தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்யுடன் பணிபுரிந்த கலைஞர்கள் விஜய் பற்றிய தங்கள் கருத்துக்களை அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக சமீபத்தில் தெரிவித்தனர்.
இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்ஜே சூர்யா, தரணி மற்றும் பரதன் ஆகியோர் விஜய் பற்றிய தெரிவித்துள்ளதை பார்ப்போம்.
விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாவது…
“விஜய் நடித்த துப்பாக்கி ரொம்ப பிடிக்கும். அவர் நினைத்ததை எல்லாம் அமைதியாக சாதித்து வருகிறார்.
அவர் எல்லா வேடங்களில் நடிக்க வேண்டும். ஆனால் ஒரு கமர்ஷியல் ஹீரோவையே அவர் அதிகம் விரும்புகிறார்” என தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளதாவது…
அவருடைய அர்ப்பணிப்பும் எளிமையும் பிடிக்கும். அவர்தான் ரியல் ஸ்டார்.
அவரிடம் எந்தவொரு குறைபாடும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.
தரணி கூறியதாவது…
விஜய் ஒரு சிறந்த மனிதர். அவரது காதலுக்கு மரியாதை படம் எனக்கு பிடிக்கும்.
ஆனால் பாட்ஷா போன்ற ஆக்ஷன் படங்களை செய்ய வேண்டும். அவர் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.
பரதன் கூறியுள்ளதாவது…
விஜய்யின் எளிமை பிடிக்கும். அவரது கில்லி படம் ரொம்ப பிடிக்கும். அவர் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும்” என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.