மக்களுக்கு அவசியமான வேலைக்காரன்; சிவகார்த்திகேயனை பாராட்டிய ரஜினி

மக்களுக்கு அவசியமான வேலைக்காரன்; சிவகார்த்திகேயனை பாராட்டிய ரஜினி

Rajinikanth and sivakarthikeyanமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா, பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் வேலைக்காரன்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார் ஆர்.டி.ராஜா.

இப்படம் வெளியானது முதலே அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவரது பாராட்டியதை தயாரிப்பு நிர்வாகம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. அதில்…

வேலைக்காரன் படம் பார்த்து சிறந்த படம் என்றும், மக்களுக்குத் தேவையான,மக்களுக்கு அவசியமான மிகப் பெரிய பிரச்சினையைத் தொட்டிருக்கிறீர்கள் என்றும் மனதார பாராட்டிய நம் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

அருவி இயக்குனர்-நாயகியை பாராட்டி தங்க செயின் பரிசளித்த ரஜினி

அருவி இயக்குனர்-நாயகியை பாராட்டி தங்க செயின் பரிசளித்த ரஜினி

aruvi team with rajinikanthஅருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடித்த அருவி திரைப்படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் பாராட்டுக்களை தெரிவித்து இருந்தனர்.

அருவி பட இயக்குனர் மற்றும் நாயகி அதிதியை செல்போனில் ரஜினிகாந்த் பாராட்டி பேசியுள்ளார்.

அப்போது உங்களை சந்தித்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என தனது ஆசையை ரஜினியிடம் தெரிவித்துள்ளார் அதிதி.

அதன்படி அருவி படக்குழுவை நேரில் தன் இல்லத்திற்கு அழைத்துள்ளார் ரஜினி.

அப்போது இயக்குநர் அருண் பிரபுவுக்கும், அதிதி பாலனுக்கும் தங்க செயின்களை பரிசாக அளித்துள்ளார்.

இது படக்குழுவுக்கு அருவி போன்ற அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளதாம்.

Rajini gifted Gold Chain to Aruvi movie Director and heroine

எம்ஜிஆர் படத்தலைப்பில் சண்முகபாண்டியன் நடிப்பது பெருமை: பிரேமலதா விஜயகாந்த்

எம்ஜிஆர் படத்தலைப்பில் சண்முகபாண்டியன் நடிப்பது பெருமை: பிரேமலதா விஜயகாந்த்

Madura Veeran audio launch photos (13)மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கேப்டன் விஜயகாந்த், திருமதி. பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், இயக்குநர் வெங்கட்பிரபு, படத்தின் தயாரிப்பாளர் சுப்புநாராயணன், இயக்குநர் / ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா, கவிஞர் யுகபாரதி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளர் பிரவீன் K.L, நடிகர் சமுத்திரகனி, எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி, Stunner ஷாம், நடன இயக்குநர் சுரேஷ், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் / நடிகர் தேனப்பன், நடிகர் மாரிமுத்து, நடிகர் தம்பிராமையா, நாயகி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேப்டன் விஜயகாந்த் பேசியதாவது :-

வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய மகன் சண்முகபாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் நிறைய பேச விரும்பவில்லை. என் மகனை பற்றி யாராவது குறை கூறியிருந்தால் அதற்கு நான் விளக்கம் கொடுத்து பேசி இருக்கலாம்.

ஆனால் எல்லோரும் சண்முக பாண்டியன் உயரமாக உள்ளார் அவரிடம் நாங்கள் அனார்ந்து பார்த்து தான் பேசவேண்டி இருந்தது என்று தான் சொல்கிறார்கள். என்னுடைய மனைவி படத்தின் தயாரிப்பாளர் சுப்பு அவர்களை பற்றி நிறைய கூறியுள்ளார்.

இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உருவாக்கியுள்ள இப்படத்துக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார் கேப்டன் விஜயகாந்த்.

பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது…-

மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடை தான் நான் முதல் முறையாக பேசும் சினிமா மேடை. நான் தான் மதுரவீரன் படத்தின் கதையை முதலில் இயக்குநர் முத்தையாவிடம் கேட்டேன்.

எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. கதையை பற்றி நான் கேப்டனிடம் கூறியதும் இந்த கதையை உடனடியாக கேட்க வேண்டும் என்று கூறினார். அதற்கு காரணம் படத்தில் ஜல்லிகட்டை பற்றி கதை உள்ளது என்பதால் தான். ஜல்லிக்கட்டு நம்முடைய கலாச்சாரம்.

இந்த காலத்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக தான் முதன் முறையாக ஒன்றாக கைகோர்த்து போராடினார்கள். அதனால் இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறினார் கேப்டன். கேப்டன் விஜயகாந்த் “ மதுரசூரன் “ எனும் படத்தில் நடித்தார். மதுரவீரன் புரட்சிதலைவர் MGR அவர்களின் டைட்டில். புரட்சிதலைவர் MGR அவர்களின் டைட்டிலில் என்னுடைய மகன் நடிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

மதுரவீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. கேட்டவுடன் மெய்சிலிர்க்கும் வகையில் அனைத்து பாடல்களும் அமைந்துள்ளது தனி சிறப்பு என்றார் திருமதி. பிரேமலதாவிஜயகாந்த்.

இயக்குநர் P.G. முத்தையா

மதுரவீரன் திரைப்படத்தில் என்னுடன் வேலை பார்த்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பும் முக்கியமானது. அவர்களின் உழைப்பால் தான் படம் நன்றாக வந்துள்ளது.

நல்ல கதை ஒரு படத்தை நன்றாக கொண்டுவரும் என்பது எனது நம்பிக்கை. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில், கவிஞர் யுகபாரதி எழுத்தில் உருவான என்ன நடக்குது பாடல் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. நான் கவிஞரிடம் பட்டுகோட்டையார் பாடல் போன்ற ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டேன்.

அவரும் நான் கேட்டது போல் அருமையான ஒரு பாடலை கொடுத்துள்ளார். நான் நினைத்தது போல் என்னுடைய நண்பர்கள் அனைவரும் என்ன நடக்குது நாட்டுல பாடலை பட்டுகோட்டையார் பாடல் போல் உள்ளது என்று கூறினார்கள் என்றார் இயக்குநர் P.G. முத்தையா.

L.k. சுதீஷ்…

மதுரவீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற “ என்ன நடக்குது நாட்டுல “ பாடலை RK இடைதேர்தல் கூட்டத்தில் தி.மூ.க, ஆ.தி.மூ.க என்று அனைத்து கட்சிகார்களும் பிரச்சாரத்துக்காக உபயோகப்படுத்தினார்கள்.

இப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதுக்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி தான். அவருடைய இசையும் யுகபாரதியின் வரிகளும் பாடலை சிறப்பாக கொண்டுவந்துள்ளது என்றார் L.K. சுதீஷ்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பேசியது :-

மதுரவீரன் படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் இணையத்தில் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. படத்தின் முதல் பாதி பின்னணி இசை கோர்பு வேலை முடிந்துவிட்டது.

இரண்டாம் பாதி பின்னணி இசை கோர்ப்பு வேலையும் இதை போலவே விரைவில் முடியும் என்று நம்புகிறேன். சண்முகபாண்டியன் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு பிறகு அவருடைய மார்க்கெட் பெரியதாகும் என்று நான் நம்புகிறேன் என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.

Madura Veeran audio launch Preamlatha Vijaykanth speech

Madura Veeran audio launch photos (31)

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் மீண்டும் அருள்பதி வெற்றி; ஞானவேல்ராஜா தோல்வி

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் மீண்டும் அருள்பதி வெற்றி; ஞானவேல்ராஜா தோல்வி

Arulpathy and KE Gnanavel rajaநடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களை அடுத்து, தமிழ் திரையுலகம் பரபரப்பாக எதிர்பார்த்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தல் 24.12.17 அன்று நடந்தது.

இந்தத் தேர்தலில் வாக்குரிமை உள்ள 524 பேரில் 469 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

தற்போதைய தலைவர் அருள்பதி தலைவராக மீண்டும் போட்டியிட்டார். அருள்பதி 248 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஞானவேல்ராஜா 194 வாக்குகளும் பெற்றனர்.

