17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி நம்மை ‘பார்த்தாலே பரவசம்’ (2001) மற்றும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002) ஆகிய படங்களில் அவர்களை ரசிக்க வைத்தார்கள். உண்மையில், இந்த படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாகக் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர். நிச்சயமாக, அதுதான் அழகு அல்லவா? சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இருந்தால் தான் உறவுகள் வலுவானவையாக இருக்கும். இந்த முறை இன்னொரு ‘சிக்கல்’, ஆனால் அது மாதவன் மற்றும் சிம்ரன் குடும்ப உறவுகளுக்குள் அல்ல, வெளிப்புறத்தில். ஆம், 17 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பன்மொழி திரைப்படமான ‘ராக்கெட்ரி’ படத்தில் தான் இவை இடம் பெறுகிறது.

ராக்கெட்ரி மிகவும் தீவிரமான கதையை கையாள்கிறது. இது நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். அது கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கொண்டிருக்கும். ஒரு அற்புதமான நடிகையாக இருப்பதால், ஈடு இணையற்ற நடிப்பை வெளிப்படுத்தும் பழக்கத்தை சிம்ரன் எப்போதும் வைத்திருக்கிறார். இது இந்த படத்திலும் கூட அப்படியே தொடர்கிறது. திரு மற்றும் திருமதி நம்பியாக மாதவன் மற்றும் சிம்ரன் ஜோடியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும், ஆன்லைன் மற்றும் அனைத்து ஊடக தளங்களிலும் மிகப்பெரிய அளவில் பரவி, நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் ‘ராக்கெட்ரி’ படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

‘ராக்கெட்ரி – நம்பி எஃபெக்ட்’ படத்தை பற்றிய அறிவிப்பு வெளியான காலத்திலிருந்தே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படப்பிடிப்பு நடக்க நடக்க படிப்படியாக அதிக கவனத்தை ஈர்த்தது. குறிப்பிடத்தக்க விதத்தில், மாதவன் சால்ட் அண்ட் பெப்பர் நிற முடியை கொண்ட நம்பியாக மாறியது, அவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் என்பதும், இந்த புதிய புகைப்படமும் நம் கண்களை இமைக்க விடாமல் செய்திருக்கின்றன. 1990களில் நம் நாட்டில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகிறது. ISRO விஞ்ஞானி எஸ்.நம்பி நாராயணன் ஒரு கிரையோஜெனிக் நிபுணர், அவரை ஒரு உளவாளி என கைது செய்து, பல ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்தார். பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்

சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற சொல் திரையில் பளிச்சிடும்போதே, என்ன செய்தி என்பதை பார்க்க எல்லோரும் ஒரு நிமிடம் நின்று கவனித்து விட்டு தான் செல்கிறார்கள் என்பது வெளிப்படையானது. இதற்கு எந்த பகுதி, மொழி என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி உள்ளது. அதன்படி, ஜெய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படமும் இந்த சூழலுக்கு உட்பட்டது. அந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமுமே தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது.

ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு அதிக வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஹைலைட்டான ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதை படக்குழு உறுதிப்படுத்தினாலும், படத்தின் கதை என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போது, “இந்த படம் ஜீவன் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனை பற்றிய கதை. தொழில் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட வாழ்க்கை மிகச்சரியாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், அநீதிக்கு எதிராகத் தூண்டப்படும் அவரது நன்மை செய்யும் குணம் அவரை பிரச்சினையில் ஆழ்த்துகிறது. அவரை மிகவும் நேசிக்கும் அவரது மனைவி ஹரிபிரியா (பானு ஸ்ரீ) அவரை தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றுகிறார். ஆனால் அவரது மாறாத தன்மையால் அவரிடமிருந்து விலகுகிறார். அவரது சகாக்கள் மற்றும் நண்பர்கள் அவரது அன்னிய இயல்புக்காக அவரை கைவிடும்போது அவர் மேலும் தனிமையாகிறார். தனிமையால் சிதைந்துபோன அவர், “கடவுள்” தனக்கு வேறு சில திட்டங்களை வைத்திருப்பதை அறியாமல் எந்தவித நோக்கமுமின்றி அலைந்து திரிகிறார். விண்வெளியிலஇருந்து ஒரு விண்கல் பூமியை தாக்கும் போது, ஒரு சிறு துகள் அவரது உடலில் துளைக்கும்போது எல்லாம் மாறி விடுகிறது. அவரது உயிரணுக்களில் விவரிக்க முடியாத வேதியியல் எதிர்வினைகள் நடந்து, அவரது திசுக்கள் பிறழ்ந்து, மூளையில் நியூட்ரான்கள் வினைபுரிவதால், அவர் ஒரு வெல்ல முடியாத சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். இப்போது தென்னிந்தியாவை பேரழிவிற்கு உட்படுத்த ஒரு மோசமான திட்டத்தை கொண்டு வருவதன் மூலம், வளமான நிலங்களை அழித்து, அதன் மூலம் மக்களையும், வாழ்வாதாரங்களையும் அழிக்க திட்டமிடும் மிகவும் ஆபத்தான வில்லன்களான பூரி மற்றும் உராஜ் ஆகியோர் நுழைகிறார்கள். இந்த இரட்டையர்களை அரசாங்கத்தால் கூட தடுத்து நிறுத்த முடியாது, அவர்களை விட சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மனிதனாக இருந்து சூப்பர் ஹீரோவாக மாறிய ஜீவன், அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் என்பதாக கதை பயணிக்கிறது” என்றார்.

ஒரு திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே அதன் கதையை ஒரு இயக்குனர் வெளியே சொல்கிறார் என்று வியப்பாக இருக்கிறதா? அவரிடம் இது பற்றி கேட்டால், “இங்கு மறைக்க எதுவும் இல்லை, சூப்பர் ஹீரோ கதைகள் உருவான காலத்தில் இருந்தே இந்த வடிவத்தை அடிப்படையாக கொண்டவை தான். நாங்கள் படத்தை தொழில்நுட்ப ரீதியிலும், கதை சொல்லலிலும் சுவாரஸ்யாக சொல்ல திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் நினைத்தபடியே உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து எங்களுக்கு முழு ஆதரவுடன் செயல்படும் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் சாரையே எல்லா பாராட்டுக்களும் சேரும்” என்றார்.

முன்பே சொன்னபடி, பிரேக்கிங் நியூஸ் படத்தை ஒரு விசுவல் ட்ரீட்டாக கொடுக்கும் நோக்கத்தில் மொத்த படக்குழுவும் கடினமாக உழைத்து வருகிறது. வி.தினேஷ் குமார் மேற்பார்வையில் 450 சிஜி கலைஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். ஜானி லால் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை நாகர்கோவில் திருக்கடல் உதயம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

இயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை – இயக்குநர் சுசீந்திரன்

இயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை – இயக்குநர் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின் எனது பெயரைக் கூறியிருக்கிறார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்பு கொண்டு என்னை நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைக் கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. இருப்பினும், இயக்குநர் சொல்வதை செய்ய வேண்டுமென்ற மனநிலையோடு சென்றதால் நடித்து முடித்தேன்.

முதல் பாதி படம் பார்த்த என் குடும்பத்தார்கள் நடிப்பதில் நான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேனோ என்று நினைத்தார்கள். ஆனால், இரண்டாவது பாதி பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.

எனக்கோ, எதுவொன்றைச் செய்தாலும் அதில் உச்சத்திற்கு சென்ற பின்பு தான் அடுத்த வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அப்படி பார்த்தால் இயக்குநராக நான் இன்னும் உச்சம் தொடவில்லை. அதன்பின் தான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். அதற்கிடையில், இதுபோல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அது 10 நிமிட பாத்திரமாக இருந்தாலும் கூட.

