‘தர்மதுரை 2’ படத்திற்கு வாழ்த்துக்கள்.. ஆனா எனக்கு சம்பந்தமில்லை.. – சீனுராமசாமி

‘தர்மதுரை 2’ படத்திற்கு வாழ்த்துக்கள்.. ஆனா எனக்கு சம்பந்தமில்லை.. – சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் ஆகியோர நடிப்பில் வெளியான படம் ‘தர்மதுரை’.

யுவன் இசையமைத்த இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். கடந்த 2016ல் இப்படம் வெளியானது.

பெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இதன் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இதுபற்றி சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்…

“தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துக்கள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல.

ஆகவே அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்” என கூறியுள்ளார்.

Director Seenu Ramasamy about Dharma Durai 2

‘தில் ஹே கிரே’… பாலிவுட்டில் ரீமேக் படம் இயக்கும் ‘திருட்டுப் பயலே’ இயக்குனர்

‘தில் ஹே கிரே’… பாலிவுட்டில் ரீமேக் படம் இயக்கும் ‘திருட்டுப் பயலே’ இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தரமான படைப்புகளைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுசிகணேசன். தமிழில் இவர் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’, ‘கந்தசாமி’ “ திருட்டுப்பயலே “உட்பட ஏராளமான படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை.

தற்போது வெற்றிப் படமான ‘திருட்டுப்பயலே – 2’ படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் இந்தி டைட்டில் வெளியானது.

படத்துக்கு ‘தில் ஹே கிரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் இதன் அர்த்தம், இதயத்தின் நிறம் சாம்பல் .இந்த உலகத்தில் வெள்ளை மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

கறுப்பு மனம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். கிரே இதயம் என்றால் வெள்ளை, கறுப்பு என இரண்டும் கலந்தது. அப்படி ஒரு கிரே இதயம் படைத்த மனிதர்களின் கதையைத் தனித்துவமாக இதில் சொல்லியுள்ளார்கள்.

இந்தப் படம் தமிழில் வெளியான ‘திருட்டுப்பயலே 2 “படத்தின் நேரடி ரீமேக்காக வெளியாகவுள்ளது.

இதில் நாயகனாக வினித் குமார் சிங் நடிக்கிறார். தற்போது பாலிவுட் முன்னணி நடிகராக உள்ள இவரை ‘முக்காபாஸ்’ என்ற படத்தில் அனுராக் காஷ்யப் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக ஊர்வசி ரெளத்தேலா நடிக்கிறார். பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்குச் சமூக வலைத்தளங்களில் 4.5 கோடி ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் அக்‌ஷய் ஒப்ராய் நடிக்கிறார். இவர் ‘பீட்சா’ இந்தி ரீமேக்கில் நடித்தவர். தற்போது வில்லனாக பிரசன்னா நடித்த பாத்திரத்தில் நடிக்கிறார் நாயகியின் அம்மாவாக சீதா நடிக்கிறார்.

தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சீதா இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக இந்தியில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன், இயக்குநர் சுசி கணேசன் உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தமிழில் இவர் நடித்த துப்பறியும் வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். இது தவிர, ஏராளமான பாலிவுட் முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவைக் கவனிக்க, ராம் எடிட்டிங் செய்துள்ளார். சண்டைக் காட்சிகளை ‘ஸ்டன்’ சிவா அமைத்துள்ளார்.

தமிழ் டெக்னீஷியன்களான இவர்கள் அனைவரும் பாலிவுட் படத்துக்குப் பணியாற்றுவது சிறப்பு மிக்க அம்சம். பாலிவுட்டைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் இதில் கைகோர்த்துள்ளார்கள்.

பிரபல கன்னடத் தயாரிப்பு நிறுவனமான ‘சுரஜ் புரொடக்‌ஷன்’ எம்.ரமேஷ் ரெட்டி மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இவர் கன்னடத்தில் சிறந்த படத்துக்கான தேசிய விருது வாங்கியவர்.

