கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மறக்க முடியாத இனிமையான பயணம் – ரிது வர்மா

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மறக்க முடியாத இனிமையான பயணம் – ரிது வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Ritu Varmaதுல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்திருந்த காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியிருந்தார். பிப்ரவரி 28 அன்று வெளியான இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மக்கள் என அனைவரிடத்திலும் பாராட்டு பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாட படக்குழு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

இந்நிகழ்வில் வீடியோ வழியே
Viacom 18 நிர்வாக அதிகாரி அஜித் அந்தேரி பேசியது…

Viacom 18 மூலம் தனித்தன்மை மிக்க படங்கள் உருவாக்கவே நாங்கள் விரும்புகிறேம். எங்கள் நிறுவனம் மூலம் வித்தியாசமான படங்கள் செய்யவே விரும்புகிறோம் அந்த வகையில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. துல்கர் இப்படத்த்தை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு நன்றி. அவர் மூலம் தான் இந்தப்படம் கவனம் பெற்றது. தேசிங்கு பெரியசாமி மிகத்திறமை வாய்ந்தவர். படத்தை அவர் கையாண்டிருந்த விதம் மலைக்க வைத்தது. இப்படத்தை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி
பேசியது…

நான் ஜெயிப்பேன் என நம்பி எனக்கு ஆதரவளித்த அம்மா அப்பாவுக்கு நன்றி. இப்படத்தை என்னை நம்பி தயாரித்த ஆண்ட்ரூ ஜோசப் அவர்களுக்கு நன்றி.
சினிமா மீது என் கவனம் திரும்ப காரணமாயிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. ஒரு புதியவனான என்னை பாரட்டி தள்ளிய பத்திரிக்கை மீடியா நண்பர்களுக்கு நன்றி. ஒரு படம் ஜெயித்தால் இத்தனை பாராட்டு கிடைக்குமா ? என நினைக்குமளவு பாரட்டு வழங்கிய அனைத்து திரை நண்பர்களுக்கும் நன்றி. இந்தப்படம் உருவாக காரணமாயிருந்த ஒரே நபராக துல்கர் அவர்களுக்கு நன்றி. அவர் ஒப்புக்கொண்டார் என்ற பிறகு தான் அனைத்துமே நடந்தது. என்னை நம்பி படத்தில் எதையும் மாற்றாமல் நடித்து கொடுத்ததற்கு நன்றி. ரிது வர்மா ஒரு வேறு மாநில பெண் போல இல்லாமல் ஒரு தமிழ் பெண் போலவே நடித்து கொடுத்ததற்கு நன்றி. ரக்‌ஷன் டீவி மூலம் ஏற்கனவே சாதித்து விட்டான். இப்படம் மூலம் நல்ல கவனம் பெற்றிருக்கிறான். அவனுக்கு வாழ்த்துகள். இப்படத்தில் கௌதம் மேனன் சாரை முதலில் யோசிக்கவில்லை. அப்புறம் அவர் தான் வேண்டும் என்று அவரை துரத்தி, துரத்தி தான் நடிக்க வைத்தோம். அவர் ஒத்துகொண்ட பிறகு தான் படத்தின் வெற்றி உறுதியானது. க்ளைமாக்ஸ் காட்சியை பயந்து பயந்து தான் அவரிடம் சொன்னேன். ஆனால் சூப்பராக இருக்குடா, என்று சொல்லி அவரே காபி ஷாப்பில் எடுக்கலாம் என்று சொல்லி, அவரே வசனமும் எழுதி, நடித்து தந்தார். புதியவர்களை ஆதாரிக்க பெரிய மனது வேண்டும். அவருக்கு நன்றி. பாஸ்கர் ஒளிப்பதிவாளராக மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும். அவரிடம் யாரும் கோபமே பட முடியாது அவ்வளவு நல்லவர். பிரவீன் ஆண்டனி படத்தின் மாண்டேஜ்ஜை சுவாரஸ்யமாக மாற்றியவர் அவர்தான். அவருக்கு நன்றி. படத்தில் எதை பற்றியும் கவலைப்படமால் இருக்க வைத்த கலை இயக்குனருக்கு நன்றி. ஹர்ஷவர்தன், ரமேஷ்வர் படத்திற்கு இசை மூலம் உயிரூட்டியவரகள். அவர்களுக்கு நன்றி. மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் அவரால் தான் இந்தக்கதை படமாக மாறியது. அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் 90 நிமிடத்திற்கு மேல் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இருக்கிறது. கொஞ்சம் கூட சிஜி போல் தெரியாமல் படத்தை உருவாக்கி தந்த அவர்களுக்கு நன்றி. இது நன்றி சொல்லும் நேரம். நான் இன்று சினிமாவில் இருக்க காரணமாயிருக்கும் விஜய் மில்டன் சாருக்கு நன்றி. நேரம் ஒதுக்கி வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

நடிகை நிரஞ்சனி பேசியது..

