உதயநிதி ரூட்டை பாலோ செய்கிறாரா விஜய் ஆண்டனி.?

உதயநிதி ரூட்டை பாலோ செய்கிறாரா விஜய் ஆண்டனி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antonyதயாரிப்பாளராக இருந்த உதயநிதி படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

இவர் நாயகனாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து ஆகிய படங்களை இவரே தன் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெயரில் தயாரித்திருந்தார்.

ஆனால் சமீப காலமாக இவர் மற்ற நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் நடித்து வருகிறார்.

பொதுவாக எம் மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர் உள்ளிட்ட படங்கள் மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள்தான்.

அதுபோல் விஜய் ஆண்டனியும் தன் ரூட்டை மாற்றிவிட்டதாக தெரிகிறது.

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

நான், சலீம், பிச்சைக்காரன், எமன் உள்ளிட்ட படங்களை தயாரித்து நடித்து இசையமைத்திருந்தார்.

விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரிப்பு பணிகளை கவனித்து வருகிறார்.

அண்மையில் வெளியான அண்ணாதுரை படத்தை ராதிகா சரத்குமாருடன் இணைந்து தயாரிந்திருந்தார்.

தற்போது அம்மா கிரிசேயசன்ஸ் டி. சிவா தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது இங்கே கவனித்தக்கது.

Did Vijay Antony follows Udhayanithi route as producer

காலாவுக்கு தடையா.? கிடையவே கிடையாது; கோர்ட் தீர்ப்பு

காலாவுக்கு தடையா.? கிடையவே கிடையாது; கோர்ட் தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chennai High court rejected petition to ban Kaala aka Karikaalan movieரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’.

இப்படத்துக்கு ‘கரிகாலன்’ என டேக்லைன் வைக்கப்பட்டுள்ளது.

‘கரிகாலன்’ என்ற தலைப்பும், அதன் மூலக்கருவும் தன்னுடையது; இந்தப் பெயரை தென்னிந்திய வர்த்தக சபையிலும் பதிவு செய்துள்ளேன் என்று கூறி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கடந்த வருடமே ஐகோர்ட்ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், இதுகுறித்து ரஜினிகாந்த், பா.ரஞ்சித், தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

அவர்களும் தங்கள் விளக்கத்தை அளித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காலாவிற்கு தடைகோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Chennai High court rejected petition to ban Kaala aka Karikaalan movie

நீட் தேர்வு மாணவர்களுக்கு உதவ ஜிவி.பிரகாஷின் மொபைல் ஆப்

நீட் தேர்வு மாணவர்களுக்கு உதவ ஜிவி.பிரகாஷின் மொபைல் ஆப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash launching new mobile app to help NEET Exam studentsதமிழக இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிநடத்தும் உரிமை போராட்டம், காவிரி நீருக்காக கண்ணீர் போராட்டம் என எல்லா போராட்டத்திலும் முதல் நடிகராக மனிதராக ஆதரவு கொடுத்து போராட்ட களத்திற்கு நேரடியாக வருபவர் ஜிவி. பிரகாஷ்.

தற்போது தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் இலவச மொபைல் ஆப் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

“நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்குச் சென்றபோது, இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக் கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்தேன்.

என் நண்பர்களுடன் பேசி, வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து, நீட் தொடர்பாக மூன்று மாதங்களாக வரைவுத்திட்டத்தைத் தயாரித்து, தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாகப் பயன்பெறும் வகையில் மென்செயலி (மொபைல் அப்ளிகேஷன்) உருவாகி வருகிறது.

தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பணம் என்ற ஒற்றைக் காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படையக் கூடாது என்ற அடிப்படையில் எங்களால் முடிந்த முயற்சி.

இன்னும் சில மாதங்களில் பணி முடிந்து இந்த மென்செயலி பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.

GV Prakash launching new mobile app to help NEET Exam students

நக்கத் கான் என்ற குஷ்பூ பாஜக-வுக்காக நக்கல் கானாக மாறிட்டாரே!

நக்கத் கான் என்ற குஷ்பூ பாஜக-வுக்காக நக்கல் கானாக மாறிட்டாரே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushbu Sundar changed her name as Nakhatkhan for BJPவட இந்தியாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் குஷ்பு.

எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒரு பெயரை தமிழகத்தில் இவர் பெற்றார். இவருக்காக தமிழக ரசிகர்கள் கோயில் கட்டி வழிபட்டனர்.

இவர் முஸ்லீம் பெண்ணாக இருந்தாலும் இயக்குனர் சுந்தர். சியை திருமணம் செய்துக் கொண்டு தமிழகத்தின் மருமகளாக மாறிவிட்டார்.

