இயக்குனர் அகத்தியன் மகளை மணந்தார் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர்

Niranjani marriage (2)கடந்த 2020ல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்த படத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, கௌதம் மேனன், ரக்‌ஷன், நிரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தார்.

இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினி, இப்பட டைரக்டரை அழைத்து தனக்கும் ஒரு கதை ரெடி செய்ய சொன்னார் என்பது கூடுதல் தகவல்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் நிரஞ்சனி நடிகையானார்.

இந்த படத்தில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரக்க்ஷன் என்பவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நிரஞ்சனி.

இவர் (நிரஞ்சனி) இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது தங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.

நடிகையாகும் முன்பு நிரஞ்சனி ஆடை வடிவமைப்பாளராக இருந்தார்.

வாயை மூடி பேசவும், சிகரம் தொடு, காவியத்தலைவன், கபாலி உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறாராம்.

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

அகத்தியன் மகள்கள் மூன்று பேருமே இயக்குநர்களை திருமணம் செய்துள்ளனர்.

கனி என்பவர் இயக்குநர் திருவையும், விஜயலக்ஷ்மி இயக்குநர் பெரோஸையும் திருமணம் செய்து கொண்டனர்.

தன் சகோதரிகளை போலவே நிரஞ்சனியும் ஒரு இயக்குநரை மணந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kannum Kannum Kollaiyadithaal director Desingh and actress Niranjani Agathiyan gets married

Overall Rating : Not available

Latest Post