‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி & சாய்பல்லவி

‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி & சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன்’ படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

முதலில் நாயகியாக இவரை ஒப்பந்தம் செய்யவில்லை என இயக்குனர் முத்தையா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘விருமன்’ பட தேன்மொழி கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

ஆனால் அவர்களின கால்ஷீட் தேதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் ஷங்கரின் மகள் அதிதியிடம் பேசினார்களாம்.

சுல்தான் படத்தில் ஏற்கெனவே கார்த்தியுடன் ராஷ்மிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய்பல்லவி இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Director Muthaiah talks about heroine selection in Viruman

‘பொன்னியின் செல்வன்’ பட சிங்கிள் ட்ராக் ரிலீஸ் அப்டேட்

‘பொன்னியின் செல்வன்’ பட சிங்கிள் ட்ராக் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள மிகப்பிரம்மாண்டமான படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தை மணிரத்னம் இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. இதன் முதல் பாகம் 2022 கோடை விடுமுறை சமயத்தில் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த தகவல்கள் வந்துள்ளன.

பொன்னியின் செல்வன் நாவலில் முதல் காட்சியில் வந்தியத்தேவன் குதிரையில் வருவது போன்று கதை அமைந்திருக்கும்.

எனவே அதை காட்சியாக வைத்து அந்த பாடலை உருவாக்கியுள்ளாராம் ரஹ்மான்.

1950களில் வெளியான ’சத்தியமே நிச்சயமாய் வெல்லுமடா’ என்ற பாடலை போன்று அந்த வரிகளில் இந்த பாடலை உருவாக்கியிருக்கிறாராம்.

இந்த சிங்கிள் ட்ராக் பாடல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Ponniyin selvan single track release update is here

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த ஆஸ்கார் அங்கீகாரம்

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த ஆஸ்கார் அங்கீகாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஜெய் பீம்’, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது.

இது ‘ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள்.

ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார்.

‘சீன் அட் த அகாடெமி’ என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்கார் யூடியூப் சேனல் விவரிக்கையில்,” தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு தனது இடைவிடாத முயற்சியின் மூலம் நீதியைப் பெற்றுத் தந்த சமூக ஆர்வலரான வழக்கறிஞர் சந்துருவால் நடத்தப்பட்ட உண்மையான வழக்கு மற்றும் அதுதொடர்பான கள ஆய்வுகளின் அடிப்படையில் ‘ஜெய் பீம்’ உருவாக்கப்பட்டது. அத்துடன் கதை விவரிப்பும், அதனை எவ்வாறு திரைக்கதையாக்கி செயல்படுத்தப்பட்டது என்பதையும் எழுத்தாளரும், இயக்குநருமான தா.செ. ஞானவேல் வெளிப்படுத்திருக்கிறார்.” என குறிப்பிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில்,” ஒதுக்கப்பட்ட மக்களின் கதையை சித்தரித்த எங்களின் ‘ஜெய் பீம்’ திரைப்படம், உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.

இயக்குநர் தா.செ. ஞானவேல் பேசுகையில்,” தெரியாதவர்களின் கதையை சொல்லும் எங்களின் உண்மையான முயற்சி, உலக அளவில் கவனத்தை ஈர்த்ததன் மூலம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. இப்போது உதவி கோரும் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான பலன்களை அறுவடை செய்கிறார்கள். இதுவே நாங்கள் பெறக்கூடிய சிறந்த விருது.” என்றார்.

சூர்யாவின் ‘ஜெய் பீம்’, ஆஸ்காரின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் இடம் பெற்றுள்ள செய்தி வெளியான பிறகு, தயாரிப்பாளர்களை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள திரை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Suriya’s Jai Bhim featured in YouTube channel of the Oscars

முதன்முறையாக ஆந்தாலஜி படத்தில் கமல்..; மம்மூட்டி-மோகன்லால் கூட்டணி

முதன்முறையாக ஆந்தாலஜி படத்தில் கமல்..; மம்மூட்டி-மோகன்லால் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக முக்கியமாக கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஆந்தாலஜி படங்கள் நிறைய தமிழில உருவாகி வருகின்றன.

