‘புஷ்பா பார்ட் 2’ படத்தில் சாய்பல்லவி.; அட செம கேரக்டரா இருக்குதே.!

‘புஷ்பா பார்ட் 2’ படத்தில் சாய்பல்லவி.; அட செம கேரக்டரா இருக்குதே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ‘புஷ்பா‘.

இந்த படத்தின் முதல் பாகம் 2021 டிசம்பர் மாதத்தில் வெளியானது. இதன் கிளைமாக்ஸில் அல்லு அர்ஜுன் மற்றும் பஹத்பாசில் மோதல் ஆரம்பமானது.

எனவே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியது.

இந்த நிலையில் புஷ்பா படத்தின்
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இயக்குனர் சுகுமார் இயக்கிவரும் இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 2ம் பாகத்தில் பழங்குடி பெண் கேரக்டரில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாய்பல்லவியின் கண்களை பின் தொடர்ந்தேன்.; இறுதியில் சம்மட்டி அடி.. – சக்திவேலன்

முதல் பாகத்தில் ஆண்ட்ரியா குரலுக்கு சமந்தா ஆடிய ‘ஓ சொல்றியா மாமா…’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

எனவே இரண்டாம் பாகத்திலும் ஒரு அதிரடியான ஐட்டம் சாங் ஒன்றை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Actress Sai Pallavi is part of Pushpa 2

பெண்களுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் புதிய ப(பா)டம்

பெண்களுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் புதிய ப(பா)டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எக்கசக்கமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இருந்த போதிலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு மட்டும் தான் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.

அந்த வகையில் தற்போது சமூகத்திற்கும் பெண்களுக்கும் தேவையான கதைக்களத்துடன் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

ஏமாற்றுக்காரர்கள், பிளாக் மெயில் செய்பவர்களிடம் இருந்து பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகிறது.

ஈஷான் என்ற அறிமுக நடிகர் ஹீரோவாகவும் பிரனாலி என்ற அறிமுக நடிகை நாயகியாகவும் நடிக்கும் இந்த படத்திற்கு மாரிச்செல்வன் கதை எழுத ஈஷான் நடிப்பது மட்டுமில்லாமல் திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

ஈஷான்

எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வழங்க கே எஸ் விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். மா தியாகராஜன் என்பவர் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

மேலும் இந்த படத்தில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைந்து படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

ஈஷான்

A new film  to create awareness for women

தனுஷின் 3 படம் ரீ-ரிலீஸ்.; ஸ்ருதிஹாசனை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்

தனுஷின் 3 படம் ரீ-ரிலீஸ்.; ஸ்ருதிஹாசனை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த “3”படம் மீண்டும் ஆந்திராவில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்பை அனைவரும் பாராட்டும் நிலையில், ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் நடிப்பை கொண்டாடி வருகிறார்கள்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என பல இடங்களிலும் கலக்கி வருகிறார்.

அழகு, நடிப்பு, நடனம், பாடல் என அனைத்திலும் சிறந்த திறமை கொண்டவர் ஸ்ருதிஹாசன். மிகவும் தேர்ந்தெடுத்து சிறந்த படங்களில் நடித்து ரசிகர் மனங்களை கொள்ளை கொண்டு வருகிறார்.

குறிப்பாக ஆந்திராவில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012ல் வெளியான 3 திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திராவில் மீண்டும் வெளியிடப்பட்டது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தில் குறிப்பாக நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்பை விமர்சகர்களும் பொதுப்பார்வையாளர்களும் பாராட்டி வருகிறார்கள்.

மாயாஜாலமிக்க சினிமாவில் நடிப்பேன் என நினைக்கவில்லை – ஸ்ருதிஹாசன்

இதனால் உற்சாகமடைந்த ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் இதனை இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் கே ஜி எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Dhanush’s 3 film re-release.; Telugu fans celebrate Shruti Haasan

1800 திரையரங்குகளில் சமந்தாவின் ‘யசோதா’ டீசர்

1800 திரையரங்குகளில் சமந்தாவின் ‘யசோதா’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி வரும் “யசோதா” டீசர் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் கூட்டணி இணைந்து இயக்கும் இப்படத்தினை Sridevi Movies சார்பில் மூத்த தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘யசோதா’ படத்தின் பரபரப்பான டீஸர் மிக சுவராஸ்யமாக அமைந்துள்ளது.

குழப்பமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் சமந்தா சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், உயிர் பிழைக்க போராடுவதை டீசர் காட்டுகிறது.

கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கும் அவர், பெண் மருத்துவர் பரிந்துரைத்தும் பார்க்ககூடாத ஒன்றை பார்த்து விடுகிறார். அவரை சுற்றி என்ன தான் நடக்கிறது? அவர் ஏன் வாழப் போராடுகிறார்? அவர் எதை வெளிப்படுத்த பாடுபடுகிறார்? அதுதான் படத்தின் சுவாரஸ்ய மர்மம் என்கிறார் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.

