‘ரஜினி ரசிகர்களை ஏமாற்றினார் ரஞ்சித்.’ – சமுத்திரக்கனி

‘ரஜினி ரசிகர்களை ஏமாற்றினார் ரஞ்சித்.’ – சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakani kabali rajiniசினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ரஜினியின் கபாலி படம் இன்று வெளியானது.

ரசிகர்களைப் போல சினிமா நட்சத்திரங்கள் இப்படத்தை பார்க்க பெரியளவில் திரையரங்குகளில் குவிந்தனர்.

இந்நிலையில் கபாலி படம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் ரசிகர்களை ரஞ்சித் ஏமாற்றிவிட்டார் என்றும் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சிங்கம் 3 படத்திற்காக காத்திருக்கிறேன். அது நிச்சயம் கவரும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இது நிஜமாகவே சமுத்திரக்கனியின் ட்விட்டர் கணக்குதானா? இல்லை அவரது பெயரில் யாராவது இது போன்று ட்வீட்களை இடுகிறார்களா? என தெரியவில்லை.

ஆனால் நடிகர் சமுத்திரக்கனி என்ற பெயரிலேயே இந்த கணக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கபாலி ரிலீஸ் ஆன நாளிலேயே நெட்டிலும் லீக்

கபாலி ரிலீஸ் ஆன நாளிலேயே நெட்டிலும் லீக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kabali danceஉலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கபாலி இன்று வெளியானது.

இப்படத்தின் டிக்கெட் விற்பனை எவரும் எதிர்பாரா வகையில் ஜெட் வேகத்தில் பறந்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் விமர்சனங்கள் வரும் வேளையிலேயே படத்தின் நல்ல பிரிண்ட் காட்சிகளும் இணையத்தில் லீக்காகி விட்டன.

தற்போது 110 நிமிடங்கள் ஓடக்கூடிய கபாலி காட்சிகளின் தியேட்டர் பிரின்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில்தான் இதுபோன்று படங்களை வெளியிடும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதனையும் மீறி கபாலி படம் நெட்டில் லீக்காகி இருப்பது ரஜினி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.

கபாலி டிக்கெட் காலி… உயிரை விட்ட ரஜினி ரசிகர்..!

கபாலி டிக்கெட் காலி… உயிரை விட்ட ரஜினி ரசிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini real life imagesஇன்று உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி வெளியானது.

இப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரசிகர்களின் ஓவர் ஆர்வத்தால், டிக்கெட் கட்டணமும் உயர்ந்து விட்டது.

இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் கபாலி படத்திற்காக டிக்கெட் வாங்க முயற்சித்துள்ளார்.

ஆனால், டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதால் மனவருத்தம் அடைந்த அவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கபாலி விமர்சனம்…. இணையத்தில் முதல் விமர்சனம்.

கபாலி விமர்சனம்…. இணையத்தில் முதல் விமர்சனம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali posterரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும்.

கபாலியில் அந்த எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்து விண்ணைத் தொட்டு விட்டதாக உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகியுள்ளன.

லிங்கா படத்திற்கு பிறகு கிட்டதட்ட 18 மாதம் கழித்து, ரஜினியை காண ரசிகர்கள் தவம் கிடந்துள்ளனர்.

அவர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்துவிட்டதா என்பதை  பார்ப்போம்…

கதைக்களம்…

மலேசியாவில் வசிக்கும் தமிழ் நேசன் (நாசர்) ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க நினைக்கிறார். இதனை எதிர்க்கும் சிலர் நாசரை கொல்ல, கபாலி (ரஜினி) உருவெடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் எதிரிகளை இவர் வெட்டி கொல்ல ஜெயிலுக்கு செல்கிறார். எனவே, எதிர்ப்பு இல்லாத 43 என்ற கேங்ஸ்டர் கூட்டம் பெரியளவில் வளர்கிறது.

அதன்பின்னர் 25 வருடங்களுக்கு பிறகு விடுதலையாகும் கபாலி தன் மக்களுக்கு என்ன செய்கிறார்? என்பதே மீதிக் கதை.

கதாபாத்திரங்கள்…

ரஜினிக்கே உரித்தான மாஸ் தோற்றம். வயதானாலும் அவரது ஸ்டைலில் குறைவில்லை. கண்ணாடி அணிந்திருந்தாலும் அதை டீமீறியும் அவரது பார்வையில் ஒரு பவர் இருக்கத்தான் செய்கிறது.

ஜெயிலில் இருந்து விடுதலையானதும் நேராக வில்லனின் அடியாளை சந்திக்கும் காட்சிகள் மாஸ். அடி தூள் கிளப்பியிருக்கிறார். பின்னர் மகளுக்காக ஏங்குவதும் மனைவியை தேடி அலைவதும் ரஜினி கண் கலங்க வைக்கிறார்.

ஆனால் பாட்ஷா மாதிரியான ஒரு மாஸ் ஆக்ஷன் இனி வருமா? என தெரியவில்லை.

ரஜினியின் மகளாக தன்ஷிகா பளிச்சிடுகிறார். தந்தையை காப்பாற்ற நினைப்பது முதல் ஒரு ஆண் பிள்ளையாக மாறியிருக்கிறார்.

ரித்விகா கொஞ்சம் நேரம் வருகிறார். அதில் தன் முத்திரை பதிக்க முயற்சித்திருக்கிறார்.

கலையரசன், ஜான்விஜய், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் பொருத்தமான (???) தேர்வு.

