தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் குறும்படங்களில் நடித்தபோது அவருடைய பயணங்களில் சேர்ந்த பயணித்தவர் சதீஷ்.
அதன்பின்னர் எதிர்நீச்சல், மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர்.
இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் நடிக்கிறாராம் சதீஷ்.
இதை இவரே ட்விட்டரில் உறுதிசெய்துள்ளார்.
24ஏஎம் ஸ்டூடியோ தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கவுள்ள புதிய படம்தான் அது.
அதில் நயன்தாரா, பஹத்பாசில் ஆகியோர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.