தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மோகன் ராஜா இயக்கும் படத்தை முடித்துவிட்டு இதில் நடிக்கவிருகிறார் சிவா.
இந்நிலையில் இப்படத்தில் பணிபுரிய உள்ள கலைஞர்களை இப்படத்தின் தயாரிப்பாளர் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்.
இமான் இசையைமைக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். கலையை முத்துராஜ் கவனிக்க, சண்டைப் பயிற்சியை அனல் அரசு கவனிக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார்.
இதில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார்.