கிஷோர் தன் பாத்திரம் அறிந்து அடக்கி வாசித்திருக்கிறார். ஆனால் டீசரில் பார்த்த அந்த வசனம்.. யாருடா? அந்த கபாலி. வரச்சொல்லுடா என்ற டயலாக் படத்திற்கு வேலையில்லை. கபாலியை நன்றாக தெரிந்தவர் எப்படி அவ்வாறு சொல்ல முடியும்.

வில்லன் வின்ஸ்டன் சவோ… பேசவே இல்லை. அப்படியே பேசினாலும் தமிழக ஜனங்களுக்கு புரிய போவதில்லை.

நாசருக்கு பெரிதாக வேலையில்லை. ரஜினி படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தால் யாருக்கு பெரிதாக வேலை இருக்காது. இதிலும் அதேதான்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜி. முரளியின் ஒளிப்பதிவில் மலேசியா காட்சிகளும் பிரம்மாண்டங்களும் ஓகே. ஆனால் எடிட்டர் பிரவீண் முதல் பாதியை நிறையவே வெட்டியிருக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசை ஓகே. ஆனால் பாடல்கள் நிச்சயமாக மனதில் நிற்காது.

ரஜினியின் இன்ட்ரோ பாடல் போல வரும்… ‘உலகம் ஒருவனுக்கா” தோன்றினாலும் எந்தவிதமான ஆட்டத்தையும் ரசிகர்களிடம் காண முடியவில்லை.

படத்தின் ப்ளஸ்…

  • ரஜினி ரஜினி ரஜினி – 3 விதமான ரஜினியின் தரிசனம்
  • தன்ஷிகா மற்றும் ராதிகா ஆப்தேவின் நடிப்பு
  • காந்தி சட்டை போடாததற்கும் அம்பேத்கர் கோட் போட்டதற்கும் அரசியல் இருக்கு.. இதுபோன்ற சில வசனங்கள்

படத்தின் மைனஸ்…

  • இது ரஜினியின் மாஸ் ஆக்ஷன் படமில்லை.
  • மகிழ்ச்சி இருக்கட்டும். அதற்காக வில்லன் கோபமாக பேசினாலும் மகிழ்ச்சியா?
  • டான் கதையில் இவ்வளவு சென்டிமெண்ட்ஸ் தேவையா?
  • பாடல்கள் வருவதும் போவதும் தெரியவில்லை.

எதற்காக இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டத்தை கூட்டியிருக்கிறார் ரஞ்சித் என தெரியவில்லை. ராம்திலக் எதற்காக வருகிறார்? இவரை போல நிறைய மலேசிய முகங்கள் வருகிறார்கள்.

ரஜினிக்கென்று எப்பவும் கிராமத்து ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படம் முழுக்க மலேசியா, கிளப், தாய்லாந்து பார்ட்டி என் இருப்பதால் நிச்சயம் அவர்களை கவராது.

மேலும் வில்லன்கள் மலாய் மொழி பேசிக்கொண்டிருக்கும்போது தமிழில் சப் டைட்டில் போடுவது ஓகேதான். ஆனால் படிக்காதவர்களின் நிலைமை? இது இயக்குனருக்கு தெரியாதா?

கபாலி… மகிழ்ச்சி 60%

கபாலி டிக்கெட்டுக்கு ரூ. 5000 கொடுத்த கவர்னர் கிரண்பேடி

கபாலி டிக்கெட்டுக்கு ரூ. 5000 கொடுத்த கவர்னர் கிரண்பேடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kiranbediதமிழகத்தை தாண்டிய ரஜினியின் கபாலி புயல் புதுச்சேரியை விட்டு வைக்குமா என்ன?

அங்கு அம்மாநில கவர்னரே கபாலி படத்திற்கு இலவச டிக்கெட்டுகளை கொடுக்க முன்வந்தார்.

பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கும், தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டுபவர்களுக்கு ‘கபாலி’ படத்தின் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

எனவே இதற்காக 500 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 145 குடும்பங்களில் கழிவறை கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி டிக்கெட்டுகளுக்கான ஆன தொகையில் கவர்னர் கிரண்பேடி ரூ. 5௦௦௦ வழங்கியிருக்கிறாராம்.

இவர் தவிர கவர்னர் மாளிகையின் மற்ற ஊழியர்களும் பணம் கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.

கபாலி பிரீமியர் ஷோ Live Updates

கபாலி பிரீமியர் ஷோ Live Updates

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய கபாலி படத்தின் முதல் ஷோ மலேசியாவில் தொடங்கிவிட்டது.

தமிழகத்தை விட மலேசியா ரசிகர்கள் அதிர வைத்து வருகின்றனர். மலாய் மொழியில் ரிலீஸ் ஆனாலும் தமிழ் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் கடவுள் இருக்கான் குமாரு படக்குழுவினர் தற்போது படத்தை பார்த்து வருகின்றனர்.
kabali malaysia car

இயக்குனர் ராஜேஷ், தயாரிப்பாளர் சிவா உள்ளிட்டோர் அங்கு உள்ளனர்.

கபாலி படத்தை பார்க்க திருவிழா போல கூட்டம் கூடி வருகிறது.rajini stand

குழந்தைகளுக்கு கபாலி டீ ஷர்ட் அணிந்து தீபாவளி ஆடை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

ரசிகர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

kabali tshirt

தலைவர் தோன்றும் காட்சிகளுக்கு விசில் சத்தம் விண்ணை பிளக்கிறதாம்.

இதுவரையும் இனிமேலும் வரும் படங்களுக்கு இப்படி ஒரு ஓப்பனிங் கிடைக்குமா? என திரையுலகினரே ஆச்சரியப்பட்டு நிற்கின்றனர்.

ஒரு திருவிழா போல கூட்டம் அலை மோதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

More Articles
Follows