மாரி 2 படத்திற்காக மலர் டீச்சரை மடக்கிய தனுஷ்

மாரி 2 படத்திற்காக மலர் டீச்சரை மடக்கிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush sai pallaviபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், நடித்த மாரி படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது.

இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளதால், ஒவ்வொரு கலைஞர்களையும் அறிவித்து வருகின்றனர்.

இரண்டாம் பாகத்தில் தனுஷ்க்கு வில்னாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக நடிப்பது யார்? என்ற கேள்வி எழுந்தது.

தற்போது அதை அறிவித்துவுள்ளனர்.

பிரேமம் புகழ் மலர் டீச்சர்தான் அவர். ஆம் சாய்பல்லவி தான் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கிறார் என்று இயக்குனரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவி சமீபத்தில் நடித்த தெலுங்கு படமான பிதா ஆந்திராவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதில் தெலுங்கில் சொந்தக்குரலில் சாய்பல்லவியே பேசி நடித்திருந்ததால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Balaji Mohan‏Verified account @directormbalaji

The vibrant @Sai_Pallavi92 is the #HeroineofMaari2Its a character thats right at the heart of the story of #Maari2 #SaiPallavi #Bilingual

sai pallavi maari 2 heroine

ரஜினியுடன் நடிச்சிட்டா பெரிய ஆளா..? தன்ஷிகாவை காலில் விழவைத்த டிஆர்

ரஜினியுடன் நடிச்சிட்டா பெரிய ஆளா..? தன்ஷிகாவை காலில் விழவைத்த டிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRajendar insulted Dhanshika in Vizhithiru Press Meetமீரா கதிரவன் இயக்கி தயாரித்துள்ள படம் விழித்திரு.

இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு, தன்ஷிகா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீநீநீநீ…ண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் பல தடைகளை தாண்டி வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை விடியல் ராஜீ பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது நாயகி தன்ஷிகா பேசும்போது டி.ராஜேந்தர் அவர் அருகில் இருந்தும் பேச்சின் போது அவரது பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்.

அதன்பின்னர் மற்ற அனைவரும் பேசிய பின் டி.ராஜேந்தர் இறுதியாக பேசினார்.

அவர் பேச்சை ஆரம்பித்த போதே அரங்கம் அதிர ஆரம்பித்து விட்டது.

அவர் பேசியதாவது….

என்னை ஏன் லாஸ்ட்டாக பேச சொன்னீங்க.? நான் வேஸ்ட்? இல்ல நான் பெஸ்ட்.? இது எனக்கு நீங்க வைக்கிற டெஸ்ட்?

கபாலி எடிட்டர் பிரவீன் என்று சொன்னீர்கள். அவர்தானே கழுகு படத்தை எடிட்டிங் செய்தார். பெரிய படங்களை மட்டும்தான் சொல்வீர்களா?

ரஜினியுடன் கபாலியில் நடித்தார் தன்ஷிகா. அவருக்கு டி.ஆர். யார் என்று தெரியாதாம்.

மல. மல. அண்ணாமலை. அந்த மலை கூட நடிச்சிட்டா? மடு தெரியாதா?

தன்ஷிகாவிற்கு மேடை நாகரிகம் தெரியவில்லை” என்றார். அவர் டி.ஆர். பேசிக்கொண்டிருக்கும்போது, நடுவில் குறிக்கிட்டு தன்ஷிகா மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து சாரி சொன்னார்.

அதற்கும் அசராமல் நீ கட்டி வரல சாரி. இப்போ சொல்ற சாரி. என்று தன் அடுக்கு மொழியால் அவர் பேசிக் கொண்டே இருந்தார்.

பின்னர் தன்ஷிகா கண்ணீர் விட்டு அழுதார்.

TRajendar insulted Dhanshika in Vizhithiru Press Meet

vizhithiru tr dhansika

கார்த்தி படத்தலைப்பில் அஜித் படம்; ரசிகர்கள் ஆச்சர்யம்

கார்த்தி படத்தலைப்பில் அஜித் படம்; ரசிகர்கள் ஆச்சர்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith karthiவினாத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் தீரன் – அதிகாரம் ஒன்று.

இப்படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இதே தீரன் என்ற பெயரில் அஜித் படம் ஒன்று கன்னடத்தில் ரிலீஸாகவுள்ளது.

இது அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் ரீமேக் ஆகும்.

இது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

காஞ்சனா 3-ல் லாரன்ஸ் உடன் இணையும் ஓவியா

காஞ்சனா 3-ல் லாரன்ஸ் உடன் இணையும் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence and Oviyaராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படம் பேய் ஹிட்டானது.

இதனையடுத்து காஞ்சனா படத்தை இயக்கி நடித்தார்.

இதுவும் ஹிட்டாக பேய் படங்களை இயக்கி நடிப்பதை வாடிக்கையாக கொண்டார்.

இந்நிலையில் காஞ்சனா2-வை தொடர்ந்து தற்போது காஞ்சனா3-வை இயக்கவுள்ளார்.

இதில் நாயகியாக நடிக்க ஓவியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மெர்சலுக்கு பயந்து ஒதுங்கியதா நெஞ்சில் துணிவிருந்தால்..?

மெர்சலுக்கு பயந்து ஒதுங்கியதா நெஞ்சில் துணிவிருந்தால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nenjil Thunivirunthal movie postponed due to Mersal Clashஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகிறது.

இதே நாளில் சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது சில காரணங்களால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.

அதாவது நவம்பர் 3ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா , சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி ஆகியோர் நடித்துள்ளனர்.

‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

அர்ஜுன் இயக்கத்தில் `சொல்லிவிடவா’, பரத் நடிப்பில் பொட்டு உள்ளிட்ட படங்கள் தீபாவளி விருந்தாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Nenjil Thunivirunthal movie postponed due to Mersal Clash

மாரி2 படத்தில் தனுஷின் ஹீரோயின் பற்றிய தகவல்

மாரி2 படத்தில் தனுஷின் ஹீரோயின் பற்றிய தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush will announce his Maari2 heroine 6pm Todayபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய்யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்த மாரி படம் சூப்பர் ஹிட்டானது.

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க உள்ளனர்.

முதல் பாகத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய்யேசுதாஸ் வில்லனாக நடித்திருந்தார்.

இரண்டாம் பாகத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தமாஸ் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் நாயகி யார்? என்பதை அறிவிக்க இருக்கிறார்களாம்.

இதன் சூட்டிங்கை தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்தனியாக எடுக்க இருக்கிறார்களாம்.

மேலும் படத்தின் மியூசிக் டைரக்டர் யார்? என்பதையும் இதுபோல் அறிவிப்பார்கள் என நம்பலாம்.

அநேகமாக தனுஷின் ஆஸ்தான ஷான் ரோல்டான் இசையமைப்பார் என எதிர்பார்க்கலாம்.

விரைவில் மாரி2 படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

Dhanush will announce his Maari2 heroine 6pm Today

maari 2 heroine

More Articles
Follows