தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கி வரும் படம் ஆர்ஆர்ஆர்.
இந்த படம் 1920 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை தான் இந்த படம்.
ராம் சரண் ‘தியாகி அல்லுரி சித்தாராம ராஜு’வாகவும், என்டிஆர் ‘தியாகி கொமரம் பீமாகவும் நடித்து வருகின்றனர்.
இந்த இரு நாயகர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ், மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்துக்கு பாகுபலி புகழ் கீரவாணி இசையமைக்கிறார்.
இந்த நிலையில் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான நாளை மே 20ஆம் தேதி அவர் ஏற்று நடிக்கும் கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இந்த படம் தொடர்பாக எந்த போஸ்டரும் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஆர்ஆர்ஆர் படத்தின் பணிகளைத் தொடரமுடியவில்லை. என படக்குழு தெரிவித்துள்ளது.
இது ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை கடும் அப்செட்டாக்கியுள்ளதாம்.