தற்போதும் சினிமா, டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினாலும் காங்கிரஸ் கட்சிக்காக அரசியல் உலகில் பரபரப்பாக பணியாற்றி வருகிறார்.

அதுபோல் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் உடனே ட்விட்டரில் பதிவிட்டு விடுவார்.

அவரை நோக்கி பல விமர்சனங்கள் வந்தாலும் அதற்கும் சளைக்காமல் பதிலடி கொடுப்பார்.

ட்விட்டரில் குஷ்பு சுந்தர் என்ற பெயரில் செயல்பட்டு வந்தார். ஆனால் தற்போது தனது நிஜ பெயரான நக்கத் கான் என குறிப்பிட்டு பா.ஜ.க.,வுக்காக என மாற்றியிருக்கிறார்.

அதாவது பாஜகவினருக்கு மட்டும் எனது பெயர் நக்கத்கான் என்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Khushbu Sundar changed her name as Nakhatkhan for BJP

ஜோ-ராதாமோகன் படத்தலைப்புக்கு போட்டி அறிவித்துவிட்டு இப்படி செய்யலாமா?

ஜோ-ராதாமோகன் படத்தலைப்புக்கு போட்டி அறிவித்துவிட்டு இப்படி செய்யலாமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jyothika Vidaarth Radha Mohan film titled Kaatrin Mozhiவித்யா பாலன் நடித்த பெரும் ஹிட்டான ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கை ராதா மோகன் இயக்குகிறார்.

இதன் நாயகனாக விதார்த் நடிக்க, கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்கவுள்ளார்.

இப்படத்தை போஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு குறித்த போட்டி அறிவிப்பு வெளியானது.
அதாவது…

1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.

2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.

3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.
என அறிவித்து இருந்தனர்.

படத்தின் தலைப்பை சரியாக சொன்னால் அவர்கள் சூட்டிங் ஸ்பாட் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் படத்தின் தலைப்பை காற்றின் மொழி என அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார்.

போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார் என்று அதில் அறிவித்து இருந்தனர்.

ஆனால் இன்று ஏப்ரல் 19ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி அறிவிப்பு வெளியான செய்தி…

https://www.filmistreet.com/cinema-news/guess-jyothika-radha-mohan-film-title-and-be-their-vip-guest/

Jyothika Vidaarth Radha Mohan film titled Kaatrin Mozhi

Vidharth kaatrin mozhi

கணவர் ராஜசேகருக்கு நடிகைகளை சப்ளை செய்தாரா ஜீவிதா..?

கணவர் ராஜசேகருக்கு நடிகைகளை சப்ளை செய்தாரா ஜீவிதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Activist Sandhya accuses Jeevitha Rajasekhar of sending girls to her husbandதமிழ் பட உலகில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜீவிதா.

இவர் தெலுங்கு படங்களில் நடிக்கும்போது நடிகர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஜீவிதாவும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஸ்ரீரெட்டி மீதான பாலியல் புகார் குறித்து சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய சமூக ஆர்வலர் சந்தியா, இளம்பெண்களை கட்டாயப்படுத்தி, கணவர் ராஜசேகரின் படுக்கைக்கு ஜீவிதா அனுப்பியதாக குற்றம் சாட்டினார்.

இது பட உலகில் பரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளித்து ஜீவிதா கூறியதாவது…

“என்மீது சந்தியா கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. திரையுலகினரை இழிவாக நினைக்கும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.

யாரையும் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்து செல்ல நடிகைகள் ஒன்றும் தெரியாத குழந்தைகள் இல்லை. எல்லா பெண்களுமே 20 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்.

தெலுங்கு திரையுலகினரை நடிகை ஸ்ரீரெட்டி களங்கப்படுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக ஏமாறி வருவதாக கூறி வருகிறார்.

அவர் என்ன குழந்தையா..? ஒரு வீடியோவில் 24 மணிநேரமும் செக்ஸ் மூடிலேயே இருப்பதாக ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். இதற்கு என்ன அர்த்தம-

நடிகர் ராணாவின் தம்பியை முத்தமிட்டு போட்டோ எடுத்துள்ளார். அவர்கள் விரும்பியே முத்தமிட்டுள்ளனர்.

மூத்த நடிகைகள் ஸ்ரீரெட்டிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

அதிக முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் யாரை நடிக்க வைத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்று நினைக்கிறாரோ அவரைத்தான் ஹீரோயினாக நடிக்க வைப்பார்கள். இவருக்கு எப்படி சான்ஸ் தரமுடியும்.”

இவ்வாறு ஜீவிதா தெரிவித்துள்ளார்.

Activist Sandhya accuses Jeevitha Rajasekhar of sending girls to her husband

More Articles
Follows