தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, அமுதவாணன் உள்ளிட்டோ நடித்துள்ள படம் ‘அழகிய கண்ணே’.
இந்த படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இயக்குநர் R விஜயகுமார் பேசியதாவது…
இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர். அவரின் உடன் பிறந்த தம்பி நான், அவருடன் 4 படங்களில் வேலை பார்த்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டுமென்கிற நோக்கில், இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன்.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவர்களின் தீவிர ரசிகன் நான், அவர் என்னை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. கோவிட் காலத்தில் இந்தக்கதையை கடும் இன்னல்களுக்கிடையில் உருவாக்கினேன்.
மாமனிதன் படத்தில் சிவா ஒரு கதாப்பாத்திரம் செய்தார்.
அப்போது அண்ணன் (சீனு ராமசாமி) இவன் ஒரு ஹீரோ மெட்டீரியல், என்றார். அதை மனதில் வைத்து அவரை ஹிரோவாக்கினேன். இந்தப் படம் உருவாக முக்கிய காரணம் லியோனி அண்ணன், அவர்தான் தயாரிப்பாளரிடம் என்னை அனுப்பினார். சிவா இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார்.
அவர் தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடிப்பார். இப்படம் மதுரையில் ஆரம்பித்து சென்னை நோக்கி நகரும் ஒரு கதை. உதவி இயக்குநரின் வாழ்வைச் சொல்லும் கதை. பல நாயகிகள் இந்தக் கதையைக் கேட்டு தயங்கினார்கள் ஆனால் சஞ்சிதா ஷெட்டி கேட்டவுடன் நடிக்கிறேன் சார் என்றார். அவருக்கு நன்றி. அவருக்கு இந்தப்படம் ஒரு திருப்பமாக இருக்கும். Esthell Entertainer மற்றும் படத்தை வெளியிடும் Kannan Ravi Group நிறுவனத்திற்கு நன்றி. பிரபு சாலமன் சார் பிரபு சாலமானகவே நடித்துள்ளார் அவர் அலுவலகத்தையும் படப்பிடிப்பிற்கு தந்தார். அவருக்கு என் நன்றிகள். நட்புக்காக முதல் முறையாக விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியாகவே நடித்துள்ளார் அவருக்கு என் பெரிய நன்றி. சமூக நீதி பேசும் அழகான படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
My brother Seenu found Siva as hero material at Maamanithan set