சினிமாவை அறிமுகப்படுத்திய அப்பாவுக்கு நன்றி. மீடியாவால் தான் இந்தப்படம் வெற்றி பெற்றுள்ளது. உங்களுக்கு நன்றி. ரசிகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தும்போது பெருமையாக இருக்கிறது. துல்கர் ரொம்ப இனிமையான நபர். மிக எளிமையாக பழகினார். ரிது என்னை நண்பியாக பாவித்து அரவணைத்ததற்கு அவருக்கு நன்றி. படத்தில் என்னை எல்ல்லோருக்கும் பிடிக்க ரக்‌ஷன் தான் காரணம் அவருக்கு நன்றி. கௌதம் சார் இந்தபடத்தை ஒத்துகொண்டு நடித்ததற்கு, தனிப்பட்ட முறையில் என்னை பாரட்டியதற்கு நன்றி. இயக்குநருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. என்னை ஏற்றுக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ரக்‌ஷன் பேசியது

இது எனக்கு முதல் படம். தேசிங்கு அண்ணனுக்கு நன்றி. துல்கர் படத்தில் நடிக்கிறோம் என்று தான் முதலில் இந்தப்படத்தில் நடிக்கவே ஆசைப்பட்டேன். துல்கருக்கு நன்றி. என்னை எல்லா காட்சிகளிலும் விட்டு கொடுக்காமல் கூடவே நிப்பாட்டி நடிக்க வைத்தார். பாஸ்கர் அண்ணாவுக்கு நன்றி. திரையில் என்னை பார்க்கும் போது எனக்கே பிரமிப்பாக இருந்தது. கௌதம் சாருடன் முதல் முதலாக அறிமுகமானபோதே என்னை வாழ்த்தினார். “ஹாய் ஹீரோ” என்று சொல்வார். எதுவுமே பேசாமலே படத்தில் மிரட்டியுள்ளார். ரிது வர்மா என்னை நண்பனாக பொறுத்து கொண்டதற்கு நன்றி. நிரஞ்சனி படப்பிடிப்பில் கேரக்டர் போலவே என்னை கண்டு கொள்ளவே மாட்டார். பத்திரிக்கை நண்பர்களுக்கும் படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் பேசியது…

இன்று என் பெயர் வெளிவர காரணமான என் குரு விஜய் மில்டன் சாருக்கு நன்றி. பத்திரிக்கை நண்பர்களுக்கு ஒளிப்பதிவை மதித்து எல்லா இடத்திலும் பாராட்டியவர்களுக்கு நன்றி. எங்கள் குழுவுக்கு கடுமையாக உழைத்ததற்கு நன்றி. கௌதம் சார் எப்படியாவது இப்படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் இப்படத்தில் நடித்தற்கு நன்றி. அவர் வந்த பிறகு நிறைய பயந்தேன் ஆனால் தட்டிக்கொடுத்து வாழ்த்தினார். தேசிங்கு இன்னும் பெரிய இடங்களுக்கு செல்வார். படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

நாயகி ரிது வர்மா பேசியது…

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” மறக்க முடியாத இனிமையான பயணம். தெசிங்கின் ஐந்து வருட பயணம் இந்தப்படம் அணுஅணுவாக ரசித்து உருவாக்கியுள்ளார். கௌதம் சாருக்கு நான் ரசிகை அவருடன் நடித்தது மகிழ்ச்சி. துல்கர் நான் நன்றாக நடிக்க காரணம் அவர் தான். தர்ஷன் கலக்கி விட்டார். நிரஞ்சனா நல்ல நண்பியாக மாறிவிட்டார். இப்படத்தை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றி.

