நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படைப்பு – சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ரிவ்யு

நட்சத்திரம் நகர்கிறது ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படைப்பு – சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ரிவ்யு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாடகக் காதல் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் காதலை மையமாக வைத்து ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்த படங்களில் சிறந்த படம் என அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார் .

இதனால் உற்சாகம் அடைந்த இயக்குனர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் இச்செய்தியை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம் (3.25).; ரஞ்சித்தின் காதல் (ஜா)தீ

ஜெயம் ரவி – கீர்த்தியின் ‘சைரன்’ படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை

ஜெயம் ரவி – கீர்த்தியின் ‘சைரன்’ படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படங்கள் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘அகிலன்’

இதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ரவி நடிக்கும் படத்திற்கு ‘JR 30’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளனர். நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஸ்வாசம் பட கதாசிரியரும் அறிமுக இயக்குனருமான ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘SIREN’ சைரன் என தலைப்பு வைத்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

சைரன் பட டைட்டில் மோசன் போஸ்டரை கடந்த வாரம் வெளியிட்டனர்.

இந்த நிலையில் மற்றொரு நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபமா பரமேஸ்வரன்

Anupama Parameswaran is on board for Jayam Ravi’s Siren

நகைச்சுவையுடன் ‘காபி வித் காதல்’..; வெற்றிச்சுவையுடன் விநியோகம் வித் உதயநிதி

நகைச்சுவையுடன் ‘காபி வித் காதல்’..; வெற்றிச்சுவையுடன் விநியோகம் வித் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமான காதல் மற்றும் காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக உருவான படம் ‘காபி வித் காதல்’.

குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

நாலு ஹீரோயின்ஸ் மூணு ஹீரோஸ் இணைந்து ருசிக்கும் ‘காபி வித் காதல்’

இந்த காதல் பட்டாளத்துடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளும் இணைந்துள்ளார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் தமிழக திரையங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

அண்மைக்காலமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியையும், வசூல் சாதனையையும் படைத்து வருவதை நாம் காண்கிறோம்.

இந்த வரிசையில் ‘காபி வித் காதல்’ திரைப்படமும் வெற்றி படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுந்தர்.சி படத்துடன் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்திருப்பதால் ‘காபி வித் காதல்’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் : ரூ.52.75 லட்சம்.; நேரில் பெற்றவர்கள் யார்.? பல விருகளை பெற்ற கலைஞர்கள் படங்கள் விவரம்..

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் : ரூ.52.75 லட்சம்.; நேரில் பெற்றவர்கள் யார்.? பல விருகளை பெற்ற கலைஞர்கள் படங்கள் விவரம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

இவ்விழாவில் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதேபோல் சின்னத்திரை விருதுகள் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்கள், சிறந்த கதாநாயகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 80 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008-09-ம் கல்வியாண்டு முதல் 2013-14-ம் கல்வியாண்டு வரை பயின்றவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களின் மூலம் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், படம் பதனிடுபவர்கள் என 30 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

மொத்தம் 314 பேருக்கு ரூ.52.75 லட்சம் மதிப்புள்ள காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விருது பெற்றவர்கள் யார்? யார்?

ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் நாசர், பொன்வண்ணன், பாடகர் ஹரிச்சரண் உள்ளிட்டோர் பெற்றனர்.

மேலும் களவாணி, மைனா, கும்கி உள்ளிட்ட படங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றன.

சிறந்த பாடலாசிரியருக்காக மூன்று விருதுகள் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டன. அவரின் சார்பில், அவரின் மகனும், மகளும் மேடையில் பெற்றனர்.