இதில் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.

தற்போது இதுபோன்ற ஆந்தாலஜி படத்தில் முதன்முறையாக கமல்ஹாசன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் எழுதிய ஐந்து சிறுகதைகளில் உருவாகும் ஒரு ஆந்தாலஜி படத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறாராம்.

இந்தக் கதைகளை, பிரியதர்ஷன், லிஜோ ஜோச் பெலிசெர்ரி, ஜெயராஜ், ஷ்யாம் பிரசாத், சந்தோஷ் சிவன், மகேஷ் நாராயணன் ஆகியோர் இயக்கவுள்ளனர்.

இதில் மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இது மலையாளம் மற்றும் தமிழில் உருவாகும் என சொல்லப்படுகிறது.

இதில் கமல்ஹாசன் நடிக்கவில்லை என்றும் அவர் படம் தொடங்கும் முன் கதைகளை விவரித்துச் சொல்வார் (வாய்ஸ் ஓவர் கொடுப்பார்) எனவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Kamal Haasan Mammootty and Mohan lal to team up for anthology film?

அட எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா..? இந்தியா சார்பில் விண்வெளியில் இளையராஜா இசை..

அட எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா..? இந்தியா சார்பில் விண்வெளியில் இளையராஜா இசை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2022 ஆண்டு ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின விழா அன்று மிக குறைந்த எடை கொண்ட சாட்டிலைட் ஒன்றை தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு விண்வெணியில் ஏவ உள்ளனர்.

இந்த மாணவர்கள் தான் உலகிலேயே குறைவான எடைகொண்ட சாட்டிலைட்டை தயாரிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சாட்டிலைட்டில் கூடுதல் சிறப்பாக இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இளையராஜா பாடும் பாடலை ஒலிக்க திட்டமிட்டுள்ளன்ர.

அதாவது சுதந்திர விழாவின்போது விண்ணில் ஏவப்படும் சாட்டிலைட்டில் இளையராஜா பாடலை ஒலிக்க செய்ய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த பாடல் சுவானந்த் கிர்கிரே கைவண்ணத்தில் ஹிந்தியில் உருவான பாடலாகும்.

தற்போது இளையராஜா இந்த பாடலை தமிழ் மொழியில் பாடியுள்ளார்.

இஸ்ரோ உதவியுடன் இந்த விண்வெளியில் இசை சாதனை இளையராஜா சிறப்பிக்க உள்ளார்.

மாணவர்களின் இந்த முயற்சி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமும் ஆலோசித்துள்ளனர்.

நாட்டிற்காக இந்த பாடல் எனது பங்களிப்பாக இருக்கட்டும் என சம்பளம் எதுவும் வாங்காமல் தேசப்பற்றோடு இசையமைத்து பாடி கொடுத்துள்ளார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் நம் இந்தியா உலகின் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய பாடலாக இது இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

ஜெய்ஹிந்த்..

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போல வருமா..?

அட எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா..

என்ற இளையராஜா பாடல் வரிகள் தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

Isaignani Ilayaraja s music in space?

தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு என்னாச்சு.? விவாகரத்து பெற இதெல்லாம் காரணமா.?

தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு என்னாச்சு.? விவாகரத்து பெற இதெல்லாம் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

40 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ரஜினிகாந்த். அண்மைக்காலமாக ஹிந்திப்படங்களில் நடித்தும் தேசிய விருது பெற்றும் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ்ம் தற்போது இந்தியா முழுக்க பிரபலமாகி வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் இந்த செய்தி இந்தியா முழுக்க பரவியது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

விவாகரத்திற்கான காரணம் என்ன என்பதே தெரியாமல் திரையுலகினரும் ரசிகர்களும் குழம்பி போய் உள்ளனர்.

