விஸ்வாசமான ட்ராக்கர்களை அண்டர்வேரோடு ஓட விட்ட *பேட்ட*

விஸ்வாசமான ட்ராக்கர்களை அண்டர்வேரோடு ஓட விட்ட *பேட்ட*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Petta team slams Ajiths Viswasam paid trackersகடந்த ஜனவரி 10ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்பில் 2 படங்கள் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.

இதில் ரஜினியின் பேட்ட வசூலை அஜித்தின் விஸ்வாசம் முந்தி விட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டது. இதனை சில ரசிகர்கள் மற்றும் ஊடங்கள் நம்பி செய்தியாக வெளியிட்டனர்.

இதனையடுத்து ‘பேட்ட’ தரப்பில் அப்படத்தின் பிஆர்ஓ ரியாஸ் அவர்கள் “தமிழ்நாட்டில் 600க்கும் அதிகமான தியேட்டர்கள் ‘பேட்ட’ படத்திற்கு உள்ளது.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழ்நாடு வினியோகஸ்தர் கேஜேஆர் ஸ்டுடியோஸ், “தமிழ்நாடு மக்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் உண்மை தெரியும். ஏன் நீங்கள் தேவையில்லாத போட்டியையும், சண்டையைம் உருவாக்குகிறீர்கள்.

தமிழ்நாடு பாக்ஸ்ஆபிஸ் வசூல் என்ன என்பதைப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்,” என கருத்து தெரிவித்தார்கள்.

இதனால் ஒரு சர்ச்சை உருவானது. இதனிடையில் விஸ்வாசமான சில ட்ராக்கர்கள் விஸ்வாசம் தான் முன்னிலை என வரிந்துக் கொண்டு ட்வீட் போட்டார்கள்.

இதனால் கடுப்பான ‘பேட்ட’ தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் தரப்பில், “டிராக்கர்ஸ் என்று அழைக்கப்படுபவர்களே, தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான ‘பேட்ட’ படத்தின் வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக எங்களுக்கே இன்னும் வராத நிலையில் நீங்கள் எப்படி உறுதியாக வசூல் விவரங்களைத் தெரிவிக்கிறீர்கள்.

ரசிகர்களே, இரண்டு படங்களுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள். தவறான பரப்புரையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்,” என டுவிட் செய்தனர்.

அதன் பின்னரே சில விஸ்வாசிகள் தங்கள் தவறை உணர்ந்துள்ளனர். ஆனாலும் ஒரு சிலர் தங்கள் தவறை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Rajinis Petta team slams Ajiths Viswasam paid trackers

ஒரு பக்கம் விஜய் படம்; மறுபக்கம் ஜடா படம்.. கலக்கும் கதிர்

ஒரு பக்கம் விஜய் படம்; மறுபக்கம் ஜடா படம்.. கலக்கும் கதிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kathirs next movie titled Jada He plays foot ball player roleபரியேறும் பெருமாள் மற்றும் சிகை படங்களை தொடர்ந்து மிகவும் கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்துள்ளார் கதிர்.

மேலும் அட்லி இயக்கவுள்ள தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணைகிறார்.

அடுத்து இவர் நடிக்கும் படம் ஜடா.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரோஷினி, மற்றும் முக்கிய வேடத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி, லிங்கேஷ் ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை “தி பொயட் ஸ்டுடியோ”தயாரிப்பில் எழுதி இயக்குபவர் குமரன் .

சாம் சி.எஸ். இசையில் வித்தியாசமான மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் கதிர் இந்த ஜடா படத்தில் கால்பந்தாட்ட வீரனாக நடிக்கிறார்.

Kathirs next movie titled Jada He plays foot ball player role

இணையத்தை கலக்கும் முனி 4 காஞ்சனா 3 பட மோசன் போஸ்டர்

இணையத்தை கலக்கும் முனி 4 காஞ்சனா 3 பட மோசன் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanchana 3 motion poster goes viral in Internetசன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் motion poster பொங்கலன்று வெளியானது.

