நவ.10ல் தியேட்டர்கள் திறப்பு.; KKK-OMK ரீ-ரிலீஸ்.. தீபாவளி ரிலீஸ் இல்லை

OMK and KKKகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நாடெங்கிலும் பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தன.

மற்ற வணிகங்களுக்கு தளர்வுகளுடன் அனுமதியத்த தமிழக அரசு தியேட்டர்கள் திறக்க அனுமதியளிக்கவில்லை.

இதனையடுத்து ஒரு வழியாக நாளை நவம்பர் 10ந் தேத முதல் தியேட்டர்களை திறந்துக் கொள்ளலாம் என அனுமதியளித்துவிட்டது.

ஆனாலும் தியேட்டர்களில் புதுப்படங்களை திரையிடுவதற்கான விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் அதிபர்களே கட்ட வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இல்லாவிட்டால் புதிய படங்களை திரையிட மாட்டோம் எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்தனர்.

இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தீர்வு ஏற்படவில்லை.

இதனையடுத்து உங்கள் பிரச்சினையை பின்னர் வைத்துக் கொள்ளுங்கள். நாளை தியேட்டர்களை திறக்க வேண்டும் என அமைச்சர் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது.

ஆனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே ஹிட்டான ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட ஹிட் படங்கள் ரி ரிலீஸ் ஆகின்றன.

மேலும் ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

KKK and OMK to re release in this diwali

Overall Rating : Not available

Latest Post