் கொள்ள எங்களுடன் என்றும் இணைந்திருங்கள்…

Thalaivar 169 title look poster released

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நயன்தாரா இணைந்து நடித்த விஸ்வாசம் படம் முடிந்த கையோடு சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்கியிருந்தார் சிவா..

இந்தப் படத்தை ஞானவேல்ராஜா தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சிவா இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

எனவே அண்ணாத்த படத்திற்கு பிறகு சூர்யா படத்தை சிவா இயக்குவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் திடீரென வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியானது. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்க கலைப்புலி தாணு தயாரிக்க வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் நடந்தது.

எனவே வாடிவாசல் படம் தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க சென்றார் சூர்யா.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கன்னியாகுமரி நடந்து வருகிறது.

இதன்பின்னர் ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கும் ஒரு படத்திலும் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இவை இல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம் 3’ திரைப்படத்திலும் ‘இரும்புக்கை மாயாவி’ என்ற படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே சூர்யா சிவா இணையும் படத்தை ஞானவேல்ராஜா தயாரிப்பாரா.? இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

ஆனால் கண்டிப்பாக இந்த படம் கைவிடப்படாது. விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என தெரிய வத்துள்ளது.

இந்தப் படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதால் அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருவதால்தான் இந்த தாமதம் எனவும் தெரிய வந்துள்ளது.

New update of Surya starrer directed by Siva

2000 ராஜபாளைய நாய்கள்.. 1000 மாம்பா பாம்புகளுடன் ஹீரோவாகும் டைரக்டர் வடிவுடையான்

2000 ராஜபாளைய நாய்கள்.. 1000 மாம்பா பாம்புகளுடன் ஹீரோவாகும் டைரக்டர் வடிவுடையான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவன், யாஷிகா ஆனந்த், ரித்திகா சென் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்துள்ள படம் ‘பாம்பாட்டம்’.

இந்தப் படத்தை இயக்கிய கையோடு இயக்குனர் V.C. வடிவுடையான் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார்.

‘பாம்பாட்டம்’ படத்தின் இணை தயாரிப்பாளரான பண்ணை A.இளங்கோவன் தனது பண்ணை பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் ‘நாக பைரவா ‘ படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்க உள்ளதோடு நாயகனாகவும் அறிமுகமாகிறார்.

பிரபல இந்தி நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஜூலை 1 முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

முழுக்க முழுக்க மும்பையில் முழு படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் V.C.வடிவுடையான் நம்மிடையே பகிர்ந்தவை…

1970 காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி உள்ளேன்.

2000 ராஜபாளைய நாய்களும் ஆயிரக்கணக்கான மாம்பா பாம்புகளும் படத்தில் இடம்பெற இருக்கின்றன.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என பான் இந்தியா படமாக இந்த நாக பைரவ உருவாக இருக்கிறது.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருப்பதால் பிரம்மாண்டமாக வர வேண்டும் என்பதற்காக பிரபல ஹாலிவுட் நிறுவனம் அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறது என்றார் இயக்குனர் V.C.வடிவுடையான்.

Director Vadivudaiyan turns hero

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே..; கமலிடம் முத்தமழை பெற்ற ரோபோ சங்கர்

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே..; கமலிடம் முத்தமழை பெற்ற ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என்ற பெயர் இருந்தாலும் சினிமாவில் அவருக்கு முத்த நாயகன் என்ற மற்றொரு பட்டப்பெயர் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிக்கும் அழகான ஹீரோயின்களுக்கு அவர் அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுப்பார்.

ஆங்கிலப் படத்துக்கு நிகராக அவருடைய படங்களில் முத்த காட்சிகள் இடம்பெறுவது வழக்கம்.

ஆனால் சமீபகாலமாக அவரது படங்களில் முத்தக் காட்சிகள் இடம்பெறுவது குறைந்து வருகிறது.

இந்த வரிசையில் நடிகர் விஜய்சேதுபதி அதுபோல் முத்த மழை பொழிந்து வருகிறார். ஆனால் அவர் நடிகைக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது இல்லை.

