கிறிஸ்மஸ்-பொங்கலுக்கு இஷ்டம் போல ரிலீஸ் பண்ணிங்குங்க…- விஷால்

vishalஇன்று டிசம்பர் 7ல் மூன்று தமிழ் படங்களும் அடுத்த வாரம் டிசம்பர் 14ஆம் தேதி இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே வெளியாகிறது.

ஆனால் டிசம்பர் 20 மற்றும் 21ல் தேதிகளில் முன்னணி நடிகர்களின் 5 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை தினம் என்பதாலும் அதற்கு அடுத்த வாரமே புத்தாண்டு (ஜனவரி 1) என்பதாலும் இந்த விடுமுறை தினங்களை குறி வைத்து 5 படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தனுஷின் மாரி2, ஜெயம் ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஜய்சேதுபதியின் சீதக்காதி, விஷ்னுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரேடியாக 5 படங்கள் மோதினால் தமிழகத்தில் இருக்கும் 1000 தியேட்டர்களில் ஒரு படத்திற்கு 200 தியேட்டர்கள் கூட கிடைக்காது.

இதனால் எந்த தயாரிப்பாளருக்கும் சரியான லாபம் கிடைக்காது என கோலிவுட் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினைக்கு தயாரிப்பாளர் சங்கமும் ஒன்று கூடி அந்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் பேசி பார்த்தது.

ஆனால் எந்தவொரு தயாரிப்பாளரும் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்…. வருகிற டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10ம் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்று (festival date) தான் வெளிவர வேண்டும் என்றும் அவ்வாறு வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்று முடிவெடுத்து அவர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதின் பேரில் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கண்ட கிருஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு தேதிகளில் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களது திரைப்படங்களை வெளியீட்டுகொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது.

மேற்படி, இந்த இரு தேதிகள் தவிர்த்த மற்ற நாட்களுக்கான படங்களின் வெளியீடு குறித்த முடிவுகள் வரும் வாரம் நடைபெறும் அனைத்து தயாரிப்பாளர்கள் கூட்டத்திற்குப் பின் முடிவு செய்யப்படும்.”

என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Overall Rating : Not available

Related News

நடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர்.…
...Read More
சீதக்காதி படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும்…
...Read More
ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில்…
...Read More

Latest Post