வெளியான நேற்று ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இன்னும் சில நாட்களில் அது பத்து லட்சம் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தளவு வைரலாக காரணமான என் ரசிகர்கள் இணைய தள, பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி  என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் motion poster பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார் ராகவா லாரன்ஸ்.

Kanchana 3 motion poster goes viral in Internet

8 கோடியை நெருங்கி சாதனை படைக்கும் சார்லி சாப்ளின் 2

8 கோடியை நெருங்கி சாதனை படைக்கும் சார்லி சாப்ளின் 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chinna Machan song from Charlie Chaplin 2 creates record in Youtubeஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் “சார்லி சாப்ளின் 2”.

இந்த படத்தின் முதல் பாகமான சார்லிசாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார்.

முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ்,விவேக் பிரசன்னா, ரவிமரியா, T.சிவா, கிரேன் மனோகர், செந்தி,சாம்ஸ், காவ்யா, பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி சிதம்பரம்.

படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது…

என் படங்களில் காமெடியும் கமர்ஷியலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் இதெல்லாம் இருந்ததால் தான் படம் எல்லா மொழிகளிலும் அமோக வெற்றி பெற்றது.

16 வருடங்களுக்கு பிறகு அதே டைட்டிலில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

பிரபு தேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தும் வேடத்தில் நடிக்கிறார்.

நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார். பிரபு சார் டாக்டராகவும் அதா சர்மா மனோதத்துவ நிபுனராகவும் நடிக்கிறார்கள்.

படத்தில் இடம் பெற்றுள்ள கிராமப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் யூ டியூப்பில் 7.5 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் டப் மேஷ் உருவாக்கப் பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு கோவா கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. இம்மாதம் 25 ம் தேதி படம் வெளியாகிறது.

Chinna Machan song from Charlie Chaplin 2 creates record in Youtube

இனிமையான பயணத்திற்கு இனி Ryde தான் பெஸ்ட்; சினேகா புகழாரம்

இனிமையான பயணத்திற்கு இனி Ryde தான் பெஸ்ட்; சினேகா புகழாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sneha launches new cab service Ryde mobile Appநாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது புதிதாகி உருவாகியுள்ள நிறுவனம்தான் Ryde’. இதுவும் மற்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் போலத்தானே என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் மற்ற நிறுவனங்களைப் போல அல்லாமல், முதல் தலைமுறை தொழிலதிபர்கள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து துவங்கியிருக்கும் கார் சேவை நிறுவனம் தான் இந்த Ryde.

ஓட்டுனர்களுக்கு சிறந்த சலுகைகளை அளிப்பதன் மூலம் பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தை கொடுப்பதுதான் இந்த Ryde நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும். இந்த வாகன சேவைக்கான ‘Ryde App’ அறிமுக விழாவில் நடிகை சினேகா கலந்துகொண்டு ‘Ryde App’ஐ அறிமுகப்படுத்தி வைத்தார்

இந்த நிகழ்வில் பேசிய சினேகா, “இன்று கால் டாக்ஸி சேவைகள் புதிது புதிதாக வருகின்றன தான். ஆனால் பல ஓட்டுனர்களால் பயணிகள் பலரும் பலவிதமாக அவதிக்குள்ளாகி சங்கடப்பட்ட நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. எனது கணவர் பிரசன்னா கூட, இதுபோன்ற கால் டாக்ஸி சேவை தாமதத்தாலும் ஓட்டுனரின் அலட்சியத்தாலும் பாதிக்கப்பட்ட நிகழ்வும் கூட உண்டு.

இன்று பல கால் டாக்சி நிறுவனங்கள் தங்கள் சேவையை பயன்படுத்தும் பெண்களுக்கு அவர்களின் பயண பாதுகாப்பு குறித்து பெரிய அளவில் அக்கறை காட்டுவதில்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது.

