ஜோடி இல்லையென்றாலும் ரம்யா நம்பீசனை விடாத விஜய் சேதுபதி

ஜோடி இல்லையென்றாலும் ரம்யா நம்பீசனை விடாத விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sethupathi movie stillsவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவண் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தன் அடுத்த படத்தில் நடிக்க துவங்கி விட்டார் விஜய்சேதுபதி.

இப்படத்திற்கு ‛சீதக்காதி’ என்று பெயரிட்டுள்ளனர்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கும் இப்படத்தில் ஒரு நாடக கலைஞராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடி இல்லை என இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

இருந்தபோதிலும், இதில் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் 5 பேர் நடிக்கவிருக்கிறார்களாம்.

பீட்சா, சேதுபதி ஆகிய படங்களில் விஜய்சேதுபதியுடன் ரம்யா நம்பீசன் இணைந்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் மௌலி ஆகியோர் நடிக்க உள்ளனர்.

தனுஷின் ‘பவர் பாண்டி’ இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சன்..?

தனுஷின் ‘பவர் பாண்டி’ இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Amitabh Bachchanதனுஷ் முதன்முறையாக இயக்கியுள்ள பவர் பாண்டி படம் அண்மையில் வெளியானது.

ரசிகர்களின் ஆதரவினால் வெற்றிப் பெற்ற இப்படத்தை விரைவில் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இதில் ராஜ்கிரண் கேரக்டரில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான மோகன் பாபு நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் பிறந்த நாளுக்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த 2 இயக்குனர்கள்

விக்ரம் பிறந்த நாளுக்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த 2 இயக்குனர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram stillsநடிகர் விக்ரம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். (விக்ரம் பிறந்தநாள் ஏப்ரல் 17)

இவரது ரசிகர்கள் ரத்ததானம் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகின்றனர்.

விக்ரம் தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் ஸ்கெட்ச் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எனவே, இதன் சூட்டிங்கில் விக்ரமுக்கு சர்ப்ரைஸ் கேக்கை கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.

மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படக்குழு சார்பிலும் விக்ரமுக்கு சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.

இப்படத்தின் இரண்டாவது டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசரின் நடுவே ஹாப்பி பர்த்டே சீயான் விக்ரம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Vikram birth day surprise news updates

கமலுக்கு முன்பே சரவணா ஸ்டோர் ஓனருடன் இணைவாரா நயன்தாரா?

கமலுக்கு முன்பே சரவணா ஸ்டோர் ஓனருடன் இணைவாரா நயன்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara teams up with Saravana Stores Owner for new projectசென்னை தி.நகருக்கே அடையாளம் சேர்க்கும் வகையில் பிரம்மாண்டமான உருவாகியுள்ள நிறுவனம் சரவணா ஸ்டோர்.

சென்னையில் மட்டும் இதன் கிளைகள் பல பகுதிகளில் உள்ளன.

இதன் உரிமையாளரான சரவணன் இந்த கடையின் விளம்பரங்களில் சமீபகாலமாக நடித்து வருகிறார்.

ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இவர் விளம்பரங்களில் நடித்ததை பலரும் விமர்சனம் செய்தனர்.

அண்மையில் கூட இவரும் நடன இயக்குனர் ராஜீ சுந்தரம் பங்குபெற்ற விளம்பர வீடியோக்களை டிவிக்களில் பார்த்து இருப்பீர்கள்.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த வந்துள்ளார் சரவணன்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த போது, ‘விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும், அதில் தன் ஜோடியாக நயன்தாரா இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை அவரே தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

பல முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்துவிட்டாலும், இன்னும் கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை.

இது உறுதியாகும்பட்சத்தில் கமலுக்கு முன்பே சரவணா ஸ்டோர் ஓனருடன் நயன்தாரா இணைந்துவிடுவார் போலவே.

Nayanthara teams up with Saravana Stores Owner for new project

சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் குறித்து அனிருத் அறிவிப்பு

சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் குறித்து அனிருத் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya anirudhசி3 படத்தை முடித்துவிட்டு எவரும் எதிர்பாரா வகையில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

தானா சேர்ந்த கூட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யா உடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

முதன்முறையாக சூர்யா படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள ஒரு பாடலை (சிங்கிள் ட்ராக்கை) விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதிலுள்ள பட்டாம் பூச்சிய உட்டா பாருடா எட்டாத தூரத்துல என்ற சில வரிகளை மட்டும் வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை அதிக ஆர்வத்துடன் காத்திருக்க வைத்து விட்டனர்.

Vignesh ShivN‏Verified account @VigneshShivN

Surprise for all The lovely fans out there !

ஒரு பட்டாம்பூச்சிய
உட்டா பாருடா
எட்டாத தூரத்துல

Thaana serndha Kootam single track updates

‘விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு எனக்கு தெரியும்…’ ஏஆர். ரஹ்மான்

‘விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு எனக்கு தெரியும்…’ ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman vijayஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் தளபதி 61 படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இதில் விஜய் உடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் நாயகிகளாக நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடைபெற்று வந்தது.

தற்போது மீண்டும் சென்னையில் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

பொதுவாகவே, நடனத்தில் விஜய் அசத்துவதால், அவரது படத்தின் பாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

இதில் விஜய் உடன் ஏஆர் ரஹ்மானும் கைகோர்த்துள்ளதால், எதிர்பார்ப்பு எகிறுயுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் குறித்து, ஏஆர் ரஹ்மானே தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளாராம். அதில்…

”விஜய்யுடன் நான் இணைந்தால் அவரது ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

ஒரு அருமையான மாஸான இன்ட்ரோ பாடல் ரெடியாகி விட்டது. மற்ற பாடல்களும் ரசிகர்களை கவரும்” என தெரிவித்துள்ளார்.

Music Composer AR Rahman about Vijay 61 movie songs

More Articles
Follows