தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பா ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.
யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ப்ரொடக்சன்ஸ் சார்பாக ரஞ்சித் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
காதலின் அரசியலை பேசும் படமாக இதை உருவாக்கியுள்ளார்.
இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திர கூட்டம் இணைந்துள்ளது.
இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளுக்காக கேரளா மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கு பட குழுவினர் சென்று வருகின்றனர்.
நேற்றைய தினம், மும்பையில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் முக்கிய பிரமுகர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குனரான அனுராக் இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பா.இரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.
இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Bollywood Director Anurag appreciates Ranjith team at Mumbai