தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
20வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது.
இதன்படி சென்னை பிவிஆா் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், அண்ணா சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கு படங்கள் திரையிடப்பட்டன.
இந்த நிலையில் இந்த திரைப்பட விழாவின் நிறைவு விழா நேற்று டிசம்பர் 22 தேதி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பல்வேறு கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் சீனு ராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.
விருது பெற்ற நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது…
“வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாக உருவாகின்றன; நம் வாழ்க்கையை புரிந்துக் கொள்ள திரைப்படங்களும் அதிகம் உதவுகின்றன.
ஒரு படத்தின், கதையின் மூலம் இயக்குநர்கள் தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துக் கொள்ளுங்கள்; சாதாரணமாக கடந்து போய்விடாதீர்கள்; அதுகுறித்து ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள்.
ஒரு படத்தை விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள்.
இப்போதெல்லாம் யூடியூப்பில் நெகட்டிவ்வாக பேசினால்தான் பணம் வருகிறது.
ஆனால் திரைப்படங்கள் விமர்சகர்கள் பார்வையில் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை.
நடிகர் பூ ராமு அவர்களுடன் இணைந்து இந்த விருதை பெருவதில் எனக்கு மகிழ்ச்சி” என்று பேசினார் விஜய்சேதுபதி.
விருதுக்கான பரிசுத்தொகையை விழாக் கமிட்டிக்கு நன்கொடையாக திருப்பி கொடுத்தார் விஜய்சேதுபதி குறிப்பிடத்தக்கது.