‘கென்னடி கிளப்’, ‘ஏஞ்சலினா’ இரண்டில் எந்த படம் முதலில் வெளியாகும் என்று தெரியவில்லை. அதற்கு பின் ‘சாம்பியன்’ வெளியாகும். ‘ஏஞ்சலினா’ இக்கால இளைஞர்களுக்கான த்ரில்லர் படமாக இருக்கும். இந்த தலைமுறையினரிடம் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். குறிப்பாக பெண்கள் பயத்துடன் இருப்பதால் தான் தோல்வியடைகிறார்கள். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உலகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறேன். இதில் பொள்ளாச்சி சம்பவமும் இடம்பெறும்.

இரண்டாவது பாகம் எடுப்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது. ஏனென்றால், முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது பாகம் எழுதுவதால் அதே சாயலில் வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு எழுதும்போது அது சரியாக அமைவதில்லை. எழுதும் போதே இரண்டு பாகத்தையும் எழுதினால் தான் வெற்றிபெறும். அப்படி எழுதி வெற்றியடைந்த படம் தான் ‘பாகுபலி’.

‘வில் அம்பு’ படத்தின் இயக்குநர் என் நண்பர் என்பதால் அப்படத்தைத் தயாரித்தேன். மற்றபடி தயாரிக்கும் எண்ணமில்லை.

இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் கூறினார்.

இவ்வேளையில், பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் தன்னை நடிகராக களமிறக்கிய இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா வுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்து நன்றியை தெரிவித்தார், இயக்குநர் சுசீந்திரன்.

மாற்றுத் திறனாளியாக நடிக்கும் ரோஹினி

மாற்றுத் திறனாளியாக நடிக்கும் ரோஹினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் பட்டாளம் சுந்தரிபாய் பாத்திரத்தில் நடிக்க,அவருக்கு நேரெதிரான லதாம்மா என்ற காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அன்னை வேடத்திற்காக ரோகிணி அவர்களை அணுகினேன்.

அவரிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை அந்த லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்.அவருடனான உரையாடல்கள்,காட்சி விவரங்களைக் கூட அதன்பின் சைகை மொழியிலேயே என்னை சொல்லப் பணித்தார்…

கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருடன் பயிற்சிப் பட்டறையாக அது விரிவடைந்தது.

படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி புரியும் ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணை எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரோகிணி!

ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் காட்சி முடிந்தவுடன் கூட அவர் அதிலிருந்து சகஜ நிலைக்குத் திரும்ப பல மணி நேரம் பிடித்தது!

படத்தை திரையில் காணும்போதும் பார்வையாளர்கள் அதேவிதமான உணர்ச்சிக்கு ஆட்படுவார்கள் என்பது ஒரு இயக்குனராக என் அசைக்கமுடியாத நம்பிக்கை!

12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)தளபதியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அனைத்து தொகுதி தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள் தொகுதி நிர்வாகிகள், கிளை மன்ற இயக்கத் தலைவர்கள்,
உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து நேற்று செஞ்சி சாலையில் உள்ள பாரதிதாசன் திடலில் 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
அரிசி 1045 நபருக்கு தலா 5 கிலோ வீதமும், புடவை 945 பெண்களுக்கும், சர்க்கரை 445 நபருக்கு தலா 5 கிலோ வீதமும் ,பள்ளி மாணவர்களுக்கு 445 பேருக்கு ஸ்கூல் பேக்,
ஆடு ஒரு நபருக்கும் ,டிபன் கடை தள்ளுவண்டி ஒரு நபருக்கும், டிபன் பாக்ஸ் 545 நபருக்கும், சில்வர் பாத்திரம் 145 நபருக்கும் ,அயன்பாக்ஸ் 145 நபருக்கும்,
பிளாஸ்டிக் குடம் 145 நபருக்கும் ,விளையாட்டுப் பொருட்கள் கிரிக்கெட் செட் 3 குழுவிற்கும் ,வாலிபால் செட் 5 குழுவிற்கும் ,கேரம் போர்டு 5 நபருக்கும் ,
நோட்புக் 645 மாணவ மாணவிகளுக்கும் ,தனி நபர் காப்பீட்டு திட்டம் 145 நபருக்கும் ,தலைக்கவசம் 45 நபருக்கும் ,கடிகாரம் 245 நபருக்கும் ,பிளாஸ்டிக் பாக்ஸ் 545 நபருக்கும்,
புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தலா 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம், கல்வி உதவித்தொகை
தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க செயலாளர் சரவணன் மற்றும் புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க உறவுகள் முன்னிலையில் அகில இந்திய தளபதி
விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுவை மாநில தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தந்தை கேப்டன் விஜயகாந்தின் வழியில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் மகன் சண்முக பாண்டியன்