‘திருட்டுப்பயலே2 “இந்தியில் உருவான விதம் சுவாரஸ்யமானது. பெங்களூர் தியேட்டரில் , தயாரிப்பாளர் எம்.ரமேஷ் ரெட்டி ‘திருட்டுப்பயலே 2 “படத்தைப் பார்த்துவிட்டு , இயக்குனரை அழைத்து பாராட்டியதோடு கன்னடம், தெலுங்கு ரைட்ஸ் வாங்கியுள்ளார். அதே முனைப்போடு இந்தியிலும் இந்தப் படத்தைத் தயாரித்து முடித்துள்ளார் .

இந்தியில் முதல் படமாக தயாரிப்பாளராக அடி எடுத்துவைக்கிறார் ரமேஷ் ரெட்டி . சுசி கணேசனின் தாயாரிப்பு நிறுவனமான 4 வி எண்டர்டெயின்மெண்ட் – சார்பாக மஞ்சரி சுசிகணேசன் இணைந்து தயாரிக்கிறார்.

சுசி கணேசனின் இரண்டாவது பாலிவுட் படைப்பாக வெளிவரவுள்ள இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.

காவல் துறையில் நடக்கும் சர்ச்சைக்குரிய தொலைபேசி ஒட்டுக்கேட்கும் அழைப்பால் ஒரு அழகான குடும்பம் எப்படி சிக்கிக்கொள்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.

The Hindi remake of Director SusiGanesan ‘s superhit Tamil film ThiruttuPayale2 has been titled DilHaiGray

நானி உடன் இணைந்த சாய் பல்லவி கீர்த்தி ஷெட்டி & மடோனா

நானி உடன் இணைந்த சாய் பல்லவி கீர்த்தி ஷெட்டி & மடோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ படப்புகழ் நாயகன் நானி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஷியாம் சிங்கா ராய்’.

இதுவரை சொல்லப்படாத கதைக் களத்தை தொட்டுள்ள இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன், உயர் தொழில்நுட்ப தரத்துடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பாளர் வெங்கட் பொயனப்பள்ளி கதையின் மீது முழு நம்பிக்கை வைத்து படத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கியுள்ளார்.

இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இதுவாகும்.

சமீபத்தில், இப்படத்தில் நானியின் இரண்டாவது பரிமாணமான வாசுவின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. பெங்காலி பாய் என்ற முதல் பரிமாணத்தைப் போலவே, இதுவும் எல்லா இடங்களில் இருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்திற்கான நானியின் இரண்டு தோற்றங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

இந்தப் படத்தின் மீதுள்ள பெரும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஷியாம் சிங்கா ராயை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு டிசம்பர் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளிவரும்.

நானிக்கு இது மிகப்பெரிய வெளியீடாக இருக்கும். இந்த அறிவிப்பை காதல் ததும்பும் போஸ்டர் ஒன்றின் மூலமாக வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர், நானி மற்றும் சாய் பல்லவிக்கு இடையேயான காதலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

நாயகிகளான சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோருக்கு மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் அது படத்திற்கு பெரிய பலமாக இருக்கும்.

மேலும், நான் ஈ (தெலுங்கில் ஈகா) போன்ற படங்களின் காரணமாக நானி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நன்கு அறியப்பட்டவர் ஆவார். சில நேரடி தமிழ் திரைப்படங்களிலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் தற்போது Post-production நிலையில் இருப்பதால், விளம்பர நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வி எஃப் எக்ஸ் காட்சிகள் படத்திற்கு மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளன.

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் முதல் தயாரிப்பான ஷியாம் சிங்கா ராய் கதையை சத்யதேவ் ஜங்கா எழுதியுள்ளார். மெல்லிசை பாடல்களின் நிபுணர் மிக்கி ஜே மேயர் இசையமைக்க, சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பை கையாள்கிறார்.

தேசிய விருது வென்ற கிருதி மகேஷ் மற்றும் மிகவும் திறமையான யாஷ் மாஸ்டர் படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளனர்.

ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா மற்றும் அபினவ் கோமடம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிப்பு: நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா, அபினவ் கோமடம், ஜிஷு சென் குப்தா, லீலா சாம்சன், மணீஷ் வாத்வா, பருண் சந்தா உள்ளிட்டோர்.