ஆனால் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு ரசிகர்களுக்கும் மற்ற பிரபலங்களுக்கும் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கருக்கு கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அது பற்றி விவரம் வருமாறு

நடிகர் ரோபோ ஷங்கர் கமலஹாசனின் தீவிர ரசிகர்.

இவர் வருடந்தோறும் கமலஹாசன் பிறந்தநாள் வந்துவிட்டால் முதல் வேலையாக அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு நலத்திட்ட உதவிகள் செய்வது அவரது வழக்கம்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜூன் 3ல் ‘விக்ரம்’ படம் வெளியான நாள் முதலே திரையரங்குகளுக்கு நேரில் சென்று கமலஹாசன் என்ட்ரியின் போது ஆரத்தி எடுத்து தடபுடலாக கொண்டாடிய ரோபோ ஷங்கரை இன்று நேரில் அழைத்து சந்தித்தார் கமல்ஹாசன்.

குடும்பத்துடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ரோபோ ஷங்கர் ஆண்டவரிடம் அன்பாக முத்தத்தைக் கேக்க அவரும் கன்னத்தில் முத்தத்தைக் கொடுக்க திக்கு முக்காடிப் போன ரோபோ ஷங்கர் உற்சாகத்தில் இருக்கிறார்.

Kamal Haasan kisses Robo Shankar

ஆக்ஷன் திரில்லர் ஜானரில் ராணா – ரக்ஷிதா இணையும் ஏக் லவ் யா

ஆக்ஷன் திரில்லர் ஜானரில் ராணா – ரக்ஷிதா இணையும் ஏக் லவ் யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1000 கோடி வசூல் செய்யும் பான் இந்தியா ஆக்ஷன் படங்கள் வெளியாவது அதிகரித்தாலும், இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் காதல் கதைகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு.

எனவே, எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்ல காதல் படங்களை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை. அதிலும் காதலோடு தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப திரில்லரோடு வெளியான காதல் படங்களுக்கு வெற்றி உறுதி.

அப்படி ஒரு படம் தான் ஏக் லவ் யா.

ரக்ஷிதா பிலிம் பேக்டரி சார்பில் ரக்ஷிதா பிரேம் தயாரித்துள்ள இப்படத்தை பிரேம்.எஸ் இயக்கியுள்ளார்.

இதில் ஹீரோவாக புதுமுக நடிகர் ராணா நடித்துள்ளார். ஹீரோயினாக ரச்சிதா ராம் நடித்துள்ளார்.

இவர்களுடன் சரன்ராஜ் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரேஷ்மா நானய்யா, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைப்படி, ஹீரோவின் முன்னாள் காதலி சில மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதற்கிடையே இந்த கற்பழிப்புக்கு ஹீரோ தான் காரணம் என்று கூறி அவர் மீது பழி போடுகிறார்கள்.

நிரபராதியன ஹீரோ தன் மீது விழுந்த பழியை துடைப்பததோடு, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர மிகப்பெரிய வக்கீலை எதிர்த்து போராடுகிறார்.

இத்தகைய போராட்டத்தில் ஹீரோ எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் சொல்வதோடு, இளைஞர்கள் காதலில் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்பதையும், உண்மையான காதல் பற்றியும் அழுத்தமாக சொல்லி காதலர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் கன்னட பதிப்பு ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ஏக் லவ் யா தமிழ் மற்றும் மலையாள பதிப்பு வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏக் லவ் யா படத்தின் தமிழ் மற்றும் மலையாள பதிப்பை இவானியா புரொடக்ஷன்ஸ் மற்றும் பிலிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அபிலாஷ் நந்தகுமார் மற்றும் பிரசாத் கிருஷ்ணா தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறார்கள்.

அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேன் சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீநிவாஸ் பி.பாபு படத்தொகுப்பு செய்துள்ளார்.

Rana-Rakshita joins for Ek Love Ya

More Articles
Follows