ரஜினியுடன் நடித்தேன்; பிறவி பலனை அடைந்தேன்… சந்தோஷத்தில் சமுத்திரக்கனி

ரஜினியுடன் நடித்தேன்; பிறவி பலனை அடைந்தேன்… சந்தோஷத்தில் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala rajini samuthirakaniநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி ரசிகர்களிடையே பிரபலமானவர் சமுத்திரக்கனி.

தற்போது தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி2 படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசியபோது காலா பட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகிறேன்.

ரஜினியுடன் நான் நடித்த அந்த ஒரு காட்சியிலேயே நான் பிறவி பலனை அடைந்ததாக உணர்கிறேன்.” என தெரிவித்தார்.

Samuthirakani shares his experience working with Rajini in Kaala

தனுஷுடன் பணிபுரியும்போது நிறைய கற்றுக் கொண்டேன்.. சௌந்தர்யா ரஜினி

தனுஷுடன் பணிபுரியும்போது நிறைய கற்றுக் கொண்டேன்.. சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush soundarya rajiniசௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ள தனுஷின் விஐபி2 படம் வருகிற ஜீலை 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இப்படக்குழுவினர்.

அப்போது சௌந்தர்யா ரஜினி பேசுகையில்..

“தனுஷ் எனக்கு சீனியர். ஒரு நல்ல மெண்ட்டார்.

அவருடன் பணியாற்றும் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

ஒரு வெற்றிப் பெற்ற வி.ஐ.பி படத்தின் இரண்டாம் பாகத்தை எனக்கு கொடுத்த அவருக்கு நன்றி.

என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கஜோல் மேடத்திற்கும் நன்றி” என பேசினார் சௌந்தர்யா.

I learned lot while working with Dhanush says Soundarya Rajini

விஐபி2 படம் நான்கு பாகங்கள் கூட உருவாகும்… தனுஷ் தகவல்

விஐபி2 படம் நான்கு பாகங்கள் கூட உருவாகும்… தனுஷ் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushகோச்சடையானை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விஐபி2.

இதில் தனுஷ் உடன் அமலாபால், விவேக், சமுத்திரக்கனி, கஜோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டான் இசையமைத்துள்ள இதன் டிரெய்லர் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் வருகிற ஜீலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது… “வி.ஐ.பி-1 மற்றும் வி.ஐ.பி-2 பாகம் என இரண்டுமே ஒரு ஹீரோவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது அல்ல.

`வேலையில்லா பட்டதாரி-2′ ஒரு ஆணாதிக்க படம் இல்லை.

முதல் பாகத்தில் அம்மாவை இழந்த மகன், அவனது வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறான் என்பதை காட்டியிருந்தோம்.

இதில் வேலையை இழந்து தவிக்கும் திருமணமான இளைஞன் படும் கஷ்டங்கள் மற்றும் அவனது முயற்சிகள் குறித்து சொல்லியிருக்கிறோம்.

கஜோலின் கேரக்டர்தான் படத்தின் அச்சாணி. அவரை தவிர வேறு யாராலும் அதை செய்ய முடியாது.

இப்படத்தின் மூன்றாவது பாகம், நான்காவது பாகமும் வெளிவரும்.” என்று தனுஷ் பேசினார்.

மேலும் பவர் பாண்டி2 படத்தின் ஸ்கிரிப்ட்டை ரெடி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

VIP2 sequels will be continued says Dhanush

தனுஷை மியூசிக் மெண்டல் என திட்டிய சௌந்தர்யா ரஜினி

தனுஷை மியூசிக் மெண்டல் என திட்டிய சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush sean roldanதனுஷின் ஆஸ்தான மியூசிக் டைரக்டர் யார்? என்று கேட்டால் யாராக இருந்தாலும் சொல்லிவிடுவார்கள் ஷான் ரோல்டன்தான்.

தனுஷ் முதன்முறையாக இயக்கிய பவர் பாண்டி படத்திற்கு இவர்தான் இசைமைத்திருந்தார்.

மேலும் தற்போது உருவாகியுள்ள விஐபி2 படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ரீரிக்கார்ட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஓர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் இதன் இயக்குனர் சௌந்தர்யா ரஜினி.

அதில் விஐபி2 படத்தின் ரீரிக்கார்ட்டிங் பணிகளை தனுஷ் சார் மற்றும் ஷான் ரோல்டனுடன் செய்து வருகிறேன்.

இவர்கள் இருவரும் சரியான மியூசிக் மெண்டல்கள்தான்.

மேலும் ஷான் எப்போதும் மொக்கை ஜோக் அடிப்பதில் மன்னன் எனவும் பதிவிட்டுள்ளார்.

Soundarya Rajini scold Dhanush and Sean Roldan as Music Mentals

soundarya rajnikanth‏Verified account @soundaryaarajni 13m13 minutes ago
Making #Music with @dhanushkraja sir & @RSeanRoldan #LaughRiot #GroupStudies #TeamWork #MokkaiJokeMananSean #MusicMentals #VIP2

அடுத்த படத்தை கன்பார்ம் செய்தார் டைரக்டர் ஷங்கர்

அடுத்த படத்தை கன்பார்ம் செய்தார் டைரக்டர் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankar confirmed his next movieஇயக்குனர் ஷங்கர் ஒரு சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதுபோல், காதல், முதல்வன், வெயில், ஈரம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி உள்ளிட்ட வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தை மிகப்பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

தான் தயாரித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் வெளியாகி 11 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இப்படத்தை சிம்பு தேவன் இயக்க, வடிவேலு நடிக்க, ஷங்கர் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Shankar Shanmugham‏Verified account @shankarshanmugh
11th year of Pulikesi .Part 2 to start soon.

காலாவில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறீர்களா.? தனுஷ் விளக்கம்

காலாவில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறீர்களா.? தனுஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush open talk about acting in Kaala or notவிஐபி2 படத்தின் பிரஸ் மீட்டில் இதன் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது…

காலாவில் இளவயது ரஜினியாக நான் நடிக்கிறேனா? என தெரியாது.

அதை டைரக்டர் ரஞ்சித்தான் சொல்லவேண்டும். அவர் அழைத்தால் நான் நடிப்பேன். என்று பேசினார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினிகாந்த், சென்னை திரும்பியவுடன் காலா படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Dhanush open talk about acting in Kaala or not

More Articles
Follows