இணைச் செயலாளர் பொறுப்பைத் தவிர்த்து அனைத்து பொறுப்புக்களுக்கும் அருள்பதி தரப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட மெட்ரோ ஜெயக்குமார் 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நேசமணி 142 வாக்குகளும், கலைப்புலி சேகரன் 140 வாக்குகளும் பெற்றனர்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி சீனிவாசலு 216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கே ராஜன் 199 வாக்குகள் பெற்றார்.

இணைச் செயலரளர் பதவிக்கு ஸ்ரீ ராம் 212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜகோபாலன் 173 வாக்குகள் பெற்றார்.

பொருளாளர் பொறுப்புக்கு பாபுராவ் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்ட சித்திக் 142 வாக்குகள் பெற்றார்.

ஹிட்லருக்கு பட்லராக கூட லாயக்கில்லாதவர் விஷால்… : டிஆர் ஆவேசம்

ஹிட்லருக்கு பட்லராக கூட லாயக்கில்லாதவர் விஷால்… : டிஆர் ஆவேசம்

T Rajender and Vishalவிஷால் டி ராஜேந்தர், விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் தலைவர் டி ஏ அருள்பதி, தலைவர் துணைத் தலைவர் செயலாளர் பதவி

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி ஏ அருள்பதிக்கு கலைப்புலி தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டிஏ அருள்பதி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.

தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு சீனிவாசலு, செயலாளர் பதவிக்கு ஜெயக்குமார், இணைச் செயலாளர் பதவிக்கு டி ராஜகோபாலன், பொருளாளர் பதவிக்கு பாபுராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 36 பேர் நிற்கின்றனர்.

இந்த அணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளர் கலைப்புலி தாணு, டி சிவா, டி ராஜேந்தர், மதுரை அன்புசெழியன் உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள்.

இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டி. ராஜேந்தர் பேசியதாவது…

எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று பெரும் முதல்வர்களுடன் அரசியல் செய்த நான், இப்போது ஞானவேல் ராஜா போன்றவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியுள்ளதே என்பதை நினைக்கும்போது அவமானமாக உள்ளது.

ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவிக்கு வந்தார். ஆனால் பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்டார். நான் ஒரு விநியோகஸ்தன். ஆரம்ப காலத்திலிருந்து எத்தனையோ படங்களை விநியோகித்திருக்கிறேன்.

ரஜினிகாந்தின் ராஜாதிராஜா கூட நான் விநியோகித்த படம்தான். ஒரு தயாரிப்பாளனாக எத்தனை வெற்றிப் படங்களைத் தந்தவன் என்பதை புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் இந்த ஞானவேல் ராஜாவும் விஷாலும் என் படப் பிரச்சினைக்கு எத்தனையோ முறை போன் போட்டபோதும் ஒரு முறை கூட போனை எடுக்கவே இல்லை.

விஷாலும் ஞானவேல் ராஜாவும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொறுப்புக்கு வந்தார்கள். ஆனால் சங்கத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொதுக்குழுவைக்கூட ஒழுங்காக நடத்தத் துப்பில்லாதவர்கள்.

விஷால் என்ன லாடு லபக்கு தாஸா? அவர் என்ன ஹிட்லரா?

ஹிட்லருக்கு பட்லராக இருக்கக்கூட லாயக்கில்லாதவர். ஒரு தமிழனாக நான் வெட்கபடுகிறேன். என்னை திட்டமிட்டு அவமதித்தார்கள் இந்த விஷாலும் ஞானவேல் ராஜாவும். நான் பார்க்காத அரசியல்வாதியா, தயாரிப்பாளர்களா… ஆனால் எனக்கே இந்தக் கதி என்றால், மற்ற உறுப்பினர்கள் நிலை என்ன?

எனவே விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் எக்காரணத்தைக் கொண்டும் இந்த ஞானவேல் ராஜா கோஷ்டி வரக்கூடாது,” என்றார்.