இந்த பிரச்னைகளை எல்லாம் களையும் விதமாக தற்போது உருவாகியிருக்கும் Ryde நிறுவனம் தனது பணியை சிறப்பாக செய்யும் என நம்புகிறேன்” என்று கூறி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்

Ryde நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டர் பிரீத்தி பேசும்போது, “சென்னை போன்ற மாநகரங்களின் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு நாங்கள் இந்த ‘Ryde’ஐ துவங்கியுள்ளோம். இதுவரை பல கால் டாக்ஸி நிறுவனங்களும் தற்போது அச்சத்துடன் பார்க்கும் விஷயம்தான் பயண பதிவு ரத்து (booking cancellation).

இன்னும் விளக்கமாக சொன்னால் இதற்கு முன்பு சில கால் டாக்ஸி நிறுவனங்களில் வாகனங்களை பயன்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்த பணிகளில் பெரும்பாலோனோர், அவர்களின் சேவை தரம் சரியில்லாத காரணத்தினால் பயணம் துவங்குவதற்கு முன்பாகவோ, அல்லது பாதி வழியிலோ தங்களது பதிவை ரத்து செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது பெரும்பாலும் வாகன ஓட்டுனருக்கும், பயணிக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதம் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் தான் ஏற்படுகிறது.

இந்த குறைகளைக் களைந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வாக பயணிகளுக்கு நிம்மதியான வசதியான பயணத்தை ஏற்படுத்தி தரும் விதமாக உருவாகி இருக்கும் நிறுவனம்தான் Ryde’.

மற்ற நிறுவனங்களின் கால் டாக்ஸி சேவைகளால் பயணிகளுக்கு என்னென்ன அசௌகரியங்கள் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை துல்லியமாக அலசி, அவற்றிற்கு தீர்வு தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனம்தான் இந்த ‘Ryde’.

இதன் தாரக மந்திரமே “ஓட்டுனர்களை நாங்கள் மிகச் சிறப்பாக நடத்துகிறோம்.. ஓட்டுநர்கள் பயணிகளை மிகச்சிறப்பாக நடத்துவார்கள்” என்பதுதான்.

அந்தவிதத்தில் ஓட்டுனர்களின் மனநிலையை கணித்து அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக தங்களுக்கு கிடைக்கும் கமிஷனில் 90 சதவீதத்தை ஓட்டுனர்களுக்கு கொடுத்துவிட்டு 10 சதவீதத்தை மட்டுமே ‘Ryde’ பெற்றுக்கொள்கிறது (மற்ற நிறுவனங்களில் இது 75-25 என்கிற விகிதத்தில் தான் இருக்கிறது)

இதனால் ஓட்டுனர்கள் மனமகிழ்ச்சியுடன் தங்கள் வேலையில் ஈடுபடுவார்கள்.. அவர்களது தேவை சரியானபடி பூர்த்தியாவதால், வாடிக்கையாளர்களை மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும் நடத்துவதுடன், அவர்களது பயணம் சிறப்பாக அமையவும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை ‘Ryde’ உறுதியாக நம்புகிறது” என கூறினார்.

Sneha launches new cab service Ryde mobile App

Sneha launches new cab service Ryde mobile App

ப்ளாஸ்டிக்கு தமிழக அரசு தடை; மஞ்சப்பையுடன் வரும் தாதா

ப்ளாஸ்டிக்கு தமிழக அரசு தடை; மஞ்சப்பையுடன் வரும் தாதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DhaDha 87 team plans to distribute Yellow cloth bags to Publicகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”.

பாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக அனைத்து இல்லங்களிலும் தனது வரவை அறிவிக்கிறார் தாதா87.

தமிழக அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தாதா87 படக்குழுவினர் மக்களின் தினசரி உபயோகத்திற்காக மஞ்சப்பைகளை விநியோகிக்கவுள்ளனர்.

DhaDha 87 team plans to distribute Yellow cloth bags to Public

More Articles
Follows