தந்தை கேப்டன் விஜயகாந்தின் வழியில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் மகன் சண்முக பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)தந்தை கேப்டன் விஜயகாந்தின் கவர்ந்திழுக்கும் அம்சங்களை கொண்ட அவரது மகன் சண்முக பாண்டியனையும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் அன்பை பொழிந்து வரவேற்கிறார்கள். உயரமான மற்றும் களையான இந்த நாயகன் தனது ஒவ்வொரு படத்திலும் மிகவும் தனித்துவமான மற்றும் இணையற்ற திறன்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். இந்த முறை, அவர் தனது தந்தை மிக வெற்றிகரமாக இருக்கும் ஒரு மண்டலத்திற்குள் நுழைந்திருக்கிறார்.

ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் ‘ப்ரொடக்ஷன் நம்பர் 1’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம், இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக வீரம், வேதாளம், மற்றும் விவேகம் படங்களில் பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்குனராக அறிமுகமாகிறார். போலீஸ் திரைப்படங்கள் என்றாலே எப்பொழுதும் இருக்கையின் விளிம்பில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லர் படங்களாக தான் அமைந்திருக்கின்றன. ஆனால் பூபாலன் வேறு விதமான ஒரு கதையை சொல்ல இருக்கிறார். அவர் கூறும்போது, “போலீஸ் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் துரத்தல், பிடித்தல் என்ற வகையிலேயே இருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் யதார்த்தமான விதத்தில் சித்தரித்திக்கிறோம். இது ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் கொண்ட வண்ண மயமான பொழுதுபோக்கு படம். கல்லூரி படிப்பை முடித்து, காவல் துறையில் பயிற்சி பெற்று, மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சேவை செய்யும் ஒரு இளைஞனின் கதை” என்றார்.

இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக ரோனிகா நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா, பவன், சாய் தீனா, அழகம் பெருமாள் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ஏ வெங்கடேஷ், விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பப்பு, யூடியூப் புகழ் பாரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவருடைய நகைச்சுவையான மற்றும் பெயர் சொல்லும் கதாபாத்திரங்கள் மூலம் நடிக்கும் எல்லா படங்களுக்கும் அதிர்ஷ்ட சின்னமாக விளங்கும் ‘முனிஷ்காந்த்’ இந்த படம் முழுக்க தோன்றும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, நாயகனின் தாயாக நடிக்கிறார். இந்த அம்மா, மகன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பு இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

அருண்ராஜ் (இசை), பி. ஜெயமோகன் (வசனம்), முரளி கிரிஷ் (ஒளிப்பதிவு), ரூபன் (படத்தொகுப்பு), தேவக் (கலை), மதன் கார்க்கி, அருண் பாரதி (பாடல்கள்), சதீஷ் (நடனம்), விக்கி (சண்டைப்பயிற்சி), டான் கார்த்திக் (ஆடைகள்), ஜி ஃபிராங்க்ளின் வில்லியம்ஸ் (நிர்வாக தயாரிப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் ‘ப்ரொடக்‌ஷன் நம்பர் 1’ ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலம் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மிக விரைவில் வெளியிடுவார்.

More Articles
Follows