தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு ரஜினி படங்களில் அவரது பெயர் வரும்போதே தியேட்டர் ஆர்ப்பரிக்கும்.
டைட்டில் கார்ட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற ஒவ்வொரு எழுத்துக்களாக வந்து சேர்வதற்குள் விசில் சத்தம் விண்ணை பிளக்கும்.
அதுபோல்தான் அவரது அறிமுக காட்சி அமைந்திருக்கும். பெரும்பாலும் பாடல் காட்சிகளில் அவர் தோன்றுவார்.
இந்த காட்சி படம் தொடங்கி 5 நிமிடங்களில் வந்துவிடும்.
ஆனால் தளபதி, படையப்பா மற்றும் குசேலன் ஆகிய படங்களில் ரஜினியின் அறிமுக காட்சி சற்று தாமதமாகத்தான் வரும்.
அதுபோல் விரைவில் வெளியாகவுள்ள கபாலி படத்திலும் ரஜினியின் அறிமுக காட்சி திரையில் வர கிட்டதட்ட 15 நிமிடங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இம்… அதுவரை தியேட்டர்களில் ஸ்கீரின் கிழியாமல் இருந்தால் ஓகேதான்.