கௌதம் மேனன் பேசியது

இந்தப்படத்தை எல்லா இடத்திலும் கொண்டு சேர்த்த மீடியா நண்பர்களுக்கு நன்றி. நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையரங்கில் இந்த படம் மூலம் மேஜிக் நடந்திருக்கிறது. இதை சாதித்த படக்குழுவுக்கு வாழ்த்துகள். என் படங்களில் இருக்கும் உணர்வு தேசிங்குவிடம் கிடைத்தது. அதனால் தான் இந்தப்படம் நடித்தேன். எனக்கு பிடிக்காவிட்டால் நான் எந்தப்படத்திலும் நடிக்க மாட்டேன். எனக்கு பிடித்து தான் இந்தபடத்தில் நடித்தேன். கேமரா முன்னாடி நடிப்பதில் எனக்கு பயம் தான். ஆனால் அந்த பயத்தை போக்கியது விஜய் மில்டன் தான். அவர் எனக்கு ஒரு கதவை திறந்து விட்டுள்ளார். துல்கர் இந்தப்டத்தில் சூப்பராக இருந்தார். ரிது, நிரஞ்சனி, தர்ஷன் அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவருக்கும் நன்றி.

துல்கர் சல்மான் பேசியது…

ரொம்பவும் உணர்வுபூர்வமான தருணமாக இருக்கிறது. தேசிங்கு ஐந்து வருடமாக உழைத்துள்ளார். நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் மிக உண்மையாக சினிமாவை நேசிப்பவர். இங்கு எல்லோருமே நல்ல மனதுக்காரர்கள். தான் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. எல்லோரும் எல்லோரையும் பாரட்டுவது நிஜம். இந்தப்படம் அனைவர் மீதும் அன்பை சேர்த்துள்ளது. எல்லோரும் இதை அவர்களது படமாக கொண்டாடுகிறார்கள் தேசிங்கிற்கு நன்றி. இன்னும் பத்து வருடத்தில் தேசிங்கு மிகப்பெரிய ஆளாகிவிடுவார். தர்ஷன் ஹீரோவாகிவிடுவார் 10 வருடம் கழித்து சந்தித்தால் இந்தப்படத்தை பற்றி பேசுவோம் எனத் தோன்றுகிறது. மனதளவில் என்னை அதிகம் பாதித்துள்ளது இந்தப்படம். இந்தபடத்தில் கௌதம் சார் தான் ஹீரோ. அவரை திரையில் பார்த்து நானும் கைதட்டி ரசித்தேன். அவர் ஆசிர்வாதம் தான் இந்தப்படம். ரிது சினிமாவுக்காகவே பிறந்தவர் போல் இருக்கிறார். நிறைய உழைத்திருக்கிறார். அவர் கண்ணிலேயே நடிக்கிறார். வாழ்த்துக்கள். நிரஞ்சனி நிறைய தயக்கத்துடன் இருந்தார் இந்தப்படத்தின் வெற்றியில் அவர் நிறைய மாறியுள்ளார். ரக்‌ஷன் என் நெருங்கிய நண்பனாக மாறி விட்டார். அவர் மிக எளிதாக ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். தொழில் நுட்ப கலைஞர்கள் எங்களை விட அதிகம் உழைப்பவர்கள் அவர்கள் தான் அவர்களுக்கு நன்றி. மீடியா நண்பர்கள் அவர்கள் படம் போல் இந்தபடத்தை எடுத்து கொண்டாடியதற்கு நன்றி.

நந்திதா ஸ்வேதாவின் அதிரடிப் படமான IPC 376 படப்பிடிப்பு நிறைவு

நந்திதா ஸ்வேதாவின் அதிரடிப் படமான IPC 376 படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nandita swetha in IPC 376அதிரடி ஆக்‌ஷன் படங்களில் கதாநாயகிகள் கெத்து காட்டுவது இப்போது ட்ரெண்ட். மேலும் பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி வெற்றிபெற்றும் வருகின்றன. இது தமிழ்சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படத்தில் நடித்துள்ளார். அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா இதில் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம். நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா.

சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல். சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். நடிகை விஜயசாந்திக்குப் பிறகு சண்டைக்காட்சிகளில் அசாத்தியமாக நடித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா தான் என்ற பேச்சு இந்தப்படம் வந்தபின் இண்டஸ்ட்ரி எங்கும் கேட்கும் என்கிறார்கள். ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கியுள்ளார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. இப்படி இப்படத்தின் தலைப்பிலே பெண்கள் மீதான அக்கறை தெரிகிறது. அதுவே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

விறுவிறுப்பாக தயாராகியுள்ள இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய k.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக S.பிரபாகர் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று வெற்றிகரமாகவும் திருப்திகரமாகவும் முடிந்துள்ளது

ஒரு விஷயத்தில் ஏமாற்றம்.; எனக்கு திருப்தியில்லை.. – ரஜினிகாந்த்

ஒரு விஷயத்தில் ஏமாற்றம்.; எனக்கு திருப்தியில்லை.. – ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthசென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார்.

இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது சில அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினி தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார்.

பின்னர் ரஜினிகாந்த் கூறியதாவது:-

கட்சி தொடங்குவது பற்றி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன்.

அவர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை ஏமாற்றமே.

ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன்.

சிஏஏ விவகாரத்தில் பிரதமர் உடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்பினரிடம் கூறினேன்.

என்னால் முடிந்தவரை உதவி செய்வதாகவும் கூறினேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

3வது வாரத்திலும் களை கட்டும் ‘கன்னி மாடம்’..; அதிகரிக்கும் தியேட்டர்கள்..

3வது வாரத்திலும் களை கட்டும் ‘கன்னி மாடம்’..; அதிகரிக்கும் தியேட்டர்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanni Maadam stillsரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆன படம் கன்னிமாடம். இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் – சாயா தேவி நடித்திருக்கிறார்கள். இவர்களோடு ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் ஆணவ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்திருந்தது.

படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த தொல்.திருமாவளவன், கீ.வீரமணி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கையும் திடீரென உயர்ந்தது. கன்னிமாடம் ரிலீஸ் ஆகாத பல ஊர்களில் 6ம் தேதி சுமார் 30 தியேட்டர்களில் வெளியாகிறது கன்னிமாடம்.

தமிழ் சினிமா வரலாற்றில் பிரலங்கங்ள் இல்லாமல் அறிமுக நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகி 2 வாரம் கடந்த நிலையில் 3வது வாரத்தில் மீண்டும் 30 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் ஒரே படம் கன்னிமாடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு காரணம் படத்தின் மீதான கருத்தும், சாதி வெறிக்கும், ஆணவ கொலைக்கும் எதிராக பேசுவதும்தான்.

தியேட்டர்கள் அதிகரித்ததை தொடர்ந்து படக்குழு உற்சாகத்தில் உள்ளது…

டிக் டாக்கில் தல அஜித் பாட்டுக்கு சிம்ரன் போட்ட ஆட்டம்.; வைரலாகும் வீடியோ!

டிக் டாக்கில் தல அஜித் பாட்டுக்கு சிம்ரன் போட்ட ஆட்டம்.; வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simran in tiktokகமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்தவர் சிம்ரன்.

இவரை இடுப்பழகி எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி

இறுதியாக ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.

சிம்ரன் தற்போது டிக்டாக்கில்லும் கால் பதித்துள்ளார்.

சமீபத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலை கிரியேட் செய்துள்ளார்.

எதிரும் புதிரும் – 1999 என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் நடிகர் ராஜு சுந்தரத்துடன் சிம்ரன் இந்த பாடலில் நடனமாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மற்றொரு வீடியோவில் தல அஜித்துடன் சேர்ந்து சிம்ரன் நடித்த வாலி படத்தில் இடம் பெற்ற ஏப்ரல் மாதத்தில்…. என்ற பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார்.

அந்த பாடலும் வைரலாகியுள்ளது.

திருமணமாகி விவாகரத்து ஆனவரை கட்டிக்க போறாரா அனுஷ்கா..? ரசிகர்கள் அதிர்ச்சி.!

திருமணமாகி விவாகரத்து ஆனவரை கட்டிக்க போறாரா அனுஷ்கா..? ரசிகர்கள் அதிர்ச்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anushka marriageரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் அனுஷ்கா.

தமிழ், தெலுங்கில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

பாகுபலி நடிகர் பிரபாஸ் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை இருவருமே மறுத்தனர்.

ஏப்ரலில் வெளியாகும் அனுஷ்காவின் சைலன்ஸ்

எனவே அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் என தகவல்கள் வந்துள்ளன.

அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடி, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனுஷ்காவுக்கே இந்த நிலைமையா? என கேட்டு வருகின்றனர்.

More Articles
Follows