தொழில்நுட்ப குழு:
இயக்குநர்: ராகுல் சங்க்ரித்யன்
தயாரிப்பாளர்: வெங்கட் போயனப்பள்ளி
பேனர்: நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்
மூலக்கதை: சத்யதேவ் ஜங்கா
இசை: மிக்கி ஜே மேயர்
ஒளிப்பதிவு: சனு ஜான் வர்கீஸ்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
நிர்வாக தயாரிப்பாளர்: எஸ் வெங்கட ரத்னம் (வெங்கட்)
படத்தொகுப்பு: நவீன் நூலி
சண்டை: ரவிவர்மா
நடனம்: கிருதி மகேஷ், யாஷ்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

Nani and Sai Pallavi joins for Shyam Singha Roy

‘மான்ஸ்டர்’ கூட்டணியில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் & ‘பிக்பாஸ்’ ரமேஷ்

‘மான்ஸ்டர்’ கூட்டணியில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் & ‘பிக்பாஸ்’ ரமேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோக்கர், அருவி, காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜையுடன் சென்னையில் ஆரம்பமாகியது.

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என வித்தியாசமான கதையமைப்பில் வெற்றிப்படங்களை டைரக்ட் செய்தவர் நெல்சன் வெங்கடேசன். மீண்டும் ஒரு புதிய கதை வடியமைப்பில் இப்புதிய படத்தை இயக்குகிறார்.

இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ‘ஜித்தன்’ரமேஷ், கிட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஏற்கனவே இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுடன் ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், எடிட்டர் சாபு ஜோசப், கலை இயக்குநர் சிவசங்கர் மீண்டும் இப்படத்தில் கை கோர்க்கிறார்கள். நிர்வாக தயாரிப்பு:அரவிந்த்ராஜ் பாஸ்கரன்.

படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

தயாரிப்பு: S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு.

Aishwarya Rajesh and Bigg Boss Ramesh joins for a new film

தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு…’ சூப்பரூ..; இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய ராம்ஸ் & ஜான் விஜய்

தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு…’ சூப்பரூ..; இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய ராம்ஸ் & ஜான் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டேக் டைவர்ஷன்’ என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார்.

80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல் கதையாக இது உருவாகி உள்ளது.

இப்படத்திற்காக தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு ‘என்கிற கானா பாடல் இணைய உலகில் லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

அந்தப் பாடலுக்குப் பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி நடனமாடியிருக்கிறார்.அதே போல ‘யாரும் எனக்கில்லை ஏனடி ? ‘ என்கிற காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இப்படத்தில்’பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார் நடிக்க, நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளார்கள்.

ஜான் விஜய் தான் வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு – விது ஜீவா.

ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழுநீள எண்டர்டெய்னராக இது உருவாகி உள்ளது.

படத்தைப் பார்த்த நாயகன் ராம்சும் ஜான்விஜய்யும் படத்தில் உள்ள கலகலப்பையும் கமர்சியல் அம்சங்களையும் கண்டு வியந்து இயக்குநரைக் கட்டிப்பிடித்துப் பாராட்டியுள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Music director Deva’s Gaana song for ‘Take Diversion’ is declared a Chartbuster now

ஒரு கோடி ரூபாய் செலவில் ‘பாடாத பாட்டெல்லாம்….’ சாங் ரீமிக்ஸ்

ஒரு கோடி ரூபாய் செலவில் ‘பாடாத பாட்டெல்லாம்….’ சாங் ரீமிக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.

படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர்கள்

ராகவா லாரன்ஸ்
பிரியா பவானி சங்கர்
நாசர்
பூர்ணிமா பாக்யராஜ்

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – 5 Star கிரியேஷன்ஸ்
இசை – G.V.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
கதை, திரைக்கதை – K.P.திருமாறன்
இயக்கம் – 5 ஸ்டார் S.கதிரேசன்

Raghava Lawrence in #Rudhran Will have old song “Paadatha Pattelam Pada Vanthal” Remix

More Articles
Follows