இளமை ததும்பும் ஹேண்ட்சம் மருத்துவராக உன்னி முகுந்தன் நடித்துள்ள இந்த டீஸர், மிகச்சிறப்பான கதை மற்றும் அசத்தலான மேக்கிங்குடன் தரமான படைப்பாக நம்பிக்கை தருகிறது.

பிரமாண்டமான பட்ஜெட்டில் கண்களை கவரும் காட்சிகளுடன், மணி சர்மாவின் இசை காட்சிகளின் தரத்தை உயர்த்த, டெக்னிகலாக ஒரு பிரமிப்பான படைப்பை பார்க்கும் உணர்வை தருகிறது.

தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில்…

“எங்கள் டீசருக்கு நாடு முழுவதும், அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் 1,800+ திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் ‘டீசர்’ இது தான். திரையரங்குகளிலும் சமூக ஊடகங்களிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சமந்தாவின் நடிப்பு மற்றும் பிரமாண்ட உருவாக்கம் பற்றிய பாராட்டுக்களை கேட்பது மிகுந்த மகிழ்ச்சி. சமந்தா மிகச்சிறப்பான அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் இப்படத்தை சமரசமற்ற ஆக்‌ஷன் த்ரில்லராக மாற்றியுள்ளார்.

இந்தக் கதையே மிகவும் தனித்துவமானது. நீங்கள் பார்க்கும் டீசர் படத்தின் ஒரு துளி மட்டுமே. இன்னும் பல ஆச்சர்யங்கள் படத்தில் காத்திருக்கிறது.

எந்த சமரசமுமின்றி சிறந்த தொழில் நுட்ப தரத்தில் 100 நாட்களில் பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளோம்.

டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன, VFX மற்றும் ரீரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருகின்றன.

இப்படத்தினை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

விரைவில் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்.”

இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

இசை: மணிசர்மா,
வசனங்கள்: புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்யலட்சுமி
பாடல் வரிகள்: ராமஜோகையா சாஸ்திரி கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி ஒளிப்பதிவு: M.சுகுமார்
கலை: அசோக்
சண்டைகள்: வெங்கட்
எடிட்டர்: மார்த்தாண்டன், K.வெங்கடேஷ் லைன் புரடியூசர்: வித்யா சிவலெங்கா
இணை தயாரிப்பாளர்: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி
இயக்கம்: ஹரி – ஹரிஷ்
தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்
பேனர்: Sridevi Movies

Strength, willpower & adrenaline we’ve never seen before?

Enthralling #YashodaTeaser is here

https://bit.ly/YashodaTamilTeaser

#YashodaTheMovie @Samanthaprabhu2 @Iamunnimukundan @varusarath5 @harishankaroffi @hareeshnarayan #Manisharma @krishnasivalenk @SrideviMovieOff @DoneChannel1

யசோதா

Samantha’s ‘Yashoda’ Teaser released in 1800 Theatres across the country

அவள் எனக்கு மகளே இல்ல.. தரங்கெட்ட நடிகரை மணந்துவிட்டாள்.. – ராஜ்கிரண்

அவள் எனக்கு மகளே இல்ல.. தரங்கெட்ட நடிகரை மணந்துவிட்டாள்.. – ராஜ்கிரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ராஜ்கிரண் தன் குடும்பம் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

என் “மகளை” ஒரு சீரியல் நடிகர்
கல்யாணம் பண்ணியிருப்பதாக
ஒரு தவறான தகவல்
என் பார்வைக்கு வந்தது.

என் மீது அபிமானம் கொண்டுள்ள
அனைவருக்கும், உண்மையை
விளக்க வேண்டியது என் கடமை.
எனக்கு திப்பு சுல்தான் @
நைனார் முஹம்மது என்ற
ஒரே ஒரு மகனைத்தவிர,
வேறு பிள்ளைகள் கிடையாது.

இந்து மதத்தைச் சேர்ந்த
ஒரு வளர்ப்பு மகள் இருந்தார்.
அவர் பெயர் பிரியா.
அவர் மனம் சந்தோசப்படுவதற்காக,
அவரை “வளர்ப்பு மகள்” என்று
நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல்
சொந்த மகள் என்றே
சொல்லி வந்தேன்.

முகநூல் மூலம் அவருடன் நட்பு
ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர்,
என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி,
கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்
என்ற மனநிலைக்கு
கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விசயம் என் காதுக்கு வந்ததும்,
அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க
ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக
எதையும் செய்யும் ஈனத்தனமும்
கொண்டவர் என்பது,
எனக்குத்தெரிய வந்தது.

அவரது நோக்கம் பெண்ணை வைத்து
வாழ்வதில்லை. எனக்கு இருக்கும்
நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா
துறையில் வாய்ப்புகளை பெறுவதும்,
என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள்.

இதையெல்லாம் பலவிதமாக
விசாரித்து தெரிந்து கொண்ட நான்,
என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன்.
அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை.

அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள
மாட்டோம் என்றும், அந்தப்பெண்
சொல்லியிருந்தார்.

அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி
இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று
என் மனைவி, அந்தப்பெண்ணிடம்
அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, ” சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்”
என்று சொல்ல,
நாங்களும் மாப்பிள்ளை பார்த்துககொண்டிருந்தோம்.

இந்த சூழ்நிலையில் தான்,
என் மனைவியின் தோழியான,
“லட்சுமி பார்வதியை” பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு,
இந்தப்பெண் ஆந்திரா போய்
நான்கு மாதங்களாகி விட்டன,

இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் தான்,
இப்படி ஒரு செய்தி வலம் வந்து
கொண்டிருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம்
என்பது போல், பொய் பொய்யாக
பேசிக்கொண்டு திரிகிறது,

இந்தப் பெண். இந்த விசயத்தில் நான்
கோபப்பட்டபோது கூட, என்னை
சமாதானப்படுத்தி, அந்தப்பெண்ணுக்காக பரிந்து பேசி இன்று வரை அந்தப்பெண்ணுக்கு
உறுதுணையாக நிற்பது,
என் மனைவி மட்டும் தான்.

பெண் பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க வேண்டுமே என்ற அக்கறையில், எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ, அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகிறது…

என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன்.

ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம்…

இதன் மூலம் நான் எல்லோரிடமும்
சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப்பயன்படுத்தி
இவர்கள் உங்களை
எந்த வகையிலாவது அணுகினால்,
அதனால் ஏற்படும் எந்தப்பிரச்சினைக்கும்
நான் பொறுப்பல்ல, என்பது தான்.
இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது
என் பெயரை எதற்காகப் பயன்படுத்தினாலும்
சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த சீரியல் நடிகர்,
தன் குள்ளநரித்தனங்களால், என் வளர்ப்புப்பெண்ணிற்கு
கணவனாகிக் கொள்ளக்கூடும்.

ஆனால், எந்தக்காலத்திலும்
எனக்கு மருமகனாக முடியாது.
இன்றிலிருந்து,
இவர்கள் இருவருக்கும்
என் குடும்பத்திற்கும் எவ்வித
சம்பந்தமும் இல்லை.
நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும்.

இப்படிக்கு… நடிகர் ராஜ்கிரண்

ராஜ்கிரண்

Actor Rajkiran about his daughter marriage

ஆஹா தமிழ் – டி கம்பெனி கூட்டணி.; சீனு ராமசாமி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்

ஆஹா தமிழ் – டி கம்பெனி கூட்டணி.; சீனு ராமசாமி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆஹா ஒரிஜினல் படைப்பிற்காக தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் ( புரொடக்சன் நம்பர் 4 ) தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கிளாப் அடிக்க, இயக்குநர் பிரம்மா முதற்காட்சிக்கான ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்தார்.

ஆஹா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரிஜினல் திரைப்படங்கள், ஒரிஜினல் வலைதளத் தொடர், ஒரிஜினல் நிகழ்ச்சிகள், என பல அசலான , தமிழர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை, உள்ளூர் திறமைசாலிகளுடன் இணைந்து வழங்கி வருகிறது. இத்தளத்தில் வெளியான ‘மாமனிதன்’, ‘குருதி ஆட்டம்’, போன்ற தமிழ் திரைப்படங்கள், சமீபத்தில் வெளியான ‘ஜீவி 2’ உள்ளிட்ட திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது.

ஆஹா தயாரித்த ‘பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், டர்மரெரிக் மீடியாவுடன் இணைந்து ரத்த சாட்சி’ படத்தினை தயாரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, டி கம்பெனியுடன் இணைந்து தற்போது புதிய படத்தைத் தயாரிக்கிறது.

தயாரிப்பு நிறுவனமான டி கம்பெனி, சிலம்பரசன் நடிப்பில் தயாரான ‘ஈஸ்வரன்’, ஜெய், பாரதிராஜா நடிப்பில் தயாரான ‘குற்றம் குற்றமே’ ஆகிய திரைப்படங்களையும், ஆஹாவில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குத்துப் பத்து’ எனும் வலைதள தொடரையும் தயாரித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் நான்காவது படைப்பாக புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்த திரைப்படம் ஆஹா ஒரிஜினல் படைப்பாகவும் உருவாகிறது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படத்தில், சார்லி, ‘சேதுபதி’ பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, கே பி ஒய் தீனா, நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள்.

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார்.

கலை இயக்கத்தை எம் எஸ் பி மாதவன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி. மதன் மேற்கொள்கிறார்.

பேமிலி டிராமா / டிராஜிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிக்கிறார்.

ஆஹா ஒரிஜினல் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கார்த்திக் சீனிவாசன்

Aha Tamil and D Company alliance for next movie

More Articles
Follows