கார்த்தியுடன் திருமணம்; சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாட்னா

கார்த்தியுடன் திருமணம்; சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாட்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

satna titus karthiதமிழில், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார் சட்னா டைட்டஸ்.

இப்படத்தை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டு அதிரடியான லாபம் பார்த்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்நிறுவனத்தை சேர்ந்த கார்த்தி என்பவரும் நாயகி சாட்னாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் வெளியானது.

தற்போது இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

வரும் 2017 ஜனவரியில் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெறும்” என தெரிவித்துள்ளனர்.

 

satna titus Scan Letter Image

சந்தானத்துக்கு ஹிட் கொடுத்தவருடன் இணையும் ஜிவிபிரகாஷ்

சந்தானத்துக்கு ஹிட் கொடுத்தவருடன் இணையும் ஜிவிபிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash nextஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ மற்றும் ‘ப்ரூஸ்லீ’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இதனையடுத்து, ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம், சசி இயக்கத்தில் ஒரு படம், சரத்குமாருடன் ‘அடங்காதே’ என்றொரு படம் என பிஸியாக இருக்கிறார் ஜிவி.

இதனைத் தொடர்ந்து லொள்ளு சபா புகழ் ராம்பாலா இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவர் சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ என்ற சூப்பர் ஹிட்டு படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபன் இப்படத்தை தயாரிக்கிறார்.

‘கொடி’ நிலைமை என்ன..? ட்விட்டரில் தனுஷ் தகவல்

‘கொடி’ நிலைமை என்ன..? ட்விட்டரில் தனுஷ் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush kodiபிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இவரது அடுத்த படமான கொடி பற்றிய தகவல்களை சற்றுமுன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் அனைத்து பாடல்களும் தயார் நிலையில் உள்ளது.

அனைத்து பாடல்களையும் கேட்டேன்.

தொடரி ரிலீஸை தொடர்ந்து கொடி பட பாடல்கள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் செப்டம்பர் இறுதியில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்வின் விவாகரத்து பற்றி சௌந்தர்யா ரஜினி ஓபன் டாக்

அஸ்வின் விவாகரத்து பற்றி சௌந்தர்யா ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soundarya Rajini ashwinரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு வேத் என்ற ஆண் குழந்தை உள்ளது.

தற்போது கருத்து வேறுபாடு இருவரும் விவாகரத்து பெற உள்ளனர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில், இதுகுறித்து சௌந்தர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“என் விவாகரத்து பற்றி வரும் செய்திகள் உண்மையே. நான் ஒரு வருடமாக கணவரை பிரிந்துதான் வாழ்கிறேன்.

விவகாரத்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

 

பின்குறிப்பு : தமிழகத்தை சேர்ந்த பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் கணவரின் பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வார்கள்.

ஆனால் சௌந்தர்யா தனது திருமணத்திற்கும் பிறகும் தன் அப்பாவின் பெயரை சேர்த்து சௌந்தர்யா ரஜினிகாந்த் என்றே குறிப்பிட்டு வந்தார்.

இது தொடர்பான கேள்விகளுக்கு ‘நான் என்றுமே ரஜினியின் மகள் என்று சொல்வதையே விரும்புகிறேன்’ என்று சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

soundarya rajini twitter

 

விக்னேஷ் சிவன் படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் முடிவானது

விக்னேஷ் சிவன் படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் முடிவானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

அனிருத் இசையமைக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இதில் கேஎஸ் ரவிக்குமார், சரண்யா, சதீஷ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்பதை பார்த்தோம்.

இதனையடுத்து சூர்யாவின் 36வது படத்தை காஷ்மோரா, ஜோக்கர் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதனை சற்றுமுன் ட்விட்டரில் இருதரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முத்தையா இயக்கத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிப்பார்கள் என சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது.

இந்த புது அறிவிப்பினால், ஒருவேளை இதுதான் சூர்யா 36 படமாக இருக்குமோ? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

 

சமுத்திரக்கனி-ரம்யா இணையும் படத்திற்கு இப்படி ஒரு பெயரா?

சமுத்திரக்கனி-ரம்யா இணையும் படத்திற்கு இப்படி ஒரு பெயரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aandevadhaiபொதுவாக பெண்களைத்தான் தேவதை என்பார்கள். ஆனால் ஆண் தேவதை என்ற பெயரில் என ஒரு படம் தயாராக உள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட சமுத்திரக்கனி, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக ஜோக்கர் படத்தில் அருமையான நடிப்பை வழங்கிய ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.

தாமிரா இப்படத்தை இயக்குகிறார். இவர் பாலச்சந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கியவர்.

கவின், கஸ்தூரி, ‘பூ’ ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா, யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

‘சிகரம் சினிமாஸ்’ என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து பக்ருதீன் என்பவர் இணைந்து இப்படத்தை இயக்குனர் தாமிராவே தயாரிக்கிறார்.

ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன மாதிரியான வேறுபாடுகள் இருக்கும் என்பதை உணர்த்த இப்படம் வருகிறது.

More Articles
Follows