முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்திற்கு இதான் தலைப்பா..? சூப்பர்ல..!

rajinikanth and AR Murugadossஇந்த 2018 வருடத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் 2.0 படம் ஆகிய இரண்டும் திரைக்கு வந்துவிட்டது.

அடுத்த வருடம் ஆரம்பத்தில் பொங்கல் தினத்தில் பேட்ட திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.

தன் அரசியல் வருகைக்கு ஏற்ப இதில் அரசியல் பன்ச் டயலாக்குகள் அதிகம் இருக்க வேண்டும் என ரஜினி விரும்பியதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் சமூகம் சார்ந்த விஷயங்களும் தற்போதைய நாட்டு நடப்புகளும் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறாராம்.

இந்நிலையில் இப்படத்திற்கு நாற்காலி என தலைப்பு வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

தற்போது ரஜினியின் அனுமதிக்காக இந்த தலைப்பு காத்திருக்கிறதாம்.

ஒருவேளை இது முடிவானால் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம்தான் என்பதில் ஐயமில்லை.

Overall Rating : Not available

Related News

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'பேட்ட' படத்தில்…
...Read More
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படத்தை…
...Read More
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘பேட்ட’ திரைப்படம்…
...Read More

Latest Post