தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்ன சின்ன வேடங்களில் வந்து செல்லும் துணை நடிகராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் விஜய்சேதுபதி.
கதையின் நாயகனாக இவரின் அறிமுக படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ இந்தியளவில் பேசப்பட்டது.
பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் முதல் சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் விஜய்சேதுபதியை வித்தியாச சேதுபதியாக மாற்றியது.
ஈகோ பார்க்காமல் இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை என பல தோற்றங்களில் நடித்து அனைவருக்கும் பிடித்தமான நடிகராகிவிட்டார்.
இப்போதும் கூட காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.
சினிமாவில் அவரின் அந்தஸ்து உயர உயர சம்பளமும் எகிறி வருகிறது.
இதுவரை 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கியவர் விஜய்சேதுபதி.
தற்போது ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் அதில் நாயகனாக நடிக்கும் இந்தி நடிகர் ஷாகித் கபூரை விட அதிக சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
ஹீரோவுக்கு சம்பளம் ரூ.40 கோடி என கூறப்படுகிறது.
இந்த தொடரில் விஜய்சேதுபதிக்கு வில்லன் வேடமாம். இந்த தொடரில் ராஷிகன்னா நாயகியாக நடிக்கிறார்.
Vijay Sethupathi gets more salary than hero of the film