ஒரு பக்கம் தனுஷ் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மற்றொரு புறம் ரஜினி ரசிகர்கள் தலைவா.. நாங்க இருக்கோம் உன்னோடு என ஐஸ்வர்யா குடும்பத்தினருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

சில ரஜினி ரசிகர்கள் தனுஷ் பற்றி விமர்சிக்க அது தனுஷ் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.

எனவே தனுஷ் ரசிகர்கள் ‘ We Love Dhanush… We stand with u Dhanush Anna..” என பதிவிட்டு வருகின்றனர். இதனால் ரஜினி தனுஷ் ரசிகர்களிடையே கருத்து மோதல் நிலவியது.

சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் சொந்தமாக ஒரு வீட்டை கட்டி வருகிறார் நடிகர் தனுஷ்.

அந்த நிகழ்வில் ரஜினி குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

அதன்பின்னர் டில்லியில் அக்டோபரில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், தனுஷ் இருவரும் விருதுகள் பெற்றனர்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினி. அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் தனுஷ்.

அப்போது அந்த போட்டோக்களை பதிவிட்டு “இது ஒரு வரலாறு, பெருமைமிகு மகள், பெருமைமிகு மனைவி”என கருத்து பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா.

ஆனால் அதன்பிறகு தான் என்ன நடந்தது.? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக கோலிவுட்டில் எழுந்துள்ளது.

பொதுவாக ஒரு குடும்பத்தில் பிரச்ச்சினை உருவாக பெரிய காரணம்.. அன்பின்மை… பொருளாதார பிரச்சினை… நிம்மதியின்மை இப்படியாகத்தான் இருக்கும்.

நிச்சயமாக இவர்கள் குடும்பத்தில் பொருளாதார பிரச்சினை வர வாய்ப்பில்லை. கணவன் மனைவி இடையே அன்பு இல்லாமல் போனதால் நிம்மதியில்லாமல் இருந்திருக்கலாம்.

அப்படியென்றால் இவர்களிடையே வேறு யாராவது ஒருவர் நுழைந்துவிட்டாரா? என்பதும் கேள்வியாக ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு சில நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர் தனுஷ். தங்கமகன் படத்தில் நடிக்கும்போது அப்பட நடிகையுடன் தனுஷ் நெருக்கம் காட்டியதாகவும் அது அப்போது முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது தெலுங்கு நடிகரை அந்த நடிகை விவாகரத்து செய்துவிட்டதால் தனுஷ் தன் மனைவியை பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இவையில்லாமல் 3 படத்தில் நடித்தபோது ஒரு நடிகையுடனும் விஐபி படத்தில் நடித்தபோது அந்த பட நடிகையுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர் தனுஷ் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இவையில்லாமல் சுசி லீகிக்ஸில் தனுஷை பற்றிய விவகாரம் எழுந்தபோதே ஐஸ்வர்யா தனுஷ் இடையே மனக்கசப்பு உருவாக காரணமாக அமைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்ற போது சில நடிகைகளுடன் தனுஷ் நெருக்கம் காட்டியதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு பக்கம் தனுஷ் ஐஸ்வர்யா கட்டும் புதிய வீடு பணிகள் ஒரு கட்டத்தில் ஈகோ பிரச்சினையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

தனுஷை விட பெரிய நடிகர்கள் முக்கியமாக திருமணமான நடிகர்கள் காதல் காட்சிகளில் நெருக்கமான காட்சிகளை திரையில் தவிர்ப்பார்கள்.

ரீல் லைஃப் சினிமா வேறு… ரியல் லைஃப் வாழ்க்கை வேறு.. என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் அவர்கள் பிரச்சினையின்றி வாழ்கிறார்கள். இதை இளைய தலைமுறை நடிகர்கள் நட்சத்திர தம்பதியர்கள் புரிந்துக் கொண்டால் பிரச்சினையில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இன்னும் சில மாதங்களில் விவாகரத்துக்கான உண்மையான காரணம் தெரியாமலா போகும்… காத்திருப்போம் மக்களே…

Reason behind Dhanush and Aishwarya divorce?

More Articles
Follows