இயக்குநர் சேரன்

தயாரிப்பாளர் சங்கத்தை சீரழித்தது போதாது என்று இப்போது விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார் ஞானவேல்ராஜா. தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன சாதித்தார் என்று இப்போது விநியோகஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார்? அருள்பதி நியாயமனவர், கண்ணியமானவர், நேர்மையானவர். அவர் விநியோகஸ்தர் சங்கத் தலைவராகத் தொடர்வதுதான் நல்லது.

சுரேஷ் காமாட்சி

நடிகர் சங்கத்தைக் கைப்பற்றுவோம் என்றார்கள். இல்லாத பழியையெல்லாம் அண்ணன் ராதாரவி மீது சுமத்தி இவர்கள் சங்கத்தைக் கைப்பற்றினார்கள். என்ன சாதித்தார்கள்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட் படி ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்றினார்கள். அங்கு கஷ்டப்பு சேர்த்து வைத்த பணத்தை கோடிக் கணக்கில் கையாடல் செய்துவிட்டு, பொதுக் குழுவில் பதில் சொல்லத் திராணியில்லாமல் தேசிய கீதம் பாடிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்.

இதுதான் விஷால், ஞானவேல் ராஜா குரூப்பின் சாதனை. இது விநியோகஸ்தர் சங்கத்திலும் தொடர அனுமதிக்காதீர்கள். அருள்பதி அணியை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தங்க காசு கொடுத்து ஓட்டு கேட்கிறார் ஞானவேல்ராஜா… : எஸ்விசேகர்

தங்க காசு கொடுத்து ஓட்டு கேட்கிறார் ஞானவேல்ராஜா… : எஸ்விசேகர்

S Ve Shekar and Gnanavel rajaஎஸ்வி சேகர் விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் தலைவர் பதவி, டிஏ அருள்பதி, முன்னணி தயாரிப்பாளர்கள் அருள்பதிக்கு ஆதரவு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி ஏ அருள்பதிக்கு கலைப்புலி தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டிஏ அருள்பதி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.

தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு சீனிவாசலு, செயலாளர் பதவிக்கு ஜெயக்குமார், இணைச் செயலாளர் பதவிக்கு டி ராஜகோபாலன், பொருளாளர் பதவிக்கு பாபுராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 36 பேர் நிற்கின்றனர்.

இந்த அணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளர் கலைப்புலி தாணு, டி சிவா, டி ராஜேந்தர், மதுரை அன்புசெழியன் உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள்.

கலைப்புலி தாணு

இதுகுறித்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கலைப்புலி தாணு பேசுகையில், “அருள்பதி நியாயமானவர். நீண்ட காலம் சங்கத்தை திறம்பட நடத்தியுள்ளார்.

விநியோகஸ்தர்கள் பிரச்சினை புரிந்தவர். அவர் தலைவராக வருவதுதான் நியாயம்.

அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவர். அதை விட்டுவிட்டு இந்த சங்கத்துக்கு வருகிறார் என்றால் அதில் நிச்சயம் சுயநலமும் உள்நோக்கமும் உள்ளது.

அவர் நிறைய படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதை அவர் கவனிக்கட்டும். நான் விநியோகஸ்தராக வாழ்க்கையை ஆரம்பித்தவன். இந்த சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவன். இந்த சங்கத்துக்கு அருள்பதி தலைவராகத் தொடர்வதுதான் திரைத் துறைக்கு நல்லது,” என்றார்.

எஸ்வி சேகர்

ஆர்கே நகர் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்பது பற்றிப் பேசும் தகுதியே நமக்கெல்லாம் இல்லை. அதுவாவது அரசியல் தேர்தல்.

ஆனால் இங்கே நடக்கும் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தலில் பணமும் தங்க காசும் தருகிறார்கள் எதிர் அணியினர். இவ்வளவு செலவு செய்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த பதவியில் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார்கள். இந்தத் தேர்தலில் அருள்பதிதான் வெற்றிப் பெற வேண்டும். அப்போதுதான் இந்த அமைப்பு சரியான பாதையில் செல்லும். ஞானவேல் ராஜா போன்றவர்களை அனுமதிக்காதீர்கள்.

More Articles
Follows