நடிகர் – நடிகைகள் & கலைஞர்கள்…

விக்ரம், அஞ்சலி, ஜீவா, ஆர்யா, பாண்டிராஜ், பாபி சிம்ஹா, ராகவன், ஹெச்.வினோத், ஐஸ்வர்யா ராஜேஷ், கரண், சித்தார்த், தம்பி ராமையா, சமுத்திரகனி, மாஸ்டர் கிஷோர், ஸ்ரீராம், ‛ஆடுகளம்’ நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், சங்கீதா, ஆர்த்தி கணேஷ், லிங்குசாமி, எஸ்.ஆர்.பிரபாகரன், சுகுமார், சரத்பாபு, மஹதி, விக்ரம் பிரபு, வசந்தபாலன், பிரபு சாலமன், ராம், நாசர், இமான், ஸ்வேதா மோகன், விடியல் ராஜ், ஜெயபிரகாஷ், எஸ்.பி.பி.சரண், லியோ ஜான்பால், இனியா, களவாணி எஸ்.திருமுருகன், பொன்வண்ணன், சற்குணம், பாடகர் கார்த்திக், தேவதர்ஷினி, ராதா மோகன், அனல் அரசு, சூப்பர் சுப்பராயன், ஷோபி, ஜி.ஆர்.கே.கிரண், செல்வி சாதனா, ஜே.சதீஷ் குமார், ஹரிச்சரண், உத்ரா உன்னிக்கிருஷ்ணன், சந்தானம்(கலை இயக்குனர்), காயத்ரி ரகுராம், மாஸ்டர்ஸ் ரமேஷ், விக்னேஷ்(காக்க முட்டை) நீரவ்ஷா, ஸ்டன்ட் சில்வா உள்ளிட்ட கலைஞர்கள் நேரில் வந்து விருதுகளை பெற்றனர்.

Tamil Nadu Government Film Awards (2009-2014) : Award winning artists movies  details

OFFICIAL ‘பொன்னியின் செல்வன்’ இசை விழாவில் கமல்ஹாசன் & ரஜினிகாந்த்

OFFICIAL ‘பொன்னியின் செல்வன்’ இசை விழாவில் கமல்ஹாசன் & ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் ‛பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் பிரம்மாண்டமான திரைப்படமாக இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாய் உருவாகி உள்ளது.

“பொன்னியின் செல்வன் பாகம்-1” செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் விக்ரம், வந்தியதேவனாக நடிக்கும் கார்த்தி, அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவி, நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய், குந்தவையாக நடிக்கும் திரிஷா ஆகியோரின் கேரக்டர் லுக் போஸ்டர்கள் வெளியானது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் கொடுக்க இதான் காரணமா?

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் கொடுக்க இதான் காரணமா?

ஓரிரு தினங்களில்… பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமியும், வானதியாக சோபிதா துலிபாலாவும் நடித்துள்ளனர்.

சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், செம்பியான் மாதேவியாக ஜெயசித்ரா, மதுராந்தனாக ரகுமான் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு கேரக்டர் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் “பொன்னியின் செல்வன் பாகம்-1” படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, வரும் செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்திய திரையுலகின் இரு பெரும் தூண்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் முன்னிலையில், இசை மேதை திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் “பொன்னியின் செல்வன் பாகம்-1” திரைப்படத்தின் பாடல்களை தனது இசைக்குழுவோடு சேர்ந்து அரங்கேற்றுகிறார்.

இசை நிகழ்ச்சியோடு இணைந்து நம் திரையுலகின் மூத்த கலைஞர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், விநியோகஸ்தர்களும், நம் படத்தின் நட்சத்திரங்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் தமது நல்வாழ்த்துக்களை வழங்குவார்கள் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth and Kamal Haasna to attend Ponniyin Selvan audio launch

மணி ரத்னத்துக்காக ஒன்றிணையும் ரஜினி கமல்

மணி ரத்னத்துக்காக ஒன்றிணையும் ரஜினி கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி மற்றும் கமல் தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நடிகர்கள்.

அவர்கள் தங்களின் படங்களில் பிஸியாக இருப்பதால் அவர்களை ஒன்றாகக் காண்பது அரிது, ஆனால் இருவரும் நாளை நடைபெறும் ‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒன்றாகத் தோன்றுகிறார்கள்.

இதற்காக சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட மேடை தயாராகி வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை வெளியீட்டு விழாவில் பாடல்களை நேரடியாகப் பாட இருக்கிறார்.

More Articles
Follows