JUST IN என் இயக்கத்தில் அந்தோணி தாசன் ஹீரோ… – சீனுராமசாமி

JUST IN என் இயக்கத்தில் அந்தோணி தாசன் ஹீரோ… – சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டுப்புறப் பாடல்களை பாடி பிரபலமானவர் அந்தோணி தாசன்.

கோயில் திருவிழாக்களிலும் கிராமிய நிகழ்ச்சிகளிலும் பாட்டு பாடி அசத்திய இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன.

இதனை தொடர்ந்து திரையுலகில் பின்னணி பாடகர் ஆக நிறைய பாடல்களை பாடியுள்ளார். மேலும் ஓரிரு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

இவர் தற்போது ஒரு பாடல்கள் வெளியிடும் இசை நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

இதற்கான விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா இயக்குனர் சீனுராமசாமி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சீனு ராமசாமி மேடையில் பேசும்போது..

“நான் இயக்கிய ‘தர்மதுரை’ படத்தில் ஒரு காட்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் நடித்திருப்பார்கள். அவர்கள் அடிக்கும் ஒரு இசைக்கு தப்பாட்டம் அல்ல இதுதான் சரியான ஆட்டம் என்ற வசனத்தை வைத்திருப்பேன். நாட்டுப்புற கலைஞர்களை கௌரவப்படுத்தவே அந்த வசனம் எழுதப்பட்டது.

அந்தோணி தாசன் ஒரு பாடகர் மட்டுமல்ல. ஒரு அற்புதமான நடிகர் ஒளிந்து இருக்கிறார். அவரது நடிப்பை கண்டு நான் வியந்திருக்கிறேன்.

தற்போது இடி முழக்கம் படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார். விரைவில் அவரை நாயகனாக வைத்து நான் ஒரு படத்தை இயக்க உள்ளேன்.அது பெரிய படமாக இருக்கும்” என மேடையில் தெரிவித்தார் சீனு ராமசாமி.

சீனுராமசாமி

Seenu Ramasamy speech at Anthony Daasans Folk Marley Records Launch

TOP 100 in World : விஜய் 15.. சூர்யா 45.. தனுஷ் 46.. எந்த இடத்தில் ரஜினி & அஜித்.?

TOP 100 in World : விஜய் 15.. சூர்யா 45.. தனுஷ் 46.. எந்த இடத்தில் ரஜினி & அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு வருட முடிவிலும் உலகளவில் கூகுள் சேர்ச் என்ஜினில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இதில் அதிகம் தேடப்பட்ட சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்களும் அடங்குவர்.

இந்த பட்டியலில் ஆசியளவில் கொரியாவை சேர்ந்த பாடகர் BTS V முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் – 7, நடிகை ஆலியா பட் 8, நடிகை பிரியங்கா சோப்ரா 9வது இடத்திலும் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 10ம் இடத்திலும் உள்ளனர்.

இந்த டாப் 100 பட்டியலில் நடிகர் விஜய் 15வது இடத்தில் உள்ளார். இவர் கடந்தாண்டு 2021ல் 19வது இடத்தை பிடித்து இருந்தார்.

நடிகர் சூர்யா 45, நடிகர் தனுஷ் 46வது இடத்திலும் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் 68வது இடத்திலும், நடிகர் அஜித் 78வது இடத்திலும் உள்ளனர்.

Vijay tops the list of most searched Tamil actors on Google in 2022

ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க மதுவந்தி-க்கு வந்த ஆஃபர்.; எந்த படமுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!?

ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க மதுவந்தி-க்கு வந்த ஆஃபர்.; எந்த படமுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாஜக கட்சியில் பிரபலமானவர்களில் ஒருவர் மதுவந்தி. இவரது பேட்டிகள் மற்றும் பேச்சுகள் அடிக்கடி இணையத்தில் சர்ச்சையாவது வழக்கம்.

இவர் விஜய்சேதுபதியின் ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் ஒய். ஜி. மகேந்திரனின் மகள் ஆவார். ரஜினிக்கும் உறவினர் ஆவார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் இவரின் சமீபத்திய பேட்டியில்… “1996ல் வெளியான ரஜினியின் ‘முத்து’ படத்தில் தன்னை தான் நாயகியாக நடிக்க அணுகினார்கள் என தெரிவித்துள்ளார்.

அப்போது நான் படித்துக் கொண்டிருந்ததால் எனது தாத்தா நடிக்க அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் மீனா. இந்த ஜோடிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் சீனா லண்டன் வரையிலும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Madhuvanthi Says About Rajini Muthu Movie

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ‘லத்தி’ எடுக்கும் விஷால்.; ‘கனெக்ட்’ ஆகும் நயன்தாரா

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ‘லத்தி’ எடுக்கும் விஷால்.; ‘கனெக்ட்’ ஆகும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன்.

இவர் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் வினய், சத்யராஜ், அனுபம்கெர் ஆகியோர் நடித்துள்ளனர். ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்பட டீசர் நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18ல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ‘கனெக்ட்’ படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதே நாளில் தான் விஷால் நடித்த ‘லத்தி’ படமும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘லத்தி’ படத்தை வினோத்குமார் இயக்க சுனைனா நாயகியாக நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ராணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டால் நான் ‘லத்தி’யை எடுப்பேன் என விஷால் அண்மையில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லத்தி

Vishal’s ‘Laththi’ and Nayanthara’s ‘Connect’ to clash for Christmas

கலியுகத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் .. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கலியுகத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் .. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனது அனைத்து திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பிற்காக சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இயக்குநர் பிரமோத் பேசுகையில், “மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கலியுகம் எதிர்கொள்ளும்.

போரின் பின் விளைவுகள் மற்றும் அதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சந்திக்கப் போகும் இழப்புகள் உட்பட பல சமகால நெருக்கடிகளை திரைக்கதை நிவர்த்தி செய்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சில பகுதிகளில் ‘அவதார் 2’ வெளியீட்டில் சிக்கல் . ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் சில பகுதிகளில் ‘அவதார் 2’ வெளியீட்டில் சிக்கல் . ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்’ இன்று இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

டிஸ்னி நேரடியாக இந்தியாவில் ‘தி வே ஆஃப் வாட்டர்’ விநியோகம் செய்கிறது.

தற்போது, ​​திரையரங்கு உரிமையாளர்களுக்கும் டிஸ்னி நிறுவனத்துக்கும் இடையேயான வருவாய்ப் பகிர்வு பிரச்னையால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உட்பட இந்தியாவின் சில முக்கிய இடங்களில் அவதார் 2 வெளியாகவில்லை .

பிரபல மல்டிபிளக்ஸ்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படத்தை வெளியிடுவதில்லை.

இந்த விவகாரத்தை அறிந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

More Articles
Follows