சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் என்ஜிகே

சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் என்ஜிகே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NGK movie surprise will be there for Suriyas Birthdayசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தல் நடித்து வருகிறார்.

இப்படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஜூலை 23-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக படத்தின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 23-ல் நடிகர் சூர்யா அவரது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், அன்று சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங், ஜெகபதிபாபு, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

NGK movie surprise will be there for Suriyas Birthday

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தந்த விஸ்வரூப அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தந்த விஸ்வரூப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan launched 2 songs from Viswaroopam in BiggBoss Tamil 2கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் `நானாகிய நதிமூலமே’ என்ற சிங்கிள் டிராக் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளதால் அதற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜிப்ரான் இசையில், வைரமுத்து வரிகளில், கமல் பாடிய அந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சயில் தன் மகள் ஸ்ருதியுடன் கலந்துகொண்டார் கமல்.

அப்போது எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்களை வெளியிட்டார்.

மேலும் தனது மகளுடன் இணைந்து பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

Kamalhassan launched 2 songs from Viswaroopam in BiggBoss Tamil 2

அஜித்தை மிரட்டிய வில்லன் சித்தார்த்துடன் இணைகிறார்

அஜித்தை மிரட்டிய வில்லன் சித்தார்த்துடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siddharth and ajithசாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசா இருவரும் ஒரு படத்தில் இணைந்து
நடிக்கின்றனர்.

இந்த படத்தை ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் சித்தார்த்துடன் அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘றெக்க’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக மோதவிருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

மீண்டும் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கும் சூர்யா-கார்த்தி

மீண்டும் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கும் சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya karthiவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `பார்ட்டி’. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்.

நடிகர் ஷ்யாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார்.

கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஒரு பாடலை ஜூலை 2ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

‘ச்சா ச்சா சாரே…’ எனத் தொடங்கும் இந்த பாடலை சூர்யா மற்றும் கார்த்தி முதல் முறையாக இணைந்து பாடியிருக்கிறார்கள்.

ஜீவாவை விட யோகிபாபு-விடம் ஒட்டிக் கொண்ட சிம்பன்ஸி குரங்கு

ஜீவாவை விட யோகிபாபு-விடம் ஒட்டிக் கொண்ட சிம்பன்ஸி குரங்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதியதிரைப்படம் கொரில்லா.

இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ இது ஒரு Heistகாமெடி ஜேனர் படம். இது தமிழ் ரசிகர்களுக்கு புதிது. ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள்.

இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள்.

அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள். இந்த கூட்டணி வங்கியை கொள்ளையடித்தார்களா? அல்லது போலீஸிடம் சிக்கினார்களா? என்பதை படத்தின் கதை.

இந்த கதையில் முதலில் சிம்பன்ஸி குரங்கு இல்லை. முழு திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டு ஒரு நாள் யதேச்சையாக ஹேங் ஓவர் – 2 என்ற படத்தின் போஸ்டரைப் பார்த்தேன்.

அதில் மூன்று நண்பர்களும், ஒரு சிம்பன்ஸியும் ஜாலியாக இருப்பது போல் போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தேன்.

உடனே நம்முடைய திரைக்கதையிலும் ஒரு குரங்கை கொண்டுவரலாமே? என எண்ணி, திரைக்கதையை சற்று மாற்றியமைத்தேன். இதனை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் அவரும் ஒப்புக்கொண்டார்.

மறைந்திருந்து எதிர்பாராமல் தாக்குவதற்கு தான் ‘கொரில்லா தாக்குதல் ’ என்பார்கள். அதே போன்ற ஒரு தாக்குதல் இந்த கதையிலும் இடம்பெற்றிருக்கிறது.

அதனால் இந்த படத்திற்கு ‘கொரில்லா’ என்று பெயரிட்டோம். மற்றப்படி கொரில்லாவிற்கும் சிம்பன்ஸி குரங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த கதை சென்னையில் நடைபெறுகிறது. ஆனாலும் சிம்பன்ஸி தொடர்பான காட்சிகளை மட்டும் தாய்லாந்திற்கு சென்று படமாக்கிவிட்டு திரும்பினோம். இந்த ‘காங்’என்ற சிம்பன்ஸி குரங்கு ஏற்கனவே ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறது.

அதனால் அதனுடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது. ஜீவா விட யோகி பாபுவிடம் அந்த காங் விரைவில் ஒட்டிக்கொண்டது. படத்தில் இவர்கள் தோன்றும் காட்சிகளில் சிரிப்பிற்கு உத்தரவாதம் தரலாம்.

ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி அளவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த சந்தர்ப்பங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாலினி பாண்டே.

சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் இவர் கதையின் திருப்புமுனையான கேரக்டர் என்பதால் அதை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்.

படத்தில் மூத்த நடிகர் ராதாரவி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். கடும் கோடை என்றும் பாராமல் படபிடிப்பு தளத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது.

இந்த படம் ஆறு முதல் அறுபது வயது வரை உள்ள அனைவரும் பிடிக்கும் காமெடி படமாக உருவாகியிருக்கிறது.’ என்றார்.

டொரேண்டோ திரைப்பட விழாவில் குரங்கு பொம்மை-க்கு 2 விருதுகள்

டொரேண்டோ திரைப்பட விழாவில் குரங்கு பொம்மை-க்கு 2 விருதுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kurangu bommmaiபுளு சாப்யர் என்பது கனடாவில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றாகும்.

இவர்கள் தற்போது “டொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்” மூலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்கள்.

இந்த அறிவிப்பினை புளு சாப்யர் நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜீஷ் ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி கடந்த ஆண்டு வெளியான தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 சிறப்பு (ஜூரி) விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் “விக்ரம் வேதா”, “அருவி” “அறம்” என பல வெற்றிப்படங்கள் இடம்பெற்று கடுமையான போட்டி நிலவிய சூழலில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினை ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் மற்றும் பலர் நடித்து, நித்திலன் இயக்கியிருந்த “குரங்கு பொம்மை” திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

அது மட்டுமல்லாமல், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது “இயக்குநர் இமயம்” பாரதிராஜா-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக சர்வேதச அளவிலான ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows