2.0 படத்திற்கே சவாலாக அமையும் காலா; பெரும் லாபத்தில் தனுஷ்

2.0 படத்திற்கே சவாலாக அமையும் காலா; பெரும் லாபத்தில் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths latest movie Kaala trade updatesரஜினியின் கால்ஷீட் கிடைத்தால் அந்த தயாரிப்பாளர் பாக்கியசாலி என்ற ஒரு சொல் தமிழ் சினிமாவில் உண்டு.

அதற்கு காரணம் ரஜினியை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் லாபம் அடைந்துவிடலாம் என்பதே.

தற்போது ரஜினியை வைத்து 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ. 400 கோடியை நெருங்கிவிட்டது.

அண்மையில் இதன் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் ரூ.110 கோடிக்கு வாங்கியது.

இந்நிலையில் 2.0 படத்திற்கு போட்டியாக காலா படத்தின் பிசினஸ் கலக்கி வருகிறது.

காலா படத்தின் பட்ஜெட் ரூ. 80 கோடி என கூறப்படுகிறது.

இதன் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் ரூ. 100 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதன் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றது.

இது சுமார் ரூ. 75 கோடிக்கு விலை போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இவை தவிர காலா டிஜிட்டல் உரிமம், இன்னும் பிற உரிமைகள் என அதுவும் பல கோடிக்கு விற்பனையாகும் என சொல்லப்படுகிறது.

எனவே தயாரிப்பாளர் தனுஷ் அவர்கள் ரஜினியால் பெரும் லாபத்தை பார்த்துவிடுவார் என எதிர்பார்க்கலாம்.

மருமகனுக்கு மாமனாரால் லாபம் இருக்காதா பின்னே…

Rajinikanths latest movie Kaala trade updates

யோகி பி உடன் பணிபுரிந்தது ஒரு வரப்பிரசாதம்… : கணேஷ் சந்திரசேகரன்

யோகி பி உடன் பணிபுரிந்தது ஒரு வரப்பிரசாதம்… : கணேஷ் சந்திரசேகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yogi Bs New Combo With Ganny In Ezhumin Set To Rockஅன்பு மயில்சாமி நடித்துள்ள திரிபுரம், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள வேட்டைநாய் போன்ற படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்.

இவர் தற்போது விவேக், தேவயானி ஜோடியாக நடித்துள்ள எழுமின் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சிறுவர்களின் தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாக்கபட்டுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இதில் விவேகம், டிக் டிக் டிக், காலா போன்ற படங்களில் பாடல் பாடிய ராப் சிங்கர் யோகி பி, கணேஷ் சந்திரசேகரனின் இசையில் பா.விஜய் வரிகளில் எழுமின் படத்தில் எழுச்சிமிகு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் கூறும்போது…

‘எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது விவேகம், டிக் டிக் டிக், காலா போன்ற பெரிய படங்களில் பணிபுரிந்த யோகி பி அவர்கள் முதலில் புதிய இசையமைப்பாளர் படத்தில் பாட ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம்.

அதுவும் நான் அவரை அழைத்ததும் மலேசியாவில் இருந்து இங்கே வந்தது என் இசையில் பாடிக் கொடுத்துள்ளார்.

அது மட்டும் இல்லாது நான் அவருடன் பணிபுரிய முதலில் பயந்தேன். வேலை பார்க்க பார்க்க ஒரு குழந்தை போலவே நடந்து கொண்டார்.

என்னை போன்ற புதிய இசையமைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது அவருடன் பணிபுரிந்தது.” என்றார்.

Yogi Bs New Combo With Ganny In Ezhumin Set To Rock

ஜாகுவார் தங்கத்தின் மகன் நடிகர் விஜய ஜாகுவாருக்கு திருமணம்

ஜாகுவார் தங்கத்தின் மகன் நடிகர் விஜய ஜாகுவாருக்கு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stunt Master Jaguvar Thangam son marriageபிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் – சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும், வடபழனி ஆறுமுகம் – கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த மகள் ஏ.நிவேதாவிற்கும் 25-4-2018 காலை,வடபழனி – முருகன் கோவிலில் பெற்றோர், உற்றார், உறவினர் புடைசூழ வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

இத்திருமண விழாவில் கலைப்புலி எஸ்.தாணு ராஜ்கிரண், ராமராஜன், சீனு ராமசாமி, சமுத்திரகனி உள்ளிட்ட சினிமா பிரபலங்களுடன் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட அரசியல் மற்றும் நாடார் சங்க பிரமுகர்களும், மிகத் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வந்திருந்த அனைவரையும் மணமகனின் தந்தை ஜாகுவார் தங்கமும், சகோதரர் ஜெய் ஜாகுவாரும் வரவேற்று உபசரித்தனர்.

Stunt Master Jaguvar Thangam son marriage

Jaguar Thangam son Vijaya Jaguar wedding photos (7)

விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி கன்பார்ம் ஆச்சு

விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி கன்பார்ம் ஆச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaali new posterகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ரிதா முதலானோர் நடித்துள்ள படம் ‘காளி ’.

‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பாக பாத்திமா தயாரித்துள்ளார்.

இந்நிலையில்இந்த படத்தை மே 18-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.

அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இனி கோடை விடுமுறை கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது.

ரஜினியுடன் இணைகிறார் விஜய்சேதுபதி; அதிகாரப்பூர்வ தகவல்

ரஜினியுடன் இணைகிறார் விஜய்சேதுபதி; அதிகாரப்பூர்வ தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and vijay sethupathiஅமெரிக்காவில் சிகிச்சையை முடித்துவிட்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பட சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில்இ ப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்தது.

இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது.

இத்தகவலை சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஆனால் இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார இல்லை வேறு முக்கியமான கேரக்டரை ஏற்கிறாரா என்பது குறித்த எந்த விவரங்களையும் படக் குழுவினர் வெளியிடவில்லை!

இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினிகாந்த் உடன் இணைகிறார்
இசையமைப்பாளர் அனிருத்.

கமல் தயாரிக்கும் படத்தில் விக்ரம்-அக்சராஹாசன் கேரக்டர் அப்டேட்ஸ்

கமல் தயாரிக்கும் படத்தில் விக்ரம்-அக்சராஹாசன் கேரக்டர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and akshara haasanகமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பாடகியாவும் நடிகையாகவும் கலக்கி வருகிறார்.

2வது மகள் அக்சராஹாசன் உதவி இயக்குநராகவும் நடிகையாக தன் சினிமா பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இவர் ஹிந்தியில் அமிதாப்பச்சன் மற்றும் தனுஷ் உடன் இணைந்து ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் தமிழில் அஜித்தின் விவேகம் படத்தில் நடாஷா என்றொரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார்.

அதன்பிறகு கமலின் சபாஷ் நாயுடு படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

தற்போது தன் தந்தையின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இதில் நாயகனாக விக்ரம் நடிக்க, ராஜேஷ் எம் செல்வா இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் விக்ரம் மற்றும் அக்சராஹாசனின் வேடங்கள் எதிரும் புதிருமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம்.

இதன் படப்பிடிப்பு 2018 ஜூலையில் தொடங்குகிறது.

More Articles
Follows