தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று மே 19ஆம் தேதி RRR புகழ் நடிகர் ஜூனியர் என்டிஆர் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு ஜூனியர் என்டிஆர் 30 படத்தின் டைட்டில் & பர்ஸ்ட் லுக் வெளியானது.
‘தேவாரா’ என பெயரிடப்பட்டுள்ள இதில் ஜான்வி கபூர் – சாய்ப் அலிகான் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
கொரட்டலா சிவா இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரத்தினவேல் ஒளிப்பதிவு செய்ய சாபூ சிரில் கலைப்பணிகளை மேற்கொள்ள ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.
இந்த நிலையில் ஜூனியர் என்டிஆரின் 31 வது படத்தின் தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்படத்தை கே ஜி எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2024 மார்ச் மாதம் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.
தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார் இயக்குநர் பிரசாந்த் நீல்.
இதன்பின்னர் ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்குவார் என்றும் அதன்பின்னரே யஷ் நடிக்கும் ‘கேஜிஎஃப் 3’ படத்தை பிரசாந்த் நீல் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.
junior ntr next